323.
|
தேருங்
கொடியும் மிடையும் மறுகிற்
றிருவா ரூரீர்! நீரே யல்லால்
|
|
|
ஆரென்
றுயரம் மறிவா? ரடிகே
ளடியே னயரும் படியோ விதுதான்?
நீரும் பிறையும் பொறிவா ளரவின்
னிரையுந் நிரைவெண் டலையின் புடையே
யூருஞ் சடையீர்! விடைமேல் வருவீ
ருமதன் பிலர்போல் யானோ வுறுவேன்?
|
177 |
(இ-ள்.)
தேரும்.........அடிகேள்! - தேர்களுங் கொடிகளுமாகி
நிறைந்து விளங்கும் வீதிகளையுடைய திருவாரூரில் எழுந்தருளிய
இறைவரே நீரேயல்லாமல் என் துன்பங்களை அறியவல்லார் யாவர்?
அடிகளே!; அடியேன்.....இதுதான் - அடியேன் வருந்தும் அளவும்
இவ்வளவே!; நீரும்........வருவீர் - கங்கையும், மதியும்,
புள்ளிகளையுடைய வாள் போன்ற பாம்புக் கூட்டங்களும்,
வரிசையான வெண்தலைகளின் பக்கங்களில் ஊர்ந்து
தவழ்தற்கிடமாகிய சடையையுடையவரே! இடபத்தின்மீது
எழுந்தருளுபவரே!; உமது..........உறுவேன்? - உம்மிடம்
அன்பிலாதவர்கள் போல யானோ இத்துன்பத்தைப்படுவது?
(வி-ரை.)
தேரும் கொடியும் மிடையும் மறுகில்
திருவாரூரீர் - திருவாரூர் தேர் அழகுக்குப் பேர் போனது.
விதானமும் வெண்கொடியும் இல்லா வூரும் என்றும், வீதிகள்
தோறும் வெண்கொடியோடு விதானங்கள் என்றும், நித்திய
நைமித்திகங்கள் இரண்டிலும் கொடி சிறந்துவிளங்கும் தன்மையை
அப்பர் பெருமான் பாராட்டியதும் இத்தலமே. ஆதலின் தேரும்
கொடியும் மிடையும் எனச்சேர்த்துக் கூறினார்.
திருவாரூரீர் நீரே
- என்பதனைத் திருவாரூர்ப்
பெருமானுக்கும், ஆரூர் நம்பிகளுக்கும் பொருந்துமாறு இரட்டுற
மொழிந்து கொள்ளலும் ஆம்.
நீரும் பிறையும் அரவின் நிரையும் நிரைவெண் தலையின்
புடையே ஊரும் - தெழித்தோடுங் கங்கைத் திரை என்றபடி
கங்கை, பிறை, அரவு என்ற மூன்றும் தவழ்ந்து ஊரும் தன்மை
உடையனவாதல் காண்க.
நிரை வெண்தலை
- வரிசையான வெண்தலைகளாலான
தலைமாலை. தலைக்குத் தலைமாலை யணிந்த தென்னே என்ற
சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக்களத் தேவாரம் காண்க.
விடைமேல் வருவீர்
- விடை தரும உருவமானது. அதனை
மேற்கொண்டு வருதலாவது இறைவன் தருமத்தைச் செலுத்த
வெளிப்படுதல். வருவீர் என்பதனைச் சடையீர் என்பது போல
விளியாகக் கொள்க. அன்றி வருவீராக என்று வியங்கோள்
விண்ணப்பமாகக் கொண்டு இனிமேலாவது விடைமேல் வந்து
என்னைக் காக்கக் கடவீர் என உரைத்தலுமாம். பகைப்
பொருள்களைப் பகை தீர்த்து ஒன்று சேர்க்கும் செயல் காண
இருந்தும் தருமத்தைச் செலுத்தும் நீர், இப்போது இப்பொருள்கள்
இயற்கை மாறி எனக்கு இன்னல் செய்யப் பார்த்தும் பகைதீர்த்து
ஆளாதிருத்தல் அழகன்று என்பது.
திருவாரூரார் - என்பதும் பாடம். 177
|