318.
|
என்றவுரை
கேட்டலுமே யெம்பிரான் றமரேயோ!
வென்னா முன்னம்
|
|
|
வன்றொண்டர்
பால்வைத்த மனக்காத லளவின்றி வளர்ந்து பொங்க
நின்றநிறை நாண்முதலாங் குணங்களுட னீங்கவுயி
ரொன்றுந் தாங்கி
மின்றயங்கு நுண்ணிடையாள் வெவ்வுயிர்த்து
மெல்லணைமேல் வீழ்ந்த போது;
|
172
|
(இ-ள்.)
என்ற உரை ........ வளர்ந்து பொங்க -
என்று
சேடி சொன்ன விடையைக்கேட்ட வுடனே அவர் எமது
இறைவராகிய தியாகேசருடைய தமரேயோ? என்று சொல்லி,
அச்சொல் வாய்ப்பாட்டு நிறையுமுன்னே, வன்றொண்டரிடம்
மனத்திலே கொண்ட காதல் அளவுகடந்து மேலே பொங்கியதனாலே;
நின்ற ........ தாங்கி - முன்னே தம்மிடம் நிலைபெற்று நின்ற நிறையும்
நாணம் முதலிய நான்கு குணங்களும் ஒருமித்து நீங்க, உயிர் ஒன்றை
மட்டும் ஆற்றாது பாரமாய்த் தாங்கிக்கொண்டு; மின் தயங்கு .......
போது - மின்னல்போலத் துவள்கின்ற றுண்ணிய இடையினை
யுடையாராகிய பரவையார் பெருமூச்செறிந்து மெல்லிய
பூம்படுக்கையில் வீழ்ந்தார்; அப்போது,
கேட்டலும்
- எம்பிரான் தமரேயோ என்னா முன்னம் -
பொங்க - நீங்க தாங்கி - நுண்இடையாள் - உயிர்த்து -
வீழ்ந்தபோது - ஆட்டி - வீசிப் - படுத்துச் செய்த - எல்லாம் -
ஒத்தன; மாரனும் - காட்டி - வாளி சொரிந்தான் - என இவ்விரண்டு
பாட்டும் கூட்டி முடித்துக்கொள்க.
(வி-ரை.)
என்னா முன்னம் - என்று வாய்விட்டுச் சொன்னார்;
அச்சொல் சொல்லி முடியுமுன்னே எனப் பிரித்து உரைத்துக்
கொள்க. இச்சொல்லும் பிற்செயல்களும் ஒருங்கு நிகழ்ந்த விரைவை
உணர்த்த என்னா முன்னம் என்றார். தென்னா வென்னா முன்னந்
தீசேர் மெழுகொப்பாய் என்ற (திருவெம்பாவை - 7) திருவாசகம்
காண்க.
வன்றொண்டர்
- சேடி எதிர் நின்றாண்ட திருத்தொண்டர்
என்றமைக்கேற்ப வன்றொண்டர் என்றார்.
பால் வைத்த மனக்காதல்
- வன்றொண்டரிடம் மனம்
வைத்ததால் நிகழ்ந்த காதல் - வைத்தமனத்திலே நிகழ்ந்தகாதல் -
என மனத்தை இருவகையும் கூட்டுக.
அளவின்றி வளர்ந்து
பொங்க - எம்பிரான் - தமர் - என்ற
உணர்ச்சி காதலை வளரச்செய்து மேலும் பொங்கச் செய்தது.
பரவையாரது அன்பின் திறமுணர்த்தியதாம். தாம் தமர்க்கு உரியவர்
என்ற உணர்ச்சி காதல் பொங்குதற்குக் காரணமாம்.
நின்ற
- இதற்கு முன்னெல்லாம் தம்மிடத்தே நிலைபெற்று
நின்ற. நின்ற என இறந்தகாலக்குறியாற் கூறியதால் இப்போது
துணைநில்லாது ஒதுங்கியமை குறித்தார்.
நிறை நாண் முதலாங் குணங்களுடன் நீங்க
- நிறை
என்னும் ஒழுக்கமானது அதற்குப் பற்றுக்கோடாகிய நாணம் முதலிய
நாற்குணங்களுடனே ஒரு சேர நீங்க. நிறை என்பது அடக்க
வேண்டியவற்றை மனதிலே அடக்கி ஒழுகுதலாகிய மகளிர்க்குரிய
இயல்பாகிய ஒழுக்கம். அது நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்ற
நான்கு குணங்களைப்பற்றி நின்று செலுத்தப்பெறும். இவ்விரண்டும்
ஒருங்கே நீங்கியன என்பார் உடன் நீங்க என்றார். நீங்க
-
துணையாய் நில்லாது ஒதுங்கி நிற்க.
நிறை என்பதனை நிறைந்த என்றும், உடல் நீங்க
என்றும்
கொண்டு உடம்பினின்றும் நீங்க என்பாருமுண்டு. உடல்
அந்தக்கரண, புறக்கரண முதலியவற்றின் தொகுதியாதலின்,
குணங்கள் நீங்கி என்றும், பின்னர் உயிர் ஒன்றுந் தாங்கி என்றும்
கூறவே உடல் நீங்காது உடலில் உயிர்மட்டும் தாங்கி நிற்க ஏனை
உயிர்க்குணங்கள் நீங்கின என்பது குறிக்கப் பெற்றதாம்.
ஒன்றும்
- ஒன்றுமட்டும். ஏனையவெல்லாம் நீங்கியன.
முற்றும்மை.
மின்தயங்கு
- மின்போலத் துவள்கின்ற இடையின் முன்வர
ஆற்றாது மின்னையும் தயங்கச் செய்கின்ற என்றலுமாம்.
நுண்ணிடையாள்
- மேற் காதற்பாரம் மிக்குப் பொங்கவே
இடையின் நுண்மையால் இருக்கலாற்றாது வீழ்ந்தார் என்பது குறிப்பு.
வெவ்வுயிர்த்து மெல்
அணைமேல் வீழ்ந்தபோது -
பெருமூச்சு விடுதலும், வீழ்தலும் மன ஆற்றாமையின்
மெய்ப்பாடுகளாம். நடக்க முடியாமல் மெல்ல அடியொதுங்கி
மாளிகை ஏறி வந்து மலர்ச் சேக்கையில் இருந்ததர், இப்போது
காதல்நோய் மிக அவ்வாறு இருக்கவும் ஆற்றாது விழுந்தார் என்க.
மெல்லணை
- மெல்லிய மலர்களும் தூவியும் பரப்பிய
படுக்கை. 172
|