378.
|
சாலநாள்
கழிந்த பின்பு தலைவனார் தாமுன்
வைத்த
|
|
|
கோலமா
ரோடு தன்னைக் குறியிடத் தகலப்
போக்கிச்
சீலமார் கொள்கை யென்றுந் திருந்துவேட்
கோவர்
தம்பால்
வாலிதா நிலைமை காட்ட முன்புபோல் மனையில்
வந்தார்.
|
19 |
(இ-ள்.)
சால நாள் கழிந்த பின்பு - (இவ்வாறு மேவின
பின்னர்ப்) பல நாள்கள் சென்ற பின்பு; தலைவனார் - இறைவனார்;
தாம் முன்.....போக்கி - தாம் முன்னாளில் நாயனாரிடம் கொடுத்து
வைத்த அழகிய திருவோட்டினை அது வைக்கப்பெற்ற குறித்த
இடத்தினின்றும் அகன்று போகும்படிப் பண்ணி; சீலமார்........காட்ட
- சிவநெறிகாத்து வாழும் சிறப்பொழுக்கத்திலே எப்போதும்
திருத்தமாய் நின்ற குயவனாரிடம் விளங்கிய உண்மைத் தன்மையை
உலகினாருக்குக் காட்டுவதற்காக; முன்பு.......வந்தார்
- முன்பு
வந்தது போலவே அவரது மனையிலே எழுந்தருளி வந்தார்.
(வி-ரை.)
நாள்கழித்த பின்பு -
தலைவனார் - முன் வைத்த
- ஓடு தன்னைப் - போக்கி - வேட்கோவர் - நிலைமைகாட்ட -
மனையில் முன்புபோல் - வந்தார் - என்று கூட்டுக.
தலைவனார்
- முதல்வர். எல்லார்க்குந் தலைவர்
வைத்த -
வைத்துத் தருக (374) என்று வைப்பித்த. வைத்த
ஓடுதன்னை என்றியையும். வைத்த - வைப்பித்த எனப் பிறவினை
விகுதி விரித்துரைக்க. கோலம். முன் (375) கூறிய கோலம்.
குறியிடத்தகல குறியிடம் - மனையிலோர் மருங்கு காப்புறும் எல்லை
என்று (376) குறித்துக் கூறிய இடம். இடத்து அகல- இடத்தினின்றும்
அகல. நீக்கப்பொருளில் ஐந்தாம் வேற்றுமை உருபு தொக்கது.
இவ்வாறன்றி, நாயனார் மனையிலிருந்து தாம் குறித்த வேறிடத்திற்கு
அகலும்படி என்றுரைப்பாருமுளர்.
சீலமார் கொள்கை
- 360 - 361, திருப்பாட்டுக்களிற் குறித்த
சிறந்த நல்லொழுக்கங்கள் கொள்கை என்றும் திருந்து
- சீலம்
கொண்டொழுகுவதிலே எப்போதும் திருந்தி நின்றவர். சீலம் -
நல்லொழுக்கம். திருந்துதல் - வழுவாதியற்றுதல்.
வேட்கோவர் தம்பால்
- வேட்கோவரிடம் உள்ள நிலைமை
என்று இயையும். தம்பால் மனையில் வந்தார் என்று இயைத்
துரைப்பாருமுண்டு.
வாலிதாம் நிலைமை
- தூயதாகிய மெய்ம்மை நிறைந்து
விளங்கிய நிலை. “வாலிதாம் வெண்மை யுண்மைக் கருவினாம்
வளத்த“ (71) என முன்னர் அரனன்பர் சிந்தையைக் குறித்ததும்
காண்க. “வாலறிவன்“ என்ற குறளுக்கு மெய்யுணர்வினையுடையான்
(பரிமேலழகர்) என்றும், விளங்கின அறிவினையுடையான்
(மணக்குடவர்) என்றும் உரை கூறினமையும் காண்க. அஃதாவது
பிறர் யாவராலும் விலக்கற்கரிய காமத்தை விலக்கி, ஆணைபோற்றி,
இளமை முழுதும் கழிய, முதுமையின் விளங்கிய உள்ளநிலையாம்.
இதனையே “நீடுவாய்மை திகழுமன்பு“ (359) என முன்னும், “அயல
றியாத வண்ணம் அண்ணலாராணையுய்த்த மயலில் சீர்“ (403) எனப்
பின்னும் போற்றினார்.
காட்ட
- காட்டும் பொருட்டு. இதன் விரிவு (369) முன்னர்க்
“காட்டும் ஆற்றால்“ என்ற இடத்துக் காண்க.
முன்பு போல் - முன்பு தாங்கி வந்த அவ்வேடத்துடனே
-
முன்வந்தது போலவே. நிலை காட்டுதற்காக முன்னே ஓட்டினைத்
தந்தனர். (இப்போது அதனைப் போக்கிய பின்) தாம்மேற் கொண்ட
காட்டுந்தொழில் முற்றும் பொருட்டு முன்போலவே வந்தார் என்க.
முன்பு வைத்த
- என்பதும் பாடம். 19
|