31.
|
உள்ள வண்ண முனிவ
னுரைசெய்வான்
|
|
|
வெள்ள
நீர்ச்சடை மெய்ப்பொரு ளாகிய
வள்ளல் சாத்து மதுமலர் மாலையும்
அள்ளும் நீறு மெடுத்தணை வானுளன். |
21 |
(இ-ள்.)
உள்ள ... செய்வான் - (மாதவர்கள் கேட்க
விரும்பிய விழுத்தவத்தின் வரலாற்றை) உள்ளபடியே உபமன்னிய
முனிவர் சொல்வாராய்; வெள்ளநீர் ... உளன் - கங்கையைச்
சடையிலே தரித்த மெய்ப்பொருளாகிய இறைவன் அணிந்து
கொள்ளும் மலர் மாலையையும் அள்ளும் திருநீற்றையும்
எடுத்துக்கொடுப்பவர் ஒருவர் உண்டு.
(வி-ரை.)
உள்ள வண்ணம் - கூட்டியாவது குறைத்தாவது
சொல்லாமல் உள்ளது உள்ளபடியே; உண்மையாக - என்க.
வள்ளல் -
வரையாது கொடுப்பவன். என்றும் முட்டுப்படாத
ஐசுவரியத்தையுடையான். தனக்கென்று ஒன்றும் வேண்டாது
கொடுக்கும் தன்மையு முடையான். அதனால் அவனுக்குத்
தியாகராசன் என்று பேர்.
மெய்ப்பொருள்
- என்றும் உள்ளதாகிய சத்துப்பொருள்; இறைவன்.இவனல்லாதன எல்லாம் மெய்ப் பொருளல்லாதவையே.
அவ்வாறு மெய்ப்பொருளல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று
உணர்ந்து அலைவதுதான் மயக்கம். அதுவே பிறப்புக்குக் காரணம் -
எனத் திருவள்ளுவர் பொருளல்லவற்றை
எனும் திருக்குறளால்
அறுதியிட்டார்.
சாத்தும்
- என்பதனை நீற்றுக்கும் கூட்டுக.
மாலையும்
- நீறும் - இவற்றைத் தனக்கென
வேண்டானாயினும் உலகராகிய உயிர்களின் பொருட்டு அணிந்து
கொள்வான் இறைவன்.
பூசுவதும்
பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ |
என்ற திருவாசகம்
காண்க.
அள்ளும்நீறு
- மனங்கவரு மாண்புடைய திருநீறு. அள்ளுதல்
- சித்தந்திரை கொள்ளுதல். இளங்கொங்கையிற் செங்குங்குமம்
போலும் பொடி(திருப்பல்லாண்டு); அள்ளுதல்
- விரல்களினாற்
கூட்டி எடுத்தல் என்றலுமாம்.
நீறு
- நீற்றப்பெற்றது; உயிர்களின் வினைகளை நீறு செய்வது.
பஸ்மசாபாலஉபநிடத முதலிய வேதங்களாற் றுதிக்கப்பெற்ற பெருமை
வாய்ந்தது. அவைபோலவே திருஞானசம்பந்த நாயனார் திருநீற்றுப் பதிகம் என ஒரு தமிழ்வேதத்தனிப்
பதிகத்தாலே இதனைத்
துதித்திருப்பதும் காண்க. 21
|