364.
|
ஆனதங்
கேள்வ ராங்கோர் பரத்தைபா லணைந்து
நண்ண
|
|
|
மானமுன்
பொறாது வந்த வூடலான் மனையின்
வாழ்க்கை
யேனைய வெல்லாஞ் செய்தே யுடனுறை விசையா
ரானார்
தேனலர் கமலப் போதிற் றிருவினு முருவ மிக்கார். |
5 |
(இ-ள்.)
தேன்அலர்....மிக்கார் - தேன் பொருந்திய
செந்தாமரையின் விளங்கும் இலக்குமியைவிட அழகிற் சிறந்த
மனைவியார்; ஆன.....நண்ண - மேலே குறித்த
இயல்புடையராயின்
தமது கணவனார் ஒரு நாள் ஒரு பரத்தையிடம் அணைந்து,
மனையில் வந்தாராக; மானம்....ஊடலால்
- அதனால் எழுந்த
மானத்தினாலே வந்த மன வருத்தத்தை ஆற்றமாட்டாதவராகி
மேற்கொண்ட ஊடலினால்; மனையின்......ஆனார் -
மனை
வாழ்க்கையிலே செய்யவேண்டுவனவாகிய எல்லாக் கடமைகளையும்
விதிப்படி செய்து முடித்தும் கணவனாருடன் மெய்யுறுபுணர்ச்சி
ஒன்றினை மட்டும் இசையாதவராயினார்.
(வி-ரை.)
ஆன - ஆயின. மேற்சொன்ன தன்மைகளை
யுடையவரான என வருவித்துரைக்க. உயிர் இறைவனைச்
சார்தற்காகிய தன்மையெல்லாமுடையாரான என்று பொதுப்பட
வுரைத்தலு மொன்று.
கேள்வர்
- கணவர் கேண்மைக்கு உரியவர். அவரது
பகுக்கப்படாத நண்பு தமக்கே உரியவர். அதனைப் பகிர்ந்து
வேறொருத்திக்குக் கொடுத்தனர் என மானம் விளைந்ததாதலின்
அதுகுறிக்கக் கேள்வர் என்ற சொல்லாற் கூறினார்.
பரத்தை
- விலைமாது. சேரிப்பரத்தை என்பது பழந் தமிழ்நூல்
வழக்கு. ஆங்கு - அந்நாளில் ஒருநாள் - காலத்தைக்
குறித்தது.
இடங்குறித்ததாகக் கொண்டு அத்தெருவில் உள்ள என்றுரை
கூறுவாருமுண்டு. அவமதி கொண்டலையும் இந் நாளிற் போலன்றி,
முன்னாளில், யாண்டும் யாரும் இருத்தற்குரியரல்லர் எனக் கொண்டு
ஒழுகி வந்தனர்; பரத்தையர் தெரு, புறநகரில் ஒரு புறமாக
அமைவதாம்; ஏனைக் குடிமக்கள் வாழும் தெருவில் அவர்
வாழ்தற்கியையுமில்லை; ஆதலின் அது பொருந்தாதென்க.
மானமுன் பொறாது
- மானம் - எக்காலத்தினும் தமது
நிலையிற்றிரியாமையும், தாழ்வு வந்தவழி வாழாமையும் ஆம். இது
குடிப்பிறந்தார்க்கு இன்றியமையாததாம் என்று மணக்குடவரும், இது
குடிப்பிறப்பினை நிறுத்துதலுடையதெனப் பரிமேலழகரும்
சிறப்பித்துரைப்பர். தமது தன்மை குன்றுவன செய்யாமையும்,
இகழ்வார்மாட்டுச் செல்லாமையும், இளிவரவுபொறாமையுமென இது
மூன்று வகைப்படுமென்பர். மானமுன் பொறாது
மானத்திற்குத்
தாழ்வு வந்தவழி அதனைத் தாங்கலாற்றாது. “இளிவரின் வாழாத
மானம் “ என்ற குறளும் இக்கருத்துப் பற்றியது. இளிவரின் வாழாத
என்றதற்குத் “தமக்கோரிழிவுவந்துழிப் பொறுத்து உயிர் வாழாது“
என்ற பரிமேலழகர் உரையும் காண்க.இங்கு நாயனாரின் மனைவியார்
இளிவரவாகக் கொண்டது தாம் தமது நாயகரின் பகுக்கப்படாத
நண்பினுக்கு உரியராந் தன்மையிழந்தவராகக் கருதியேயாம்.
