33.
|
அங்கு முன்னரே
யாளுடை நாயகி
|
|
|
கொங்கு
சேர்குழற் காமலர் கொய்திடத்
திங்கள் வாண்முகச் சேடிய ரெய்தினார்
பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார். |
23 |
(இ-ள்.)
அங்கு முன்னரே - அந்த நந்தனவனத்தில் (ஆலாலசுந்தரர்
சேர்வதற்கு) முன்னமே; ஆளுடைய ...... கொய்திட
- உயிர்களை எல்லாம் ஆளுடைய அம்மையாரது குழலுக்கு ஆகின்ற
மலர்களைக் கொய்துவந்து இடும்பொருட்டு; திங்கள் பூவைமார் -
முழுமதிபோன்ற ஒளிவீசும் முகத்தையும் மேன்மேற்பொங்கி எழும்
அழகினையும் உடைய பூவைமார்களாகிய சேடியர்கள் இருவர்
சேர்ந்தனர்.
(வி-ரை.)
ஆளுடை நாயகி - பார்வதியம்மை; மேற்பாட்டிற்
சொன்ன முதல்வனாகி யாவரையும் ஆளுடைய நாயகனுக்கு நாயகி.
ஆளுடை - ஆளாக உடைய - ஆளும் தன்மையுடைய. ஈறு
குறைந்த பெயரெச்சம்.
கொங்கு
சேர் குழல் - இயற்கையிலே வாசனை சேர்ந்த
கூந்தல். இதனைக் “கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி”
என்ற திருப்பாசுரத்தாலும், திருவிளையாடற் புராணத்துள் நக்கீரர்
சரிதத்தாலும் அறிக.
குழற்கு ஆம் மலர்
- அம்மையார் பூசைக்கு ஆவன என்று
விதிக்கப்பெற்ற மலர்.
பூவைமார்
- பூவைபோன்ற பெண்கள். இச்சேடியர்கள் பெயர்;
அனிந்திதை கமலினி என்பது வரும்பாட்டிற் காண்க.
பொங்குகின்ற
கவின் - புதிது புதிதாய் விளைகின்ற பேரழகாதலின் அது அன்று விசேடிக்கக்
காரணமாயிற்று என்பது.
அதற்கு
முன்னரே நாயகி குழற்கா மலர் கொய்திடச் சேடியர் எய்தினார் என முடிக்க. முன்னெமை
- என்பதும் பாடம். 23
|