312.
|
அடுத்து மேன்மே
லலைத்தெழு மாழியே
|
|
|
தடுத்து
முன்னெனை யாண்டவர் தாமுணக்
கடுத்த நஞ்சுன் றாங்கக் கரங்களா
லெடுத்து நீட்டுநீ யென்னையின் றென்செயாய்? |
166 |
(இ-ள்.)
அடுத்து.......ஆழியே - மேலும் மேலும் அடுத்து
அலைகளை வீசி எழுகின்ற கடலே; தடுத்து.......நீட்டுநீ -
பிறதேவர்களை எல்லாம் துன்புறுத்திய நஞ்சை, என்னை முன்னே
தடுத்து ஆட்கொண்ட இறைவனே உண்ணும்படி உன் அலைகளாகிய
கைகளினாலே எடுத்து நீட்டிக் கொடுத்த நீ; என்ன இன்று
என்செயாய்? - என்னை இன்றைக்கு என்ன செய்யமாட்டாய்?
(வி-ரை.)
அடுத்து மேல்மேல் அலைத்து எழும் -
கடலினது ஆரவார மிகுதி கூறியவாறு. பிரிந்தார்க்கு வருத்தம் மிகச்
செய்வது கடலின் ஆரவாரமென்பது அகப்பொருளிற் காணும்
உண்மைக் குறிப்பாம்.
அலைத்து எழும்
- ஆழியே! அலைத் தெழுதலே உனது
இயல்பாயிற்று. ஆதலின் பிறரையும் அலைத்தல் உனது
தொழிலுமாயிற்று. உன்னையே அலைத்து எழுவதன்றிப் பிறரையும்
அடுத்தடுத்து மேன்மேலும் அலைப்பாயாயினாய் என்றபடி. அலைத்து
- வருத்தி.
எனையாண்டவர் தாம்
உண - எனையாண்டவர்க்கும், அவர்
தாமே உண்ணும்படி. உயர்வு சிறப்பு உம்மை தொக்கது. தாம் -
அவர் தாமே. எவரும் தாங்கலாகாமையில் அவர் தாமே உண்ண.
எடுத்து நீட்டு நீ
- உண்பதற்கு நஞ்சு கொடுக்கின்றோமே
என்று சிறிதும் மறைவும், நாணமும், அச்சமுமின்றி வெளிப்படையாய்
எடுத்து நீட்டிய நீ.
என்னை
- நானே நேரிற் பெற்றுக்கொண்டு போயினேன்.
(ஆலாலசுந்தரன் என்ற பெயர்க்காரணம் காண்க.) ஆதலின் உன்
தன்மை நேரில் அறிந்துள்ளேனாகிய என்னை என்க. என்
தலைவனுக்கே வெளிப்பட நஞ்சு கொடுத்த நீ என்னை என்னதான்
செய்யமாட்டாய் என்ற குறிப்பு.
இன்று
- இன்றைக்கு. நாளை மணம் நிகழ்ந்த பின் ஒன்றும்
செய்ய இயலாது என்க.
|