உடனுறைவாகிய புணர்ச்சிக்கு இசையாமை ஒன்றை இங்கு இளிவரின்
வாழாத மானமாய் மனைவியார் கொண்டனர். அது ஊடலிற் செலுத்த,
அது ஆணையிற் செலுத்த, மேற்சரிதம் நிகழ்ந்தது என்க.
பொறாது வந்த
- இளிவரவு பொறுக்கலாற்றாமையால் வந்த.
ஊடல்
- பிணங்கி நிற்றல். இதனையே புலவி என்றும்
சொல்வது வழக்கு. ஊடல் புலந்த செயலின் மேலும், புலவி புலந்த
சொல்லின் மேலும் வழங்கும்.இது இன்பத்திற்கின்றியமையாததென்பர்.
“ஊடுதல் காமத்திற் கின்பம்“, “துனியும் புலவியு மில்லாயிற்
காமங்
- கனியும் கருக்காயுமற்று“ - குறள். “.........நின்சேயிழையார்,
நலஞ்செய்த புல்லங்கண் மாட்டேந் தொடல்விடு நற்கலையே“
என்பது திருக்கோவையார் (358). ஊடலுவகை
- புலவி - முதலிய
அகப்பொருளிலக்கணங்களில் இதன் இயல்புகளையும், இது
கற்பிலக்கணத்துடன் முரணாமையும் அறிந்து கொள்க.
ஆயின் இவ்வூடல் “அதற்கின்பம் கூடி முயங்கப்
பெறின்“
என்ற தன்மையினின்று மாறி, இங்குப் பின்னர்க் காம இன்பக்
கூடுதலுக்குக் காரணமாகா தொழிந்ததுடன் அதனை இப்பிறப்பின்
ஆயுளளவுமிழத்தற்கே ஏதுவாயிற்றே? எனின், அற்றன்று.
ஏனையோரிடத்து நிகழும் ஊடல் கூடல்கள் இளமை நின்ற போதே
நிற்பனவாய், இப்பிறப்பின் சிற்றின்பத்துக்கும், பின்னர், முறையே
மூப்புச் சாக்காடுகளுக்கும் காரணமாய் ஒழிவன; இவ்வூடலோ எனின்,
மரணம் பிறப்பென்றிவையிரண்டின் மயக்கறுத்தற்கும், மீளப்பெற்ற
மாறா இளமைக்கும் அதனோடு கூடியனுபவிக்கும் என்றும் மாறாத
பேரின்பத்துக்கும், காரணமாயிற்று என இதன் சிறப்பினை
அறிந்துகொள்க.
ஏனைய
- மெய்யுறு புணர்ச்சி ஒன்றினை யொழிந்த மற்றைவை.
அவையாவன; நாயகனைப் பேணுதல், விருந்தோம்பல் முதலிய
மனைவாழ்க்கைக்குரிய பிற கடமைகள்.
உடனுறைவு மெய்யுறு புணர்ச்சி
- இணைவிழைச்சு என்பர்.
தேனலர் கமலப் போதில்
திருவினும் உருவம் மிக்கார் -
இது நாயனாரது மனைவியாரின் பருவமும் உருவமும் திகழ்ந்த
அழகின் உயர்வைக் குறித்தது. தேனலர் கமலப் போது
-
வண்டுகளால் அலர்த்தப்பெற்ற புதிதாய் அன்றலர்ந்த தாமரைப் பூ.
