384.
|
கேடிலாப்
பெரியோ! யென்பால் வைத்தது கெடுத
லாலே
|
|
|
நாடியுங்
காணேன்; வேறு நல்லதோ ரோடு சால
நீடுசெல் வதுதா னொன்று தருகின்றே னெனவுங்
கொள்ளா
தூடிநின் றுரைத்த தென்ற னுணர்வெலா
மொழித்ததென்ன;
|
25 |
(இ-ள்.)
வெளிப்படை. என்றுங் கெடுதல் இல்லாத
பெரியோனே! என்னிடம் நீர் தந்தது காணாமற்போனபடியினாலே,
எங்கும் தேடியும் நான் அதனைக் கண்டிலேன்; அதனினும் நல்லதாய்
மிக நீண்ட நாள்கள் நின்று பயன்படத்தக்கதனையே தெரிந்து வேறு
ஓடு ஒன்று தருகின்றேனென்று நான் இறைஞ்சிக்கூறியதனையும்
தேவரீர் ஏற்றுக்கொள்ளாது கோபித்து நின்று சொல்லிய இவ்வுரை
எனது உணர்வு முழுமையையும் ஒழித்துவிட்டதுஎன்று நாயனார் கூற,
(வி-ரை.)
கேடிலாப் பெரியோய்! முன்னர்ப்பெரும என்றதை
விரித்துக் கூறினார். இறைவன் என்ற குறிப்புப் பொருளும் காண்க.
தோற்றமில்லாதவன்; ஆதலின் கேடுமில்லாதவன். உயிர்களுங்
கேடில்லாதவை; ஆயின் அவை சிறியவை; அணுத்தன்மையடைந்தன.
இவரோ அணுத்தருந் தன்மையிலையோன் காண்க (திருவாசகம் -
திருவண்டப் பகுதி) என்றபடிப் பெரியவர் என்பது குறிப்பு.
என்பால் வைத்தது
கெடுதலாலே - வைத்தது - வைத்தஅது.
அது - அவ்வோடு. கெடுதல் - காணாமற்போதல். பின்னரும்
பெயர்ந்து கரந்தது (393) என்றது காண்க. அகலப்போக்கி
(378)
என்றமையால் மறைந்து போயினமை கருதப்பட்டது. கெடுதல் -
அழிதல் என்ற பொருளில் வந்ததன்று. பொருள்களுக்கு
உருமாற்றமேயன்றிச் சொரூப அழிவு கூறுதல் சைவசித்தாந்தக்
கருத்துமன்று. கேடிலாதாய்! நீ வைத்ததும் கெடத்தகாததேயாம். பின்
என்னையோ எனின், என்பால் வைத்த அந்நிலைமை தான் மாறிற்று
என்பது குறிப்பாம். நாடியும் காணேன்- எங்கும் கண்ணாற் பார்த்துத்
தேடியும், மனத்தால் நாடித் தேடியும் அறிதற்கரிதாயிற்று. மனத்தினா
லுணர்தற் கெட்டா மாயை (200) என்றபடி. இறைவன் எல்லாம்
வைத்து வாங்கும் (உலகத்தோற்ற நிலை யிறுதிகளாகிய)
அருட்செயல்கள் உயிர்களின் அளவுபட்ட மனம் முதலிய
கரணங்களா லறியப்படா என்பது குறிப்பு. உலகெலாந் தேடியுங்
காணேன் என்ற (அருட்பத்து - 2.) திருவாசகம் காண்க.
வேறு -
அதனைப் போன்றதாகிய நற்பண்புகளுடையதாய்,
ஆனால் - அதனின் வேறாகியது. நல்லது - நீடு
செல்வது -
பண்புகள். ஓர் - ஒப்பற்ற என்றும், ஒன்று
- ஒன்றாகிய எண்
என்றும் குறித்தபடி. சாலநீடு - மிகவும் அதிகநாள்.
காலமிகுதி
குறிக்கச் சால என்றமையாது சாலநீடு என்றார். வேறு ஒன்று
எனக்கூட்டுக. செல்வது தான் - செல்வதுவே என்று தேற்றப்
பொருள் குறித்தது.
ஊடி நின்று உரைத்தது
- ஊடி - கோபித்து. முன்னர்ச்
செயிர்த்து நோக்கி (383) என்றது காண்க. நின்று - பிழை
பொறுக்குமாறு வேண்டியும் தணியாது. கோபத்திலேயே
நிலைத்து
நின்று உட்காராமல் நின்றுகொண்டு என்றலுமாம். ஊடி உரைத்தது -
நின்று உரைத்தது எனப் பிரித்துக் கூட்டுக. ஊடலால் விளைந்த
(364) இச்சரித நிகழ்ச்சியை ஊடலினாலே வெளிப்படுத்தித்
தீர்த்தற்காக நிற்பார்போல ஊடி நின்று என்பதும் குறிப்பு.
என்ன
- என்று சொல்ல. தொண்டர் என்ற எழுவாய் தொக்கி
நின்றது. ஆன்ம போதம் எழாமல் முற்றும் மறைந்து நின்ற
நிலையாதலின் எழுவாயும் மறைந்து நின்றது போலும். 25
|