380.
|
என்றவர்
விரைந்து கூற, விருந்தவரீந்த வோடு
|
|
|
சென்றுமுன்
கொணர்வான் புக்கார்; கண்டிலர்;
திகைத்து
நோக்கி
நின்றவர் தம்மைக் கேட்டார்; நேடியும் காணார்;
மாயை
யொன்றுமங் கறிந்தி லார்தா முரைப்பதொன்
றின்றி
நின்றார். |
21 |
(இ-ள்.)
என்று.....புக்கார் (மேற்பாட்டிற் கூறியபடி)
அவர்மிக
விரைவாகிய அதிகாரத்துடன் சொல்லுதலும், அந்தப் பெரிய
யோகியார் கொடுத்த திருவோட்டினை விரைந்து சென்று கொண்டு
வருவதற்காக வீட்டினுட் புகுந்தார் (தொண்டனார்); கண்டிலர் -
அதனைத் தான் வைத்த காப்புறும் எல்லையிற் காணாதவராயினர்;
திகைத்து...கேட்டார் - (அதனாலே) மதிமயங்கி
நோக்கி அங்கு
நின்றாரையும் கேட்டார்; (அவர்களும் அறியாராகவே) நேடியும்
காணார் - தாமே பிற இடங்களிலும் தேடிப் பார்த்தும் அதனைக்
காணாராயினர்; மாயை.....நின்றார் - அது
காணாது போயின
மாயையினை இன்னவாறென்று ஒன்றும் அங்கு அறியாதவராகி
மேலே யோகியார் பால் உரைக்கும் மொழி ஒன்றும் பெறாதவராகி
மனைக்குள் அவ்விடத்திலேயே நின்றார்.
(வி-ரை.)
என்று - ஓடு தந்து நில் என்று.
விரைந்துகூற -
விரைவில் நிறைவேற்றுங் கட்டளையாகச் சொல்ல.
இருந்தவர் - பெரிய தவசியார். யோகியார்
- தவச்
சிவயோகநாதர் (372) என்றது காண்க. தவத்திற் கிலக்காய் நின்றவர்
என்பாருமுண்டு.
கொணர்வான் புக்கார்
- கொணரும் பொருட்டு.வானீற்று
வினையெச்சம்.
திகைத்து நோக்கி
- அறிவுமயங்கி வழி ஒன்றும் தோன்றாது
நிற்றல்;அறிவு மயங்கியபோது உளதாம் மெய்ப்பாடு. நோக்கி என்றது
ஒன்றனையும் குறித்துப் பார்க்கும் நோக்கமன்று. மயங்கிய
பார்வையைக் குறித்தது.
நின்றவர்
- பக்கத்தில் நின்ற மனைவியார் என்று
கூறுவாருமுண்டு. கேட்டார் ஓடு போயின வகையைக்
கேட்டறிதலையும், நேடியும் காணார் - அதனைத் தாமே
கண்டறிதலையும் குறித்தது.
மாயை ஒன்றும் அங்கு
அறிந்திலார் - மாயை ஒன்றும் -
இஃது இறைவன்தனது மாயாசத்தி அருட்சத்திகளாலே வைத்து
வாங்கிய செயல் என்பதொரு சிறிதும். ஒன்றும் - ஒரு கூறாயினும்.
அங்கு - அவ்விடத்து; அப்போது என்றலுமாம். இங்கு அறிந்திலாதார்
ஆகிய நாயனார் இதன் விளக்கத்தைப் பின்னர்க் குளக்கரையிலே
இறைவன் மறைந்தபோது வானத்தில் விடைமேற் கண்டனர் என்பது
காண்க. (399 - 400) அங்கு - திரோதான மறைப்பினாலே ஓட்டினை
அகலப்போக்கிக் காணாமற் செய்த அவ்விடத்திலே. அங்கு
அறிந்திலார் - வேறிடத்திலே பின்னர் அறிந்தார் என்பது குறிப்பு.
உரைப்ப தொன்றின்றி
- சொல்லும்வகை ஒன்றுமில்லாமல்.
ஒன்றும் என்றதில் முற்றும்மை தொக்கது. நின்றார் - திகைத்த
விடத்தே மேற்செய்வதறியாது நின்று விடுதல் குறித்தது.
அறிந்திலாதார்
- என்பதும் பாடம். 21
|