309. |
வாவி
புள்ளொலி மாறிய மாலையில்
|
|
|
நாவ
லூரரு நங்கை பரவையாம்
பாவை தந்த படர்பெருங்
காதலு
மாவி சூழ்ந்த தனிமையு மாயினார்.
|
163 |
(இ-ள்.)
வாவி.........மாலையில் - பொய்கைகளில்
(பகல்
போக்கிய புள்ளினம் சென்று மாலையிற் சேக்கைகளிற் சேர்ந்தன
ஆதலால்) அப்புள்ளினத்தின் ஒலிமாறிய காலமாகிய
மாலைப்போதில்; நாவலூரரும் - நாவலூர் நம்பிகளும்;
நங்கை.........ஆயினார் - நங்கை பரவையார் தமக்குக் கொடுத்த
படருந் தன்மைத்தாகிய பெருங்காதலும் தன் உயிரைச் சூழ்ந்துபற்றிய
தனிமையும் உடையராயினார்.
(வி-ரை.)
வாவிபுள் ஒலி மாறிய மாலையில் - புள்ளொளி
வாவியில் மாறிய மாலைப்போதில். இதன் காரணமும் இயலும் 304-ம்
திருப்பாட்டிற் காண்க. மாற்றிய - எனப் பாடங்கொண்டு மாற்றிவிட்ட
மாலைக்காலம் எனக் காலத்தின் செயலாகக் கூறுவாருமுண்டு.
நாவலூரரும்
- உயர்வு சிறப்பும்மை.மறுவில் சிந்தை
வன்றொண்டர் (306).
நங்கை பரவையாம் பரவை
- நங்கை பரவை என்பது
அவர் பெயராம். அவர் நங்கை பரவையார் (293) என்றதன் உரைக்
குறிப்பைக் காண்க. பாவை - பாவை போன்ற பெண்; தந்த படர்
பெருங்காதல் - பாவை தந்ததேயாயினும், காதலானது உள்ள
மெங்கும் படர்ந்து செல்வதால் பெருங்காதலாயிற்று. படர்காதல் -
படர் - துன்பம் எனக்கொண்டு பிரிவினால் துன்பத்தைத் தரும்
காதல் என்றுரைப்பதுமாம். இதுவே பரவையார் கூடியவழி இன்பம்
ஆகுவதுமாம்.
ஆவி சூழ்ந்த தனிமையும்
- தமது ஆவியைச் சூழ்ந்த
தனியாந் தன்மையும். அஃதாவது ஆவி இங்கு நின்றும்
பரவையாரிடம் போயினமையால் ‘ஆவி நல்குவர்' என ஆரூர்ப்
பெருமானை வேண்டிக் கொண்டனர் நம்பிகள் (302). ஆனால் ஆவி
நல்காது (பரவையாரைத் தாராது) பெருமான் தாமே தனியாய்த்
துணையிருந்தார் என்பது. ஆவி சூழ்ந்த தனிமையாவது இறைவன்
உயிர்க்குள் உயிராய்க் கலந்து சூழ்ந்து நிற்குந்தன்மை. இங்கு ஆவி
வேறிடமிருந்தமையின் முன் அதனைச் சூழ்ந்திருந்த அவன்
தனியனாயிருந்தான். தனிமை - தனிப்பொருளாந் தன்மை. தோழர்
தனியராயினமையின் தாமும் தனியர் ஆயினர் என்பதும் குறிப்பாம்.
நாவலூரர் காதலும் தனிமையும் ஆயினார் என்று முடிக்க.
பரவையில்லாது அது தந்த காதல் மட்டும் இருந்தது; ஆவியில்லாது
அது சூழ்ந்த தனிமைமட்டும் இருந்தது; பரவை உண்டாயின் ஆவியும்
உளதாம்; அப்போது தனிமையும் நீங்கும் என்க. தமியனேன்
தனிமை நீங்குதற்கே என்ற திருவிசைப்பாக் கருத்தையுங் காண்க.
காதலோடு தனித்து முன்னர்க் கூறியபடி யாவரோடும் உரையியம்பாது
இருந்தனர் நம்பிகள் என்க. 163
|
|
|
|