| 381. 
             | 
           மறையவ 
            னாகி நின்ற மலைமகள் கேள்வன்  
                                          றானும் 
             
             | 
            | 
         
         
          |   | 
          உறையுளிற் 
            புக்கு நின்ற வொருபெருந் தொண்டர்  
                                           கேட்ப 
             
            இறையிலிங் கெய்தப் புக்காய்! தாழ்த்ததென்?  
                                     னென்ன, 
            வந்து  
            கறைமறை மிடற்றி னானைக் கைதொழு துரைக்க  
                                           லுற்றார், 
             
             | 
          22 | 
         
       
           (இ-ள்.) 
        மறையவனாகிய....என்ன - மறையவர் வேடந் தாங்கி  
        வந்து நின்ற பார்வதி பாகனாகிய அவரும், வீட்டினுள்ளே புகுந்து  
        மேற்சொன்னவாறு மயங்கி நின்ற ஒப்பற்ற பெரிய தொண்டர்  
        கேட்கும்படி விரைவில் இங்குத் திரும்பி வர உள்ளே புகுந்தவனே!  
        இவ்வளவும் தாமதித்த காரணமென்ன? என்று உரக்கக் கூவ;  
        வந்து...உற்றார் - உடனே (அத்தொண்டனார்) வெளியே திரும்பிவந்து,  
        விடக்கறுப்பை மறைத்த மிடறுடைய யோகியாரைக்  
        கைகூப்பித்தொழுது; பின் வருமாறு சொல்வாராயினார்.  
         
             (வி-ரை.) 
        மறையவன் - தனது உண்மைத் தன்மையை 
         
        மறைத்து வந்தவன் என்பதும் குறிப்பு. நின்ற - எங்கும் நிறைந்து  
        நின்ற என்பதும் குறிப்பு. நின்ற திருத்தாண்டகம் காண்க. 
         
             மலைமகள் கேள்வன் 
        -இப்போது யோகியாய் வந்தாராயினும்  
        பின்னர் உமையம்மையாருடன் வந்து அளவிலின்பத்திருத்துபவர்  
        என்பது குறிப்பு. 
         
             உறையுள் 
        - வீட்டிற்குள் அவ்வோட்டினை வைத்த காப்புறு  
        மெல்லை. 
         
             நின்ற 
        - நின்ற கேள்வன் நின்ற தொண்டர் கேட்பக் கூறினார்  
        என்றதொரு நயமும் காண்க. 
         
             இறையில் இங்கு எய்தப் 
        புக்காய் - இறையில் - மிக  
        விரைவில். எய்த - மீள வருதற்காக. வருவான்போல என்றலுமாம்.  
        வருகின்றேனென்று சொல்லி என்பாருமுண்டு. புக்காய் -புகுந்தவனே!  
        விளி; புகுந்தவனாகிய நீ என்றலுமாம். 
         
             என்ன 
        - உரத்துக் கூவ. தந்து நில் என முன்னர் விரைந்து  
        கூறியதற்கேற்ப உரைத்துக் கொள்க. பின்னரும் இவ்வாறே  
        செயிர்த்து நோக்கி (383) எனவும், பழிக்குநீ யொன்று நாணாய் 
         
        (385) எனவும், சிந்தைவலித்திருக்கின்றாய் (389) எனவும் கூறுவன  
        காண்க. 
         
             வந்து 
        - தவசியார் நின்ற இடத்தில் மீள வந்து. 
         
             கறை மறை மிடற்றினான் 
        - தாம் காதலித்து எப்போதும்  
        சொல்லிப் பத்தி செய்து ஏத்தி வந்த திருநீலகண்டத்தை மறைத்து  
        வந்தவன். அதன்பால் வைத்தபத்தியின் உறைப்பினாலே  
        வெளிவந்ததாயினும் சிறிது போழ்து மறைந்து நின்றதாதலின்  
        மறைமிடறு என்றார். கண்முன் வருதியானப் பொருள் (திருஞான -  
        புரா - 265) என்றதும் காண்க. 
         
             உரைக்கலுற்றார் 
        - உரைப்பாராகி; முற்றெச்சம். என்று  
        இறைஞ்சி நின்றார் - என்ற வரும்பாட்டின் வினைமுற்றுக் கொண்டு  
        முடிந்தது. தொண்டர் என்ற எழுவாய் வருவித்துரைக்க. 22  
        |