307. |
அரந்தை
செய்வார்க் கழுங்கித்தம் மாருயிர்
|
|
|
வரன்கை
தீண்ட மலர்குல மாதர்போற்
பரந்த வெம்பகற்
கொல்கிப் பனிமதிக் கரங்க டீண்ட வலர்ந்த கயிரவம்.
|
161 |
(இ-ள்.)அரந்தை
செய்வார்க்கு அழுங்கி - துன்பம் செய்யும்
புல்லர்க்கு வருந்தி; தம்.......போல் - தமது உயிர்க்காதலர் தம்மைத்
தொட்டபோது மலர்ச்சி யடையும் குல நலம் படைத்த
பெண்கள்போல்; பரந்த.......ஒல்கி - எங்கும் பரந்து வெம்மை செய்யும்
சூரியன் கதிர்க் கைகள் படும்போது மலராது வாடிக்குவிந்து;
பனி........கயிரவம் - குளிர்ந்த சந்திரனுடைய கதிர் கைகள்
தீண்டியபோது ஆம்பல்கள் மலர்ந்தன.
(வி-ரை.)
பின்மாலையும் - முன்னிலாவும் முறையே கூறிய
ஆசிரியர் அவற்றின் பின் நிகழ்வனவாகிய ஆம்பல் மலர்தலும் நிலா
முதிர்தலும் அம்முறையே கூறுகின்றார்.
கயிரவம்
- ஆம்பல் மலர்கள். இவை பகலிற் குவிந்து இரவில்
மலரும் இயல்பு கொண்ட பூக்கள். மேற்பாட்டிற் கண்டவாறு, அன்று
இரவு வந்து, நிலா முகிழ்க்கவே ஆம்பல் அலர்ந்ததை இவ்வாறு
குலமாதரின் உவமான முகத்தால் ஆசிரியர் அழகுற வருணித்தல்
காணத்தக்கது. செய்வார்க்கு என்ற இடத்துச் செய்வார் கை தீண்டற்கு
என்றும், பகற்கு என்ற இடத்துப் பகலவன் கரங்கள் தீண்ட என்றும்
இடநோக்கி வருவித்துரைத்துக் கொள்க.
செய்வார்க்கு
- செய்வார் செய்யும் அரந்தைகட்கு என்க.
வரன்
-
தன்னாலே வரிக்கப் பெற்றவன் - மணமகன்.
குலமாதர்
-
குலம் என்பது இயல்பு குறித்து நின்றது.
பகற்கு
-
பகலைச் செய்யும் சூரியன் கதிர் தீண்டலுக்கு
ஆகுபெயர். 161
|