30.
|
என்று
கூற விறைஞ்சி யியம்புவார்
|
|
|
வென்ற
பேரொளி யார்செய் விழுத்தவம்
நன்று கேட்க விரும்பு நசையினோம்
இன்றெ மக்குரை செய்தரு ளென்றலும். |
20 |
(இ-ள்.)
என்று கூற - மேலே சொன்னவாறு உபமன்னிய முனிவர் சொல்ல; இறைஞ்சி இயம்புவார் - மாதவர்கள்
வணங்கி
மேலே சொல்வாராயினர்; வென்ற ... அருள்
- வெற்றி கொண்ட
பெருமையுடைய ஒளியுடையாராகிய இவர்செய்த தூய தவத்தின்
வரலாற்றை நன்கு கேட்க விரும்புகின்ற ஆசையுடையோம்.
இப்பொழுதே தேவரீர் அதை எங்களுக்குச் சொல்லி யருளவேண்டும்;
என்றலும் - என்று விண்ணப்பித்தனர். கூறக் கேட்டலும்;
(வி-ரை.) வென்ற பேரொளி
- (1) ஆயிரஞாயிறு பொங்கு பேரொளி என முன்னர்க் குறிக்கப் பெற்றமையின் எல்லா
ஒளிப்
பொருள்களையும் வென்ற என்பது; (2) சுத்த யோகிகளாகிய எமது
உள்ளத்தையும் கவர்ந்து அதிசயிக்கச் செய்து எமது ஒளியையும்
வென்றது என்பதுமாம். எம்மையும் வென்ற என்க. ஐம்புலன்களை
வென்ற முனிவர்கள் ஒளியுடன் விளங்குவர் என்பது பற்றி, "ஐந்துமா
றடக்கி யுள்ளோர் அரும்பெருஞ் சோதி யாலும்" எனப்
பின்னர்க்கூறுவது காண்க. (3) சம்புவையன்றி வணங்காத
தேவரீரையும் வணங்கச் செய்து வென்ற ஒளி என்றலும் ஒன்று.
விழுத்தவம்
- இந்தச் சரிதத்துக்கும், பேரொளிக்கும் மூலகாரணமாகிய தூய தவம்.
தம்பிரானைத் தன்னுள்ளந் தழுவுதலும், அதனால் உபமன்னிய
முனிவரால் வணங்கப்படும் தகுதியும் பெருந்தவத்தாலன்றி ஆகாமையின் செய்விழுத்தவம்
என உய்த்துணர்ந்து வினவினார்.
இன்று
- பின்னே என்பதின்றிக் கேட்கவிருப்பம் உண்டாயின
இப்பொழுதே உரை செய்தருள்க என்றபடி. தாமதமாயின் ஆசையும் பிறவும் ஒழியலுமாகும்; ஆதலின்
இன்று உரை செய் என்றார்.
ஒன்றும் இன்றே செய்யவும் வேண்டும் என்றார் பிறரும். 20
|