346.
|
மன்னுசீர்
வயலாரூர் மன்னவரை வன்றொண்டர்
|
|
|
சென்னியுற
வணங்கித் திருவருண்மேற்
கொள்பொழுதின்
முன்னமா
லயனறியா முதல்வர்தா மெழுந்தருள,
அந்நிலைகண் டடியவர்பாற் சார்வதனுக் கணைகின்றார்,
|
200 |
(இ-ள்.)
வெளிப்படை. நிலைபெற்ற சிறப்புடைய வயல்களாற்
சூழப்பெற்ற திருவாரூர்த் தியாகேசரது பாதங்களில் தமது முடி
பொருந்தும்படி வணங்கி, அவரது திருவருளை மேற்கொண்டிருந்த
பொழுதிலே, பிரம விட்டுணுக்களால் நினைக்கவும் முடியாத
அம்முதல்வர் எழுந்தருளினாராக; அதனைக்கண்டு நம்பிகள்,
தேவாசிரியனிற் கூடியிருக்கும் அடியார்களிடத்தே சார்வதற்கு அங்கு
அணைவாராகி,
(வி-ரை.)
ஆரூர் மன்னவர் - தியாகேசர். ஆரூர்
ஆண்ட (தேவாரம்)
திருவருள் மேற்கொள்
பொழுது - தாம் பெற்ற
அத்திருவருளின் வழியாய் நின்றபோது - திருவருளாணையின்படியே
பாடத் தொடங்கியபோது என்பர்.
அந்நிலை கண்டு
- அவர்க்கெதிர் காணக் காட்டும்
படியெதிர் தோன்றி நிற்கும் (336) நிலையை இதுவரை
கண்டுகொண்டிருந்த நம்பிகள் இப்போது அவர் அக்காட்சியை
மறைத்து எழுந்தருளிவிட்ட அந்த நிலையினைக் கண்டு. எழுந்தருள
என்பது இறைவன் முன் காட்டிய வெளிப்பாட்டு நிலையினை
மறைத்துத் தமது வியாபக நிலையினுட்போகும் நிலையைக் குறிக்கும்
சைவசம்பிரதாய வழக்கு. என்றெழுந்தருளினாரே (திருநீலகண்ட
நாயனார் புராணம் - 42) எழுந்தருளினாரையர் (அமர்நீதிபுரா - 47)
முதலிய பல இடத்தும் காண்க. இவ்வாறன்றி, இதற்கு இறைவன்
கோயிலுக்குள் எழுந்தருளினாரோ, அன்றித் தேவாசிரியனுக்கு
எழுந்தருளினாரோ என்றெல்லாம் எடுத்துக்கொண்டு உரை கூறுவது
மரபன் றென்க.
அடியவர்பாற் சார்வதனுக்கு
அணைகின்றார் -
ஆண்டவனது சார்பு நேரே காணாவாறு மறைந்தருளியமை கண்டனர்;
அதுகாலை அடுத்த சார்பு அவனடியார்களாகிய இவர்களேயாம்
என்று கொண்டனராய் இவர்களைச் சார அணைகின்றார் என்பதும்
குறிப்பு.
சார்புணர்ந்து
சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய் |
என்பது குறள். இக்குறளுட்
போந்த உண்மையை இங்கு வைத்துக்
கண்டு களிக்க. இக்குறளினைத் திருக்கயிலாய ஞான உலாவிலும்,
திருக்களிற்றுப் படியார் என்ற ஞான சாத்திரத்திலும் வைத்து ஆளப்
பெற்றுள்ளதே இதன் பெருமையை விளக்கும். சாரவேண்டிய
அடியையும் அடியாரையும் சார்ந்தவர்களே, தாம் இப்போது சார்ந்து
நின்ற உலகச் சார்பை ஒழித்துப் பிறவித்துன்ப நீங்குவர் என்பதாம்.
இதனால் அணைந்தோர் தன்மையை விளக்கியவாறு.
அணைகின்றார் என்ற சொல்லினழகும் நோக்குக.
சார்பு
- சைவசித்தாந்தத்திலே சிறப்பாய்ப் பேசப்பெறும் அரிய
உண்மையை விளக்குவதோர் சொல். உயிர் சார்ந்ததன் வண்ணமே
தன்வண்ணமாய்க் கொண்டு நிற்கும் என்பது சைவசித்தாந்த உண்மை.
மாந்தர்க், கினத்தியல்ப தாகு மறிவு (குறள்) என்பதும்
இப்பொருள் பற்றியது.
ஆணவத்தோ
டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத்
தாணுவினோ டத்துவிதஞ் சாருநா ளெந்நாளோ |
-
தாயுமானார் |
முதலிய திருவாக்குக்கள்
காண்க. சார்தல் என்னும் இவ்வரிய
பொருளையும் சொல்லையும் இப்புராணத்துட் பின்னர்க் காணும் பல
இடங்களிலும் இவ்வாறே பொருள் கொண்டு உய்த்துணர்ந்து கொள்க.
அணைகிறார்
- அணைந்தார் தன்மைகளை சிவஞானபோதம்
12-ம் சூத்திரம் பேசும். எதிர் காட்சி கண்ட முதற்றிருவாயிலிலிருந்து
தேவாசிரியனை நோக்கி வருகின்றாராகி - அணைகின்றாராகி -
முற்றெச்சம்.
செல்வதனுக்கு - என்பதும் பாடம். 200
|