36.
|
முன்ன மாங்கவன் மொய்ம்முகை நாண்மலர்
|
|
|
என்னை
யாட்கொண்ட வீசனுக் கேய்வன
பன்ம லர்கொய்து செல்லப் பனிமலர்
அன்ன மன்னவ ருங்கொண் டகன்றபின். |
26 |
(இ-ள்.)
முன்னம் - முன்னே; ஆங்கவன் ... செல்ல
-
அங்கிருந்து ஆலாலசுந்தரர் வண்டுகள் மொய்க்கும் தருணத்திலே,
புதுமலர்களில், என்னை ஆளுடைய இறைவனுக்கு விதிக்கப்பெற்ற
பலவற்றையும் கொய்து கொண்டு செல்லுதலும்; பனிமலர் ...
அகன்றபின் - அவ்வண்ணமே குளிர்ந்த பூக்களைக்
கொய்துகொண்டு அன்னம்போன்ற அச்சேடியர்களும் போயின
பின்னர்;
(வி-ரை.)
முன்னம் - காட்சியின்மேல் சொல் முதலியன
நிகழ்வதன்முன். சேடியர் அகல்வதன் முன்
என்றலுமாம். எனவே,
அவர்களுக்குப் பின்னர் வந்த சுந்தரர் முன்னரே சென்றனர்
என்பதாம்.
மொய்ம்முகை நாண்மலர்
- வண்டுகள்
மொய்க்கக்கூடியனவாய் அப்போது மலருந் தன்மை வாய்ந்த
“மொட்டறாமலர்”; மொய்ம்முகையாகிய நாண்மலர். மேலே 34-ம்
பாட்டில் “கொந்து கொண்ட திருமலர்” என்பதன் கீழ்க் குறிப்புரை
காண்க.
நாண்மலர்
- என்பது அலருந் தருணத்தையும், பன்மலர்
- என்பது மலர்களின் பற்பல தொகை வகைகளையும் குறித்தன.
நாண்மலராகப் பன்மலர் கொய்து என்க.
ஏய்வன - ஏய்வனவாகிய. இதனைப் பனிமலர் என்பதனோடும்
சேர்க்க.
பனிமலர்
- நாயகன் பூசைக்கு ஏய்வன பலவும் நாயகி
பூசனைக்கு ஆகாமையினால் ஆலாலசுந்தரர் கொய்தவை பன்பலர்
என்று குறித்த ஆசிரியர், சேடியர் கொய்தவை பனிமலர் என்று
மட்டும் குறித்தனர் போலும்.
"புண்ணியஞ்
செய்வார்க்குப் பூவுண்டு" எனவும், |
"நாறும்
பூவும் தேவர்க்காம் - நாறாப் பூவும் தேவர்க்காம்" |
எனவும் வரும் புறனடை
விதிகளால், விதிப்படிக்குள்ள பூக்கள் கிடையாத போது எல்லாப் பூவும் பூசைக்கு ஆகும்
என்பது நாயகன்
பூசைக்கு உரியது. நாயகி பூசைக்கு அவ்வாறு விதியில்லாமையும்
கூறுவர். 26
|