325.
|
மன்னும் புகழ்நா வலர்கோன் மகிழ
“மங்கை பரவை தன்னைத் தந்தோம்;
|
|
|
இன்னவ் வகைநம் மடியா
ரறியும்
படியே யுரைசெய் தன; “மென் றருளிப்
பொன்னின் புரிபுன் சடையன் விடையன்
பொருமா கரியின் னுரிவை புனைவான்
அன்னந் நடையாள் பரவைக் “கணிய
தாரூ ரன்பான் மண“மென் றருள,
|
179 |
(இ-ள்.)
மன்னும்......அருளி
- “மங்கைபரவையை உணக்கு
நாயகியாகக் கொடுத்தோம். இவ்வாறு நாம் கொடுத்தருளிய
செயலைத் திருவாரூரிலே வாழும் நமது அடியார்கள் அறியும்படியும்
அருளிச் செய்துள்ளோம்.“ என்று நிலைத்த புகழுடையாராகிய
திருநாவலூர் நம்பிகள் மகிழுமாறு அவர் அறியும்படி அருளிச்செய்து
(பின்னர்); பொன்னின்......அருள - பொன்னைப் புரிசெய்தாற்போன்ற
சடையினையும், இடபத்தினையும், போர்வல்ல பெரிய
யானைத்தோலின் போர்வையினையும் உடைய தியாகேசப்பெருமான்
பரவையாரது கனவிலும் எழுந்தருளி “நம்பியாரூரனுக்கும் உனக்கும்
மணம் விரைவிலே நிகழ்வதாம்“ என்று அருளிச்செய்ய,
(வி-ரை.)
மங்கை பரவை - பரவையாராகிய மங்கை.
மங்கைப் பருவத்தைக் குறித்ததுமாம். பெண்களுக்குப் பன்னீராண்டு
மணப்பருவமாதல் இலக்கணத்துட்காண்க.
தந்தோம்
- யாவரையும் அடிமையாகக் கொண்ட பொது
உரிமையே யன்றிப் பரவையார் உருத்திர கணிகையாராதலின்
அவரைக் கொடுக்க உருத்திரராகிய தமக்குச் சிறப்பு உரிமையும்
ஆதல் குறித்தப்படி.
நம் அடியார் அறியும்படியே
உரை செய்தனம் -
பரவையைக் கொடுத்தோம் என்ற மாத்திரத்தானே மகட்கொடை
நிகழ்ந்து முற்றியது. பெற்றோர் தரச் சுற்றத்தரார் கல்யாணச்
சடங்குகளை முடிக்கும் வகையிலே, சடங்குகளை முடிக்கும்படியாக
அடியார்களுக்குத் தெரிவித்தோம் என்றபடி. தந்தோம் என்ற
மகட்கொடையை உலகிலே நிகழச் செய்விக்கும் வழியை ஆரூரர்க்கு
வகுத்துக் காட்டியவாறு. புனைவான் - என்ற இப்பாட்டின் ஒரே
எழுவாய் “என்றருளி“ - “என்றருள“ என இருவகையிலும் பொருந்தி
முடிபுகொண்டவாறு காண்க. அவ்வொருவரே இவ்விருவரையும் பற்றி
நின்று கூட்டுவித்து அருள்செய்யும் அருளமைதியின் குறிப்பு.
பொன்னின்........புனைவான்
- பரவையார் இவரது
திருவுருவை நினைந்து நினைந்து கவன்ற அவ்வுருவோடு காட்சி
யளித்தார் என்பது குறிப்பு. 323-வது திருப்பாட்டுக் காண்க.
“ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே, அவ்வுருவாய் நிற்கின்ற
அருளுந் தோன்றும்“ என்பது தேவாரம் (திருப்பூவணத்
திருத்தாண்டகம் - 10).
பொன்னின் புரி
புன்சடை - பொன்னாற் புரித்ததுபோல
நிறமும் ஒளியும் வடிவு முடைய சிறுசடை. “பொன் நவில்
புன்சடையா னடியில் நீழல்“ என்ற வாசீசர் திருவாரூர் அரநெறித்
தேவாரம் காண்க. “பொன்புரிந்த புன்சடைக்கு“ - குமரகுருபரர். 179
|