372.
|
நண்ணிய
தவச்சிவ யோக நாதரைக்
|
|
|
கண்ணுற
நோக்கிய காத லன்பர்தாம் புண்ணியத்
தொண்டரா மென்று போற்றிசெய் தெண்ணிய
வகையினா லெதிர்கொண் டேத்தினார்.
|
13 |
(இ-ள்.)
வெளிப்படை. மேலே கூறியவாறு நண்ணிய
தவக்கோலம் பூண்ட சிவயோக நாதரைக் கண்ணாரக் கண்ட
ஆசைமிகுந்த அன்பனார், இவர் புண்ணியத் தொண்டரேயாம் என்ற
கருத்துடன் துதித்து நினைத்திருந்த வகையினுக் கேற்ப எதிர்கொண்டு
சென்று வணங்கித் துதித்தார்.
(வி-ரை.)
தவச்சிவயோகநாதர் - தவக்கோலமுடைய
சிவயோகியார். தவம் நண்ணிய - செய்த தவத்தினாலே நண்ணிய
என்று கூட்டியுரைத்தலுமாம். யோக நாதர் - யோகிகளுக்கெல்லாம்
பெரியவர் - தலைவர். யோகத்தாற் கிடைக்கும் பொருளாகிய
இறைவர் என்றதும் குறிப்பாம்.
கண்ணுற நோக்கிய
- கண்களினாலே ஆர நோக்கிய.
கண்ணாரக் கண்டும் என் கையாரக் கூப்பியும் என்ற அம்மையார்
திருவந்தாதியும் (25) காண்க. இது குறிக்கவே நோக்கிய என்றதனோ
டமையாது கண்ணுற நோக்கிய என்றார். கண் காதலுற நோக்கிய
அன்பர் என்று கூட்டி உரைத்தலுமாம்.
காதலன்பர்
- மெய்யடியார்கட்கான பணிசெயும்
விருப்பினின்றவரான (361) தொண்டர். காதல்
- நாயகன்
நாயகிகளிடத்து நிகழ்வது. அடியார்களே தமது நாயகர்கள் -
தலைவர்களாவார் எனக் கொண்டு ஒழுகும் ஆசையாதலால் காதல்
என்ற சொல்லாற் கூறினார்.
உன்னடியார்
தாள்பணிவோ மாங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே யெங்கணவ ராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
(9) |
எங்கொங்கை
நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
(19) |
என்ற (திருவெம்பாவை)
திருவாசகங்கள் காண்க.
ஆசையொடு மானடியா ரடியாரை யடைந்திட்டு
என்பது
சாத்திரம்.
புண்ணியத் தொண்டராம்
- புண்ணியஞ் செய்தமையாலே
தொண்டராகப் பெற்றார் இவராகும். நாம் செய்த புண்ணியத்தினாலே
போந்த தொண்டர் - அடிமை செய்யும் புண்ணியமுதவும்
தொண்டர்
- என்றலுமாம். புண்ணியம் - இங்குச் சிவ புண்ணியம் குறித்தது.
போற்றிசெய்து எண்ணிய
வகையினால் - மனத்தாற்
றுதித்துக்கொண்டு இது வளர அன்பர் பணிசெய்வதிலே தாம்
எண்ணியிருந்த எல்லா வகையாலும், வழக்கமாய் அன்பர்களைப்
போற்றி எண்ணியிருந்த வகையினாலே என்றலுமாம். நித்தமாகிய
பத்திமுன் கூர (442) காண்க. எதிர்கொண்டு - எதிர்கொண்டு
சென்று.அவர் முன்னர் வரவேற்கச் சென்று. எத்தினார்
- உபசார
மொழி கூறித் துதித்தார்.
கூர
வந்தெதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவிப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரி வெய்த முன்னுரை செய்தபின் |
-
இளையான்குடியார் புராணம் - (3)
|
என்றமை
காண்க.
போற்றி
செய்து - என்பது கண்டவுடனே தாமிருந்த
நிலையில் மனத்தாலும் வாக்காலும் துதித்தல்; ஏத்தினாரென்பது
அவர்முன்னர்ச் சென்று உபசரித்துத் துதித்தல்.
தொண்டர்தாம்
- எண்ணிய வுவகையால் - என்பனவும்
பாடங்கள். 13
|