362.
|
அளவிலா மரபின்
வந்த மட்பல மமுதுக் காக்கி
|
|
|
வளரிளந் திங்கட் கண்ணி மன்றுளா ரடியார்க்
கென்றும்
உளமகிழ் சிறப்பின் மல்க வோடளித் தொழுகு
நாளின்
இளமைமீ தூர வின்பத் துறையினி லெளிய
ரானார்.
|
3
|
(இ-ள்.)
அளவிலா......ஆக்கி - (அவர்) அளவுட்படாத
-
பரம்பரையில் தமது மரபு வழியே நின்று செய்துவந்த தொழிலிலே
செய்யும் மட்கலங்களைத் தமது இல்வாழ்க்கையின் சீவனத்துக்கு
ஆகிய அளவில் மட்டுமே ஆக்கிக்கொண்டு; வளர்.....ஓடளித்து
-
வளர் பிறையை அணிந்த இறைவனடியார்கள் வேண்டிய
பலிப்பாத்திரங்களை அவர்கள் எப்போதும் மகிழ்ந்து கொள்ளும்படி
நிறையக் கொடுத்து; ஒழுகு நாளில் - ஒழுகி
வருகின்ற நாளிலே;
இளமை....ஆனார் - இளமை மீதூர் தலினால்
சிற்றின்பத் துறையிலே
எளியராயினார்.
(வி-ரை.)
அளவிலா மரபின் வந்த - அளவு
காணமுடியாதபடி தொன்று தொட்டு வழங்கி வந்த மட்கலத்தொழில்.
அளவிட முடியாத பயனுடையதாய், ஆரியன் குலால
னாய்நின்றாக்குவ னுலக மெல்லாம் என்றபடி, இறைவனது சிருட்டித்
தொழிலுக்கு இணை சொல்லத்தக்க மரபில் வந்ததாய் உள்ள
என்றுரைத்தலுமொன்று.
அமுதுக்காக்கி -
அமுது சமைத்தற்காக வேண்டிய பற்பல
வகைகளிலும் படைத்து என்று உரை கூறுவாருமுண்டு. தமது
அமுதுக்கு - சீவனத்துக்காக மட்கலங்களையும், அடியார்க்கு உதவ
ஓடுகளையும் - பலிப்பாத்திரம் முதலியவையும் - செய்து வந்தார்
என்பதே சிறந்த பொருளாம். தமது குலத்துக்குரிய அளவிலா
மட்பாண்டங்களைச் சீவனார்த்தமாக வனைந்து என்பது இராமநாதச்
செட்டியார் உரைக்குறிப்பு.
வளர் இளந் திங்கட்
கண்ணி மன்றுளார் - வளர் திங்கள்
எனவும், இளந்திங்கள் எனவும் கூட்டுக. முன்னர்த் தேய்ந்து வந்தது
வளர்ச்சி பெறுவதாய் என்க. இளந்திங்கள்
- பிறைச்சந்திரன்.
மாதர்ப் பிறைக்கண்ணி யானை, போழிளங் கண்ணியினானை,
வளர்மதிக் கண்ணியி னானை என்ற அப்பர் பெருமான்
தேவாரங்கள் (திருவையாறு - காந்தாரம்) காண்க. திங்களைத்
தலையிற் சூட்டிய மாலைபோல அணிந்தவன். உளமகிழ் சிறப்பின் -
உள்ளம் மகிழத்தக்க சிறப்பினாலே. மல்க
- நிறைய. மகிழ் சிறப்பின்
உளம் மல்க என்று மாற்றிக் கூட்டியுரைத்தலுமாம்.
இளமை மீதூர
- இளமை மீதூரப்பெற்றதனாலே. மீதூர -
மிகுதிப்பாட்டை அடைந்ததனாலே. இன்பத்துறை
- இங்குச்
சிற்றின்பப் பகுதியாகிய காமச்செயல்களைக் குறித்து நின்றது.
எளியரானார்
- அது வலிமைபெறத் தாம் அதன்
ஆட்சிக்குட்பட்டு எளியராக ஆயினார். ஆயினவகை பின்பாட்டிற்
குறித்தார். பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் நூல்களிற்
றடுக்கப்பட்டதாயினும் எளியராயினமையில் அதனை
விலக்கலாகாதவராயினார்.
இளமை மீதூர
- என்பதற்குக் கழிந்த இளமை பிறர்போலக்
கழிந்தே போகாது மீளவும் பெறும்படியாக; மீது -
மேலும்; ஊர -
வர - என்ற சரிதக்குறிப்புப் பொருளும் தொனித்தல் காண்க. என்றும்
மன்றுளார் உளமகிழ் சிறப்பின் மல்க அடியார்க்கு ஓடளித்து என்று
கூட்டி யுரைத்தலுமொன்று.
அளவிலாப்
- பொருளின் மரபின் வாழ்க்கை - என்பனவும்
பாடங்கள். 3
|