| 396. 
             | 
           மனைவியார் 
            தம்மைக் கொண்டு மறைச்சிவ யோகி 
                                             யார்முன் 
             | 
            | 
         
         
          |   | 
          சினவிடைப் 
            பாகர் மேவுந் திருப்புலீச் சரத்து  
                                              முன்னர் 
            நனைமலர்ச் சோலை வாவி நண்ணித்தம் முண்மை 
                                            காப்பார் 
             
            புனைமணி வேணுத் தண்டி னிருதலை பிடித்துப்  
                                             புக்கார். 
             
             | 
          37 | 
         
       
            (இ-ள்.) 
        வெளிப்படை. தம் வீட்டிலிருந்து மனைவியாரையும்  
        உடன் அழைத்துக்கொண்டு வேதியராகிய சிவயோகியார் முன்னே,  
        பிரமாணம் செய்யும் பொருட்டு, இடபவாகனராகிய சிவபெருமான்  
        எழுந்தருளிய திருப்புலீச்சுரம் என்னும் திருவாலயத்தின் முன்பு  
        அமைந்துள்ள மலர்ச்சோலை சூழ்ந்த வாவியினை அடைந்து, தாம்  
        கைக்கொண்டொழுகிய திருவாணை காக்கும் உண்மைத்  
        தன்மையினைக் காப்பாற்றுவாராகிரு அதற்கு மாறுபடாமற் பொந்திய  
        வகையாலே சபதமும் செய்யும் பொருட்டு அழகிய மூங்கிற்றண்டின்  
        இருதலையையும் முறையே நாயனாரும் மனைவியாருமாகப்  
        பிடித்துக்கொண்டு மூழ்கித் தரும்படித் துணிந்து வாவியினுள்ளே  
        புகுந்தனர். 
         
             (வி-ரை.) 
        மறைச்சிவ யோகியார் - மறைகளாற் 
         
        பேசப்பட்டவர். தம்மைக் கொண்டு - தம்முடன் மனைவியாரையும்  
        கொண்டு. யோகியார் முன் - அவரது திருமுன்பு- 
        அவர் காணும்படி.  
        முன் நண்ணி என்று கூட்டி, அவர் நண்ணுமுன்னர்த்தாம் விரைந்து  
        நண்ணி என்றுரைத்தலுமாம். முன் - அயலறியாதபடி 
        அந்தரங்கமாக  
        நிகழ்ந்த சபதத்தையும் நீரே அறிவீர்; இதனையும் நீரே காண்பீர்  
        என்ற குறிப்பு. 
         
             சினவிடைப்பாகர் 
        - வெங்கண் விடையவர் (388) என  
        முன்னருங்கூறினர்.  
         
             1திருப்புலீச்சுரம் 
        - தில்லையில் நடராசர் கோயிலுக்குச் சிறிது  
        தூரத்தில் மேல்பால் உள்ளதொரு சிவாலயம். வியாக்கிரபாத  
        மாமுனிவர் தமது ஆன்மார்த்தமாய்த் தாபித்துப் பூசை செய்த  
        கோயிலாதலால் இப்பெயரெய்தியது; பலிக்கால் முனிவர் பூசித்ததால்  
        புலீச்சுரம் என்பர். தாடகை பூசித்தது தாடகேச்சுரம்; அனந்தர்  
        பூசித்தது அனந்தேச்சுரம் என்பன போலக் கொள்க.  
        இத்திருக்கோயிலில் தமது முடியினையே விளக்காயெரித்துப்  
        பேறுபெற்றனர் கணம்புல்ல நாயனார் என்பது பின்னர் அறிக.  
        இப்புராண நிகழ்ச்சி காரணமாக இதனை இளமையாக்கினார் கோயில்  
        - இளமை நாயனார் கோயில் எனவும் வழங்குவர். 
         
      
         
          தடமா 
            மலர்கொண் டுவணங் கியருந் தவமா முனிதில்                                லைவனச் 
            சரியே 
            குடபா லணைவான் மணமா மலருங் குளமுங் கரையுங்  
                                            களமுங் 
            குறுகித் 
            திடமார் தருவே நிழலா வெழிலார் சிவலிங் கமிருத்  
                                          தியருத் 
            தியொடங் 
            கிடமா கவிரண் டிடமும் பணிவுற் றிறையே துணையா  
                                          கவிருந் 
            தமர்நாள் | 
         
         
          |                     - 
            வியாக்கிரபாதச் சருக்கம் - 14 | 
         
       
           என்ற 
        கோயிற்புராணங் காண்க. மறை - தம்மை மறைத்த 
         
        என்றதும் குறிப்பு.  
         
             முன்னர் 
        - திருக்கோயிலுக்கு வெளியே அதன் எதிரில் உள்ள. 
         
             2நனைமலர்ச்சோலை 
        வாவி - தேன்பொருந்திய மலர்கள்  
        நிறைந்தசோலைசூழ்ந்த குளம். மேலே காட்டிய கோயிற்  
        புராணத்திலே மணமா மலருங் குளமும் என்றதும் காண்க.  
        இங்ஙனமன்றிச் சோலைபோல மலர்ந்த நீர்ப்பூக்களையுடைய வாவி  
        என்றுரைப்பாருமுளர். அது பொருந்தாமை யறிக. இக்குளம்  
        வியாக்கிரபாத தீர்த்தம் எனவும், இளமை நாயனார் குளம் எனவும்  
        பெயர்பெறும். இது தில்லையில் இறைவன் சிறப்புக் காலங்களில்  
        எழுந்தருளித் தீர்த்தங்கொடுக்கும் பத்துத் தீர்த்தங்களுள் ஒன்று.  
        சிவகங்கