332.
|
நாவலூர்
வந்த சைவ நற்றவக் களிறே! யென்று,
|
|
|
மேவலர்
புரங்கள் செற்ற விடையவர்க் கன்ப!
வென்றுந்,
தாவில்சீர்ப் பெருமை யாரூர் மறையவர் தலைவ!
வென்று,
மேவினரிரண்டு பாலும் வேறுவே றாயம் போற்ற,
|
186 |
(இ-ள்.)
நாவலூர்.........களிறே என்றும்
- சைவத்தினது
நல்ல தவத்தினது பயனாகித் திருநாவலூரில் அவதரித்த களிறு
போன்றவரே எனவும்; மேவலர்......அன்ப என்றும் - பகைவரது
திரிபுரங்களையும் எரித்த விடையவராகிய சிவபெருமானிடத்து மிக்க
அன்புடையவரே எனவும்; தாவில்.......தலைவ என்றும் - குற்ற
மற்ற சிறப்பும் பெருமையும் உடைய திருவாரூர் வேதியர்
பெருமானே எனவும்; மேவினர்..........போற்ற - இரண்டு பக்கமும்
வேறு வேறாய் மேவினராகிச் சூழ்ந்த பரிசனங்களும் மகளிர்
கூட்டமும் துதிக்க,
(வி-ரை.)
சைவநல் தவக் களிறு - சைவம் தவஞ்செய்து
இவரை ஆசாரியராகப் பெற்றது. களிறு - சைவம் என்பது ஒரு
சமயம் என்பதனோடு அமையாது சமயாதீதமாயும் விளங்குவதாம்.
சைவ முதலாம் அளவில் சமயமும் வகுத்துமேற் சமயங்கடந்த
மோன சமரசம் வகுத்த நீ என்று தாயுமானார் கூறுவதை நோக்குக.
நிலை கடந்த அக்கொள்கையை ஒருவரும் நேரே காணுதல் இயலாது.
அதற்காக அது தானே ஓர் உரு எடுத்து வந்தால், தனக்குமேற்
பெரியது வேறொன்றில்லாத அது, பெரிய யானையை ஒத்திருக்கும்
என்பார் களிறே என்றார். யானை மதமுடையதாதலின் (யான் + ஐ =
யான் என்றதை உடையது. தன்னை உயர்வாகக் கருதுவது) சைவம்
இவரைப் பெற்றதால் தன்னை உயர்வாகக் கருதியது என்பது.
தலைதூக்கிச் செல்லும் இராசாங்கத் தமர்ந்தது. இறைவனே உறழ்ந்த
கல்வி யுடையானு மொருவன் வேண்டுமென இருந்து இவரைப்
பெற்றார் என்று சிவப்பிரகாசர் பாராட்டினர்.
புரங்கள் செற்ற விடையவர்
- திரிபுமெரித்த காலத்திலே
திருமால் இடபமாய்த் தாங்கினார்; ஆதலின் இரண்டு
பொருள்களையும் ஒன்றுபடுத்திக் கூறினார்.
தடமதில்க
ளவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் றிருமால்காண் சாழலோ |
என்பது திருவாசகம்.
தாவில் சீர்ப் பெருமை
ஆரூர் - குற்றமற்ற சிறப்பாவது
தன்பாற் பிறந்தார் எல்லாரும் முத்தியடைதல்....பெருமையாவது
அச்சிறப்புப் பிறிதொன்றிற்கு மில்லாமை. சீர்ப்பெருமை என்பதனைத்
தலைவன் என்பதற்கு அடைமொழியாகி உரைப்பதுமொன்று.
ஆரூர் மறையவர் தலைவ!
- ஆரூரில் எழுந்தருளிய
வேதியர் பெருமானே!
மேவினர்...போற்ற
- இரண்டு பாலும் வேறு வேற
மேவினரும், ஆயமும்போற்ற என்று கூட்டுக. மேவினராகிய ஆயம்
வேறு வேறாகப் போற்ற என்று உரைத்தலும் ஆம். ஆயம் - மகளிர்
கூட்டம்.
வேறு வேறாயும் போற்ற - வேறு வேறாகப் போற்ற
-
என்பனவும் பாடங்கள். 186
|