357.
|
செம்மையாற்
றணிந்த சிந்தைத் தெய்வவே தியர்க
ளானார்
|
|
|
மும்மையா
யிரவர் தாங்கள் போற்றிட முதல்வ
னாரை
இம்மையே பெற்று வாழ்வா;ரினிப்பெறும்
பேறொன்
ரில்லார்;
தம்மையே தமக்கொப் பான நிலைமையாற்
றலைமை
சார்ந்தார்; |
8 |
(இ-ள்.)
வெளிப்படை. செம்மைத் தன்மையின் நிறைவினாலே
ஆணவ நீங்கித் தணிவுபெற்ற சிந்தையுடைய தெய்வத்தன்மை
வாய்ந்த மூவாயிர வேதியர்கள் இம்மையிலேயே இறைவனைத் தாம்
போற்றி வாழும்படிக் கைவசமாகக் கிடைக்கப்பெற்று
வாழ்கின்றவர்கள்; ஆதலின் அவர்கள் இனிப் பெறுவதாய இதனின்
மிக்க பேறு வேறில்லாதவர்களாயினார்; மேற்கூறிய எல்லாவற்றாலும்
தமக்கு நிகரானார் தாமேயல்லாது பிறரில்லை என்ன நிலைபெற்று
அந்நிலையிலே தலைசிறந்தவர்கள்;
(வி-ரை.)
செம்மை - திருநின்ற செம்மை
- சிவத்தன்மை.
அதனாற்றணிந்த சிந்தை சிந்தையிற் சிவத்தன்மை நிறைய நிறைய
ஆணவத்தன்மை வலிகுறைந்துபடும். ஆணவம் வெப்பமிக்கு
மேலெழு மியல்புடையதாதலின் தீயது என்பார் அது வலி குறைந்த
நிலையைத் தணிந்த என்றார்.
தணிந்தமனத் திருமுனிவர் தபோவனத்தி னிடைச்சார்ந்தார்
-
கண் - புரா - 140 முதலிய திருவாக்குக்கள் காண்க. செம்மை
என்பதற்கு ஒழுக்கம் என்றும், இல்லற
நடத்தும் செவ்வழி என்றும்
கூறுவாருமுண்டு. செம்மையின் நிறைவு பெறுவதன் வழிகள் மேலே
கூறப்பெற்றன.
தெய்வ வேதியர்கள்
- தெய்வத்தன்மையுடைய வேதியர்.
சீவன்முத்தநிலையடைந்தவர்கள் என்று கூறுவாருமுண்டு.
சிந்தையையுடைய வேதியரெனவே சிந்தை என்றது அந்தக்கரணத்தை
எனவும், தணிந்த என்ற பெயரெச்சம் வினை முதற் பெயர் கொண்டு
முடிதலின் தணிதல் - தண்ணளியுடையதாதல் எனவும், ஆகவே,
எவ்வுயிர்க்குஞ் செவ்விய தண்ணளி செய்யுஞ் சிந்தையையுடைய
வேதியர் - தெய்வவேதியர் - எனத் தனித்தனிக் கூட்டி
முடிக்கப்படும் என்பாரும் உண்டு. நடேசரைத் தங்களிலொருவராகப்
பெற்றமையால் தெய்வ வேதியர் என்றலுமாம்.
மும்மையாயிரவர்
- இவர்களின் தொகை குறித்தவாறு.
தில்லைமூவாயிரவர் என்பர். முட்டாத முச்சந்தி மூவா யிரவர்க்கும்
மூர்த்தி யென்னப், பட்டானை - சுந்தரர் தேவாரம்
- குறிஞ்சி -
கோயில் - (7).
முதல்வனாரை இம்மையே
பெற்று வாழ்வார் - யாவர்க்கும்
தலைவராய் ஐந்தொழில் புரிந்து உலகத்தை ஆட்டுவிக்கும்
இறைவனை இப்பிறப்பிலேயே தமக்குரிய ஆன்ம நாயகராகக்
கைவரப்பெற்றுப் பூசை புரிந்து வாழ்வார்.
இனிப்பெறும் பேறு
ஒன்று இல்லார் - சிவப்பேறு என்பதே
உயிர்கள் பெறும் முடிந்த பயன் என்று ஞானநூல்கள் முடிபு
கூறுகின்றன. அதனையே இப்பிறப்பிலே பெற்ற உயிர், இனி, மேலே
பெறக்கடவதாகிய பேறு வேறு ஒன்றும் இல்லை என்பது. வாழ்வார்
ஆதலின் இல்லார் ஆயினார் என்க. ஒன்று - ஒன்றும் - உம்மை
தொக்கது.
தம்மையே தமக்கொப்பான
நிலை - தனக்குவமை யில்லாதான்,ஓர் உவமனில்லி
என்பனவாதி திருவாக்குக்களால்
கூறப்பெற்ற இறைவனது தன்மைகளில் ஒன்று. இறைவனைப்
பெற்றுவிட்டமையால் இவர்களும் அத்தன்மையினராயினர் என்பது.
உயிர் சார்ந்ததன் வண்ணமாமாதலின் சிவத்தைச் சாரப்பெற்றபோது
அதன் தன்மை பெற்றதென்பார் தம்மையே தமக்கொப்பான நிலை
என்றார்.
தலைமை சார்தல்
- இந்நிலை பெற்றார் பலருள்ளும் சிறந்து
விளங்குதல். முதல்வரான நடராசர் ஒருவரையே மூவாயிரவரும்
தத்தமது ஆன்மநாயகராகக் கொண்டு அவரையன்றி வேறு
சார்பின்றிப் பூசிக்கும் பேறு பெற்றவர்கள் என்றவாறு.
பெற்று வாழ்ந்தார்
- என்பதும் பாடம். 8
|