368.
|
இளமையின்
மிக்கு ளார்க ளிருவரு மறிய நின்ற
|
|
|
அளவில்சீ
ராணை போற்றி யாண்டுகள் பலவுஞ்
செல்ல
வளமலி யிளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்து மன்பு தம்பிரான் றிறத்துச்
சாயார்.
|
9 |
(இ-ள்.)
இளமையின்......செல்ல - இளமைப் பருவம்
மிகுந்த
அவ்விருவர் மட்டிலே தெரிய நிகழ்ந்து, அயலார் அறியாது
நின்றதாகிய அளவற்ற சிறப்பையுடைய அந்தஆணையைக் கடவாமற்
காப்பாற்றிக் கொண்டு, இவ்வண்ணமாய்ப் பலப்பல ஆண்டுகள்
சென்றுவிட்டனவாக; வளமலி...சாயார் - உடல்வள
முதலிய
வளங்களால் மலிந்த இளமைப் பருவம் நீங்கி, உரிய வடிவமைந்த
மூப்புப் பருவம் வந்து, அதனாலே தளர்ச்சியுற்று, உடல் கோலிற்
சாய்ந்து நடக்கும் தன்மை வந்ததாயினும், தமது பெருமானது
திறத்திலே தாம் வைத்த அன்பு சாய்ந்து கெடாத தன்மையில்
விளங்கினார்கள்.
(வி-ரை.)
இளமையில் மிக்குளார்கள் -
நாயனார் இளமை
மீதூரவின்பத்துறையினி லெளியராயினமை (362) முன்னர் உரைக்கப்
பெற்றது. மனைவியார் அவருக்கு இளையராதலின் அவரின் மிகுந்த
இளமையுடையார். எனவே, இருவரும் இளமையின் மிக்குளார்கள்
என்றார். தம்மின் மூத்த பெண்டிரை மணத்தல் நூல்களால்
விலக்கப்பட்டதன்றி அந்நாள் வழக்கிலுமில்லையாதல் உணர்க.
இருவரும் அறிய
- அயலறியாமை மேலே உரைக்கப்பட்டது.
ஆதலின் இவ்விருவருமே அறிய என்றார். பிரிநிலை ஏகாரம்
தொக்கது.
அறிய நின்ற -
அறிய நிகழ்ந்தது மட்டுமன்றி அவ்வாறே
நின்று வந்த தென்பது.
அளவில்
சீர் ஆணை - திருநீலகண்டத்தினது சிறப்பின்
அளவே அதன் பேரால் நிகழ்ந்த ஆணையின் அளவுமாம். புவனங்க
ளுய்ய நின்று நிகழ்வது நீலகண்டமாதலின் அதனைப்போலவே
அதன் ஆணையும் அளவற்ற சிறப்புடையதாயிற்று.
ஆணை போற்றி -
ஆணையின் வரம்பு கடவாமற் றமது
ஒழுக்கத்தைப் பாதுகாத்து. போற்றுதல் -
காப்பாற்றுதல் என்ற
பொருளில் வந்தது. பொருடனைப் போற்றி வாழ் என்றாற்போல.
வளமலி யிளமை
- உடல்வளம், உட்கரண புறக்கரணங்களின்
வளம், செயலின் வளம், முதலிய எல்லா வளமும் நிரம்பித் ததும்பும்
இளமைப் பருவம். நீங்கி - நீங்குதலால்; நீங்கவே.
வடிவுறு மூப்பு வந்து
- இளமை நீங்குதல் ஒரு நிலை; மூப்பு
வருதல் மற்றொரு நிலை. ஆதலின் நீங்கி
- வந்து என்றார். யாவர்
யாவர் எந்தெந்த தன்மையினாராயினும் உலகிலே ஊனடைந்த
உடம்பின் பிறவி பெற்றார் எல்லாரும் காலமுறையிலே
அவ்வவ்வுடலினியல் பாக இளமையும், பின் மூப்பு - பிணி -
சாக்காடு என்றிவைகளும் வரப்பெற்று ஒழிவர் என்பது நியதி.
தொன்றுதொடு நிலையாமை, மேயவினைப் பயத்தாலே யிவ்வுலகை
விட்ட கல - (திருநாவு - புரா - 27.)
வடிவுறு மூப்பு
- வடிவிலே நாள்கள் செலச் செல
உறக்கடவதாகிய மூப்பு. வந்து - உரிய காலத்திலே வந்து
சேர்ந்ததனாலே; வரவே. வடிவுறு என்பதனை இளமைக்கு
அடையாக்கி வடிவுறுவளமலியிளமை என்று கூட்டியிரைப்பாருமுண்டு.
வந்து சாய்ந்தும் - வருதலாற் சாய்ந்தும் என முடிக்க. வடிவுறு மூப்பு
- அழகிய மூப்பு என்றுரைத்தலுமொன்று. இளமையை விதிப்படிச்
செலுத்தி வாழாதார்க்கு மூப்பு விரைவில் வருதலுடன், அவர்களது
உருவத்தின் அழகினை அழித்து விகாரப்படுத்தியும்விடும் என்பது
உடல் நூற்றுணிபும் ஒழுக்கநூற்றுணிபுமாம். இங்கு நாயனார் -
மனைவியார் - இவர்களது வாழ்க்கை உடற்புணர்ச்சியும், அது
காரணமாகவரும் தாதுக்குறை முதலியனவும் இன்றியே
சென்றதாதலின் உரு வழியாமலே மூப்பு வந்தது. ஆதலின்
காலத்தால் வந்த அந்த மூப்பும் அழகு பெற நின்றது என்பதாம்.
மொய்த்துவளர்
பேரழகு மூத்தவடி வேயோ,
வத்தகைய மூப்பெனு மதன்படிவ மேயோ (178)என்றது காண்க. |
தளர்வொடு
சாய்ந்தும் - உடலிலே தளர்ச்சி, அதனால் வலி
குறைந்து சாய்ந்து தண்டூன்றிச் செல்லும் நடை முதலிய தன்மைகள்
பெற்றும். ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே, குந்தி நடந்து
குனிந்தொருகை கோலூன்றி, நொந்திருமி யேங்கி நுரைத்தேறி,
காளைவடி வொழிந்து கையுறவோ டையுறவாய், நாளு மணுகி
நலியாமுன், குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல், பயிலப்
புகாமுன்னம் என்பனவாதி திருவாக்குக்களால் ஐயடிகள்
காடவர்கோனாயனார் இதன் தன்மைகளை மிகத் தேற்றம்பெறத் தமது
க்ஷேத்திரத் திருவெண்பாவில் அருளியிருத்தல் காண்க. சாய்ந்தும் -
சாயார் - உடல் தளர்ந்தபோதிலும் அன்பிலே தளராமல் நின்றார்.
தனித்தொரு தண்டூன்றி மெய்தளரா முன்னம் (திருத்தாண்டகம்),
தம்பிரான் திறத்து - தமது இறைவனாகிய பெருமானிடத்து.
தம்பிரானிடத்து வைத்த அன்பிலே ஒரு சிறிதும் தளராது நின்றார்.
திறம் - திருநீலகண்டம் உலகமுய்ய வைத்த அருளின் திறம்.
அறியாநின்ற
- என்பதும் பாடம் 9
|