358.
|
இன்றிவர்
பெருமை யெம்மா லியம்பலா
மெல்லைத்
தாமோ? |
|
|
தென்றமிழ்ப்
பயனா யுள்ள திருத்தொண்டத்
தொகைமுன்
பாட
வன்றுவன் றொண்டர் தம்மை யருளிய வாரூ
ரண்ணன்
முன்றிரு வாக்காற் கோத்த முதற்பொரு ளானா
ரென்றால்.
|
9
|
(இ-ள்.)
இன்றிவர்.....ஆமோ - இன்று இவர்களது
பெருமைகள் எம்மாற் சொல்லப்பெறும் எல்லையுட் படுவனவோ?
(படா. என்னையெனின்); தென்றமிழ்ப்பயன்...பாட - தென்றமிழின்
பயனேயாய் விளங்குகின்ற திருத்தொண்டத் தொகை பாடுதற்கு;
அன்று வன்றொண்டன்....என்றால் - முன்னாள் வன்றொண்டராகிய
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஆணை தந்து அடியெடுத்துக்
கொடுத்தருளிய திருவாரூர்த் தியாகேசர் தொடக்கஞ்செய்து
தந்து முதலிலே கோத்த தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியேன் என்ற
சொற்றொடராற் குறித்த பொருளாவார் இவர்களே
என்று காண்போமானால்.
(வி-ரை.)
இன்று - இப்போது - மேற்கொண்டு
நின்ற
இப்போது.
முதற்பொருள்
- திருத்தொண்டத் தொகையிலே கோத்துத்
துதித்த அடியார் திருக்கூட்டத்தில் முதலில் பேசப்பெற்ற பொருள்
நடராசராகிய முதல்வரைக்குறித்து வைத்தமையாலும், தொடக்கத்து
வைத்தமையாலும் முதற்பொருள் என்றார். இங்குப் பொருள்
என்றதைச் செம்பொருள், மெய்ப்பொருள் என்றவற்றிற்போலக்
கொள்க.
திருவாக்கு
- திருவைத் தரும் வாக்கு - உயிர்களுக்கு
மெய்ப்பொருள் கூறி வழிப்படுத்தி அவர்களை முத்தியிற் செலுத்தும்
வாக்கு. திரு முத்திச் செல்வம் அல்ல றீர்ந்துலகுய்ய மறையளித்த
திருவாக்கால் (345) என இதனை முன்னர் விரித்துணர்த்தினார்.
வன்றொண்டர்
தம்மை யருளிய ஆரூரண்ணல் - முன்னர்,
நீதியா லவர்க டம்மைப் பணிந்துநீ நிறைசொன் மாலை, கோதிலா
வாய்மை யாலே பாடெனக் கூறியதைக் குறித்தது (343). அருளிய
பணித்தருளிய.
தென்றமிழ்ப்
பயனாயுள்ள திருத்தொண்டத்தொகை -
அழகும் இனிமையும் கொண்ட தமிழ்மொழியின் பயன்
திருத்தொண்டத்தொகையேயாம் என்க. தென் - அழகு - இனிமை.
தீந்தமிழ் என்பதும் அது. அழகு - எழுத்தமைப்பு, சொல்லியல்பு,
பொருளமைதி முதலிய பலவற்றாலும் பிற மொழிகளுக்கில்லாத அழகு
பொருந்துதல். இனிமை - இனிய பொருளைத் தருதல். இவற்றின்
விரிவுகள் எமது மாதவச் சிவஞான முனிவர் அருளிய முதற்சூத்திர
விருத்தி முதலிய நூல்களில் வல்லார் வாய்க் கேட்கத்தக்கன. பயன்
- பேறு - தமிழினாற் றரப்பெறும் உறுதிப்பொருள். தமிழ் நூல்கள்
பலவுங் கற்பார் எல்லா வளனும் பெற்று அது காரணமாக
இறைவனடியா ரடிசார்தலே அக்கல்வியினாற் போந்த பயனாம்
என்பது. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன், நற்றா
டொழாஅ ரெனின்? என்று வினாவின் மூலம் உறுதி கூறியருளினார்
பொய்யாமொழியார். ‘மந்தி போற்றிரிந் தாரியத்தொடு செந்தமிழ்ப்பய
னறிகிலா - அந்தகர் என்பது திருஞானசம்பந்த நாயனார் தேவாரம்.
(திருவாலவாய் - கொல்லி - 4) வாயிருந்தமி ழேபாடித் தாளுறா
வாயிரஞ் சமண் என்று தமிழ்ப்பயன் ஆளாதலே என முடித்துக்
காட்டியருளினார் அப்பர் பெருமான். (குறுந் - பழயாறை வடதளி -
9) மணணி னிற்பிறந் தார்பெறும் பயன் என்று (திருஞான - புரா -
1087) பொருள் வகையில் வைத்து ஆசிரியர்காட்டி, அப்பொருளைக்
கூறும் சொல் இதுவே என்றருளியபடியாம். பயன் - சிவஞானபோதம்
பயனியலில் முடிந்த பயனாகக் கூறும் அணைந்தோர் தன்மை என்ற
பன்னிரண்டாம் சூத்திரப்பொருள் இத்திருத்தொண்டத் தொகையாற்
போந்த பொருளே யாதலின் தென்றமிழ்ப்பயன் என்றார்.
தொகை
முன் பாட - தொகையின் முன் வைத்துத்
தொடங்கிப் பாட.
ஆமோ
- ஓகாரம் - எதிர்மறை. தாமார்க்குங் குடியல்லாத்
தன்மை யான சங்கரன் அடியேன் என்று தமது திருவாக்காற்
கூறுதற்கு இவர்கள் பொருளாயினார் என்றால் என்பது கருத்து.
வன்றொண்டர்
தம்மைத் - தொகை - பாட - அருளிய
ஆரூரண்ணல் - முன் - திருவாக்கால் கோத்த - முதற்பொருள்
ஆனார் என்றால் - இவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத்
தாமோ? என்று கூட்டி யுரைக்க.
இயம்பலாம்
பெருமை - என்பதும் பாடம். 9
|