341.
|
இன்னவா
றேத்து நம்பிக் கேறுசே வகனார்
தாமும்
|
|
|
அந்நிலை
யவர்தாம் வேண்டு மதனையே யருள
வேண்டி
மன்னுசீ ரடியார் தங்கள் வழித்தொண்டை யுணர
நல்கிப்
பின்னையு மவர்க டங்கள் பெருமையை யருளிச்
செய்வார்.
|
195 |
(இ-ள்.)
வெளிப்படை. இவ்வாறு போற்றுகின்ற நம்பிகளுக்கு
இடப ஏற்றின் தலைவராகிய பெருமானும் அந்நிலையிலே அவர்
வேண்டிய அப்பொருளையே அவருக்கு அருள் செய்வதற்காக,
நிலைபெற்ற சிறப்புப்பொருந்திய அடியார்களது வழி வழியாக வரும்
திருத்தொண்டின் திறங்களை உணரும் அறிவு கொடுத்து (அறியச்
செய்து) மேலும் அவர்களது பெருமைகளைத் தாமே அருளிச்
செய்வாராயினார்.
(வி-ரை.)
ஏறு சேவகன் - எருதின்மேல் வரும் சேவகன்.
எருதைக்கொடியாக உயர்த்திய சேவகன் என்றலுமாம். எல்லாரிலும்
உயர்ந்த சேவகன் என்பது ஒரு பழைய உரைக்குறிப்பு. சேவகன் -
சேவைக்கு இலக்கியமானவன், தலைவன். அடியவர்க்கு ஏவல்
செய்வான்போல வேலை செய்தலின் ஆள் என்றலுமாம்.
நம்பிகளுக்குத் திருக்கருசூரில் சோறு இரந்து கொண்டு வந்து
கொடுத்தலும், விறகு விற்றதும் முதலிய அருளிப்பாடுகளை நோக்குக.
“இங்குநம்
மில்லங்க டோறு மெழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தருளுஞ் சேவகனை“ |
என்ற திருவெம்பாவையும்
காண்க. சேவகன் - வீரன் என்றலுமாம்.
இறைவனை வேதம் வீரன் என்பதும் காண்க. ஏறு உடைய சேவகன்
என்ற பொருளில் “நாடு கிழவோன்“, “கறைமிடறணியல்“
என்புழிப்போல்
ஒற்றிரட்டாதாயிற்று
- என்பர். வேண்டும் அதனையே அருள
வேண்டி - வேண்டுவார் வேண்டுவதே யீவான் கண்டாய்“ என்பது
இறைவனது இலக்கணம். “இவர்க்கியா னடியேனாகப், பண்ணுநா
ளெந்நாள்? என்று பரமர் தாள்பரவிச் சென்றார்“ (335) நம்பிகள்
ஆதலின் அதனையே அருள்வதற்காக என்பது. “வேண்டத் தக்க
தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ“ - திருவாசகம்.
மன்னுசீர் அடியார்
- மன்னும் அடியார் என்க. இறைவன்
நித்தன்; அதுபோலவே அவன் அடியார்களும் நித்தர் என்பதாம்.
மன்னும் என்பதனைச் சீர் என்பதற்கடைமொழியாக்கி அடியார்களது
நிலைபெற்ற சீர் என்றுரைப்பதுமாம். ஏனையோர் சீர்கள் மன்னுவன
அல்ல; அவை ஒன்றும் நிலையா; ஆதலின் அடியார்கள் சீரே மன்னு
சீர் எனப்பெறும். “பொருள் சேர் புகழ்“ என்ற இடத்துப் பரிமேலழகர்
உரை காண்க.
“செல்வமொடு
பிறந்தோர், தேசொடு திகழ்ந்தோர்,
கல்வியிற் சிறந்தோர், கடுந்திறன் மிகுந்தோர்,
கொடையிற் பொலிந்தோர், படையிற் பயின்றோர்,
குலத்தி னுயர்ந்தோர், நலத்தினின் வந்தோர்,
எனையரெங் குலத்தினரிறந்தோர் ரனையவர்
பேரு நின்றில போலும்“ |
-கோயினான்மணிமாலை
- 28 |
என்ற பட்டினத்தடிகள்
திருவாக்குக் காண்க.
சீர்
- சிறப்புக்கள் - சீர்த்திகள். சிவகரகசியத்திலே
இவ்வடியவர்கள் வருவார்கள் என்று இறைவன் உமாதேவியாருக்கு
உணர்த்தியருளினார்; கந்தர் அதனைச் சைகிஷவ்ய முனிவருக்கு
அருளினார்; பொல்லாப்பிள்ளையார் இவர்களது பெருமைகளை
நம்பியாண்டார் நம்பிகளுக்கு உபதேசித்தருளினார்; உபமன்ளியர்
முதலிய முனிவர்களும் நந்திதேவர் முதலிய கணநாதகர்களும்
துதித்துள்ளார்கள்; இன்றைக்கும் பலரும் இவர்களை வணங்கி
யடைந்து வாழ்கின்றார்கள் என்பனவாதி சிறப்புக்கள்.
வழித்தொண்டு
- வழிவழியாக இடையறாது தொடர்ந்துவரும்
திருத்தொண்டு. “பூதபரம்பரை பொலிய“ என்றமை காண்க.
“வழிவழி
யாளாகும் வண்ண மருளெங்கள் வானவனே“
“வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடியார்“ |
முதலிய திருவாக்குக்கள்
காண்க.
உணர நல்கி
- அவனைப்போலவே அவன்
உணர்த்தினாலன்றி உணரவும் ஓதவும் படாத இலக்கணமுடையார்
அவனடியார்கள்; ஆதலின் அவன் உணரநல்கினான். 195
|