தேன் பொருந்திப் புதிதாய் அலர்ந்த என்றலுமாம். போதில்
திரு -
இலக்குமி. இங்கு உருவ மிகுதியே உவமானமாகக் கொண்டமையின்
கமலப்போதிலிருக்கும் இருவரில் திரு என்பது இலக்குமியைக்
குறித்தது. திரு - “கல்வியுடைமை பொருளுடைமை
என்றிரண்டு
செல்வமும்“ என்றபடி கல்விச் செல்வியையும் குறிக்குமாயினும்
இலக்குமியின் பொதுப் பெயராக வழங்குவதும் காண்க.
திருவினும்
- திருவைக் காட்டிலும். உருவம்- உருவத்தினால்-
அழகினால். உருபு தொக்கது. இது இங்கு இவரது அழகின் மிகுதி
குறித்தது. நாயகனுக்குரிய கடப்பாட்டின்படி இவ்வழகிய நாயகியாரைப்
புலவி தீர்த்துக்கூடி யின்பந்துய்தது வாழும் இன்பத்தினையும்
வெறுத்து அடிப்படுத்தித், “திருநீல கண்டம்“ என்ற
ஆணையொன்றினையே பாதுகாத்த நாயனாரது திருத்தொண்டி
னுறைப்பையும் திண்மையொழுக்க நடைசெலுத்திய வலிமையையும்
காட்டியபடியாம். இவ்வாறன்றி “இத்தகை அழகு வாய்ந்த
அம்மையாரிருப்ப நாயனார் பரத்தையரை விரும்பியது தவறு என்பது
குறிப்பு“ என்று விசேடமுரைப்பது பொருந்தாமையறிக. ஆயின்
அழகில்லா மனைவியரை நீத்துப் பரத்தையிற் சேர்தல்
தகுதியென்னவரும். பரத்தையர்களைப் பொருட் பெண்டிர்
-
வரைவின் மகளிர் முதலிய பெயர்களால் முன்னூல்களில் வழங்குவர்.
இவரோடணைதல் உலக நீதிநூல்களால் விலக்கப்பட்டதே.
“இருமனப்
பெண்டிருங் கள்ளுங் கவறுந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு“ -
குறள். |
முதலிய விதிகள் காண்க.
ஆயின் இங்கு இச்சரிதத்தின் குறிக்கோளை
மறந்து இவ்வாறு சாமானிய உலக ஒழுக்க நூல்களின் விதி
விலக்குக்களை அளவையாகக் கொண்டு ஆராய்ந்து முடிபு கூறுதல்
ஈண்டைக்கும் பொருந்தாத ஆராய்ச்சி என்பது அறிந்தோர் முடிபு.
மூர்க்க நாயனார் சூதாடி வந்த பொருளால் இறைவனடியாரை
ஊட்டினார். கண்ணப்ப நாயனார் வேட்டையாடி உயிர்க்கொலை
செய்து இறைவனை ஊட்டினார். கோட்புலி நாயனார் இறைவனை
ஊட்டும் திருவமுதுக்கு வைத்த நெல்லை உண்டு அவனது ஆணை
பிழைத்த கிளைஞரைக் கொன்றனர். இவற்றை எந்த நூல் விதிப்படி
அளவை காண்பது? உலகத்திலே இருந்தும் அதனைக் கடந்த
நிலையில் வாழ்ந்து, பார்வைக்கு மட்டும் ஏனை மனிதர்போல நின்ற
பெருமக்களுக்குச் சாமானிய உயிர்களுக்கு விதித்த உலகநீதி விதிகள்
யாங்ஙனம் பொருந்தும்?
