34.
|
அந்த
மில்சீ ரனிந்திதை யாய்குழற்
|
|
|
கந்த
மாலைக் கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
வந்து வானவரீச ரருளென. |
24 |
(இ-ள்.)
அந்தமில்சீர் - என்பவர் - (அச்சேடியர்களாவார்)
அளவற்ற சிறப்புடைய அனிந்திதை, நுணுகிச் செறிந்த கூந்தலும்
மணம் பொருந்திய மாலையும் உடைய கமலினி, என்ற
பேருடையார்கள்; கொந்து ... கொய்வுழி - பூங்கொத்துக்களிலே
அன்று அலர்ந்த மலர்களைத்தெரிந்து கொய்து கொண்டிருந்தபோது;
வந்து ... அருளென - தேவதேவனாகிய சிவபெருமானது திருவருளே
இது என்னும் படியாக வந்து;
(வி-ரை.)
மேல்வரும் பாட்டில்“மனம் போக்கிட” என்ற வினையுடன் தொடர்ந்து பொருள்
கொள்க. வந்து மனம்
போக்கிடுதலே வினையாய் முடிந்து இச் சரிதத்துக்கும்
இப்புராணத்துக்கும் காரணமாயினமை காண்க. அதனைச்
சொல்லாற்றலிற் காட்டி அழகுபெற அமைத்தது ஆசிரியரது
சிறப்பியல்புகளில் ஒன்று.
கொந்து
கொண்ட திருமலர் - பூங்கொத்து; பூங்கொத்திலே
முன்னாள் அலர்ந்தனவாகிய பழம்பூக்களையும், பின்னாள் அலர
நிற்பனவாகிய முகைகளையும் நீக்கி, அன்றலர்ந்த புதுப்பூக்களைக் கொய்தனர் என்பார்,
“கொந்து கொண்ட திருமலர்” என்றார்.
மேற்பாட்டிலே “நாண்மலர்” என்றதும் இது.
வந்து
- முன்னே “எய்தி”ச் சேடியர் மலர் கொய்வுழிப்,
பின்னர் “வந்து”என்பதாம். “அங்குமுன்” என்றதும் காண்க.
அருள்
என - அருள் என்னும்படி; இதனை வரும்பாட்டிலே “மனம் போக்கிட” என்றதனுடன்
சேர்த்து முடிக்க. தீவகமாய் “
அருள் என” “வந்து” என்று கூட்டலுமாம்.
ஆய்குழற்
கந்தமாலைக் கமலினி - இவர் திருவாரூரிலே பரவையார் என்ற பேருடன் அவதரித்தனர்.
இவரை, இங்குச் சுந்தரர்
என்ற நிலையிற் கண்ட குழலும் கந்தமாலையுமாகிய
இக்காட்சியினையே தொடர்ந்து, திருவாரூரிலே“தேங்கமழ் குழலின்
வாசம் திசையெலாம் சென்று சூழ”ப் (தடுத்தாட்கொண்ட புராணம் -
137) பூங்கோயிலுள்ளாரை வணங்கப் போந்தபோது நம்பிகளாகிய
நிலையிற் கண்டனர் என்ற தொடர்ச்சியின் அழகைக் காண்க. 24
|