331. கையினிற் புனைபொற் கோலுங் காதினி லிலங்கு
                                  தோடு
 
  மெய்யினிற் றுவளு நூலு நெற்றியின் விளங்கு நீறு
மையனுக் கழகி தாமென் றாயிழை மகளிர்
                               போற்றச்
சைவமெய்த் திருவின் கோலந்தழைப்பவீ
                      தியினைச் சார்ந்தார்.
185

     (வி-ரை.) கூடவைகுதல் - உடன் வாழ்தல். கூடவைகி -
சேர்ந்து. மேற்பாட்டிற் கூறியவாறு சேர்ந்து விளையாடி வாழ்ந்து
வைகுவார், ஒருநாள் பின் வருமாறு செய்தார் என்க.

     மாளிகை...செழும் தவிசு - மாளிகை - சோலை - வாவி
செய்குன்று - தெற்றி - பந்தர் - இவை தவிசுக்கு விசேடணமாகிய
அடைமொழிகளாய் அந்தத் தவிசின் உயர்வையும்; அதனிலிருந்தோர்
அதைவிட்டு இலகுவில் நீங்கலாகாத அருமையும் குறித்து நின்றன.
தவிசு செழுமையாய் இருந்தது; அது சீதளத் தாளப் பந்தர்க்கீழ்
அமைந்திருந்தது; மேற்பந்தரும் கீழ்த் தவிசும் ஒரு தெற்றியில்
அமைக்கப்பெற்றன; அத்தெற்றி ஒரு செய்குன்றின் புடையிருந்தது;
செய்குன்று வாவியின் மாடு அமைந்தது; வாவி சோலையினிடை
இருந்தது; சோலைதானும் மாளிகை மருங்கு நின்றது எனத்
தொடர்ந்து காண்க.


     (வி-ரை.) தவிசிழிந்து - கும்பிடும் விருப்பால் நம்பி -
தோன்ற - தழைப்ப - வீதியைச் சார்ந்தார் என்று முடிக்க.

     புனை - புனைந்த. அழகிய வேலைத்திறம் பலவும் சேர்ந்த.
புனைந்த கோல் என்க. கோலும் - தோடும் - நீறும் (ஆகவுள்ள)
கோலம் - போற்ற - தழைப்ப என்று கூட்டி முடிக்க.

     மேற்பாட்டிற் சொல்லிய மன்னவர் திருவுக்கு ஏற்ப
இப்பாட்டிலே வைதிகத் திருவின் கோலம் விரித்துக் கூறியபடி.
கோலும், தோடும், நூலும், நீறும் தாங்கிய என ஒரு சொல்
வருவித்துரைக்க. இக்கோலம் என்றும் நம்பிகளுக்குரியதாய்
அவர்களாலே நித்தியமாய்த் தாங்கப்பெற்றதாதலின் இதனைச் சாத்தி
என்பது முதலிய வினைச்சொற் கொடாதுகூறினார். மேற்பாட்டிற்கூறிய
மன்னர்கோலம் வேண்டும்போது மேற்கொள்வதாதலின் ஆடை
சாத்தி - கலவை சாத்தி - என்பனவாக சாத்தி எனும் வினைச்சொற்
புணர்த்திக்கூறினார்.

     அழகிது - அழகு எனும் பண்டியாகப் பிறந்த குறிப்புவினை.
இக்கோலம் மிக அழகுடையது என்று போற்ற. அழகு இது என்று
பிரித்துக் கோல் ஆகிய இது அழகு - நீறு ஆகிய இது அழகு என்று
தனித்தனி ஒவ்வொன்றையும் போற்றியதாகக் கொள்ளினும் அமையும்.
இப்பொருட்கு ஒவ்வொன்றினும் தனித்தனி சென்று இயைவதால்
அழகிவை என்னாது அழகிது என ஒருமையாற் கூறியதாம்.

     சைவ மெய்த்திருவின் கோலம் - இந்திரத்திரு என வாளா
கூறிய அக்கோலத்தினின்றும் வேறுபடுத்தி இதன் உயர்வு
தெரிவிக்குமாறு மெய் - திரு - இன் என்ற அடைமொழி கொடுத்துக்
கூறினார். இதுவே மெய்க்கோலமாதலின் ஏனைய இந்திரத்திரு
முதலிய எல்லாம் பொய் என்று குறித்தபடி. இதுவே
அழகுடையதுமாம் என்றபடி.

     கோலம - மேற்பாட்டிலே கண்ட இந்திரத்திரு, கோலமாய்க்
கருதத்தக்கதன்றாதலின் இதனையே கோலம் என்று கூறினார். இது
அழிவில்லாததாதலினாலும், சிவத்தின் சார்பு பெறுதலானும் இது
மெய்த்திருவின்கோலமாயிற்று. ஆயினும் நம்பிகள் ஏன்
இந்திரத்திருவின் எழில் பெறப்பூண்டார்? எனின் அது (187)
இறைவனது ஆணையாதலாலும், பிராராத்தவாசனையை இதனுடன்
தொலைக்கும் வகையினாலும் என்க.

     திரு - கண்டாரால் விரும்பப்படுவதாதலின் கண்ட மகளிர்
“அழகிது“ எனப் போற்றினர். இன்கோலம் - நெற்றியில் விளங்கும்
நீற்றினால் நிறைவுபெற்று உலகை விளக்கம் செய்வதாதலின்
சைவமெய்த்திருவுடைய இனிய கோலமாயிற்று.

“காண வினியதுநீறு கவினைத் தருவது நீறு“
“பூச வினியது நீறு.......பேச வினியது நீறு“

என்பனவாதி தேவாரத் திருவாக்கின் பொருளை இங்கு வைத்துணர்க.

     உயிர்க்கோலமான இம் மெய்த்திருக்கோலத்தைப் புறக்கணித்து
ஏனை ஆடை ஆபரணங்களையும், வாகன முதலிய சடங்களையும்
பெரிதாய் எண்ணி வீண்நாள் போக்கும் இந்நாள் மாக்கள்
‘சைவமெய்த் திருவின்கோலம்' என்று ஆசிரியார் இடித்துக் கூறி
எடுத்துக்காட்டிய இதன் உண்மையை உற்றுநோக்கி உணர்ந்து
உய்வார்களாக.

     தழைப்ப - தழைக்கும்பொருட்டு. நம்பிகள் அன்று
திருவீதியினைச் சார்ந்ததன் பயன் குறிப்பிட்டவாறு. தீதிலாத்
திருத்தொண்டத்தொகை“யை அன்றைக்கே உலகத்திற்ருத் தருதலும்,
அதனால் சைவமெய்க்கோலம் என்றும் தழைக்க உளதாதலும்,
நிகழ்தலின் தழைப்ப என்றார்.

     பொற்செண்டும் - என்பதும் பாடம்.  185