இறைவனது “திருநீலகண்டம்“ என்ற ஒரு
சொல்லாகிய பேதியா
ஆணை கேட்ட உடனே, இருவரும் அவ்வில்லத்தைவிட்டு நீங்காது
ஒருங்கு வாழ்ந்தும் அப்போது தமக்கிருந்த இளமை மீதூர வின்பத்
துறையிலெளியராந் தன்மையையும், மனைவியாரது திருவினுமுருவ
மிக்க எழிலைத் துய்க்கும் உரிமையினையுந், திருமால் முதலிய
தேவருங் கடத்தற்கரிய காமத்தின் வலிமையையுங் கடந்து, மூப்பு
வரும்வரை நாள் கழித்து வாழ்ந்த நாயனாரது தன்மையை அளந்து
குறைவு நிறைவு காணுதற்கு இந்த உலக விதிவிலக்கு இலக்கணங்களா
அளவு கோல்களாகும்? நவீன ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறான
தவறாகிய ஆராய்ச்சித் துறையிற்சென்று உண்மை நாயன்மார்களாகிய
எந்தம் பெருமக்களின் சிவவாழ்க்கையிலே தவறுகண்டு
அபசாரப்படாமலிருப்பதே முறையாம். மேலும்,நாயனாரது இச்செயலே
இச்சரித நிகழ்ச்சிக்குக் காரணமாயினமையும் காண்க.
பரத்தையிற் பிரிவு என்பது தமிழின் முந்து நூல்களிற்கண்ட
முறை. அதன் முறையும் இயல்பும் அமைவும் அகத்தமிழ்
இலக்கணங்களுட் காண்க. இது தலைவன் தனக்கின்பம் வேண்டிப்
பிரிந்து பரத்தையிற் சேர்தலன்று என்பது அகத்தமிழ் இலக்கணம்.
“பரத்தையிற் பிரிதல் என்பது தலைமகளை
வரைந்தெய்திய
பின்னர், வைகலும் பாலே நுகர்வானொருவன் இடையே
புளிங்காடியுநுகர்ந்து அதனினிமை யறிந்தாற்போல,
அவணுகர்ச்சியினிமை யறிதற்குப் புறப்பெண்டிர் மாட்டுப் பிரியா
நிற்றல். அல்லதூஉம் பண்ணும் பாடலு முதலாயின காட்டிப்
புறப்பெண்டிர் தன்னைக் காதலித்தாற் றானெல்லார்க்குந்
லைவனாகலின் அவர்க்கு மின்பஞ் செய்யப் பிரியா நிற்றல்
என்றுமாம். அல்லதூஉம் தலைமகளை ஊடலறிவித்தற்குப் பிரிதல்
என்றுமாம். இவ்வாறொழிந்து தனக்கின்பம் வேண்டிப் பிரிவனாயின்,
“கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு மொண்டொடி
கண்ணே யுள“ என்பதனால், இவளுக்குத் தலைமகளென்னும்
பெயரோடு மாறுபட்டுத் தனது பெருமையோடு மாறுபடா நிற்கும்“
என்று பேராசிரியர் உரைத்தமையும் காண்க. இதனைக் குறிக்கவே
இங்கு ஆசிரியர்“ திருவினு முருவ மிக்கார்“ என்றதாம். “பரத்தைபா
லணைந்து“ என்றது நாயனார் பரத்தையைக் கூடினார் என்பதன்று
எனப் பொருள் கூறுவாருமுண்டு. எங்ஙனமாயினும் மேற்கூறிய
உரையாளரின் விசேட ஆராய்ச்சித் தவறு நாயனார்பாற் சாராமை
உணரப்படும். இவ்வாராய்ச்சி தமிழ் இலக்கண இலக்கியங்களிற் கூறிய
ஒப்பாரு மிக்காருமில்லாத தலைமகனுக்கெல்லாந் தவறு
கூட்டியதும்
காண்க.
பொறுத்துவந்த
- பொருதுவந்த - உருவின்மிக்கார் -
என்பனவும் பாடங்கள். 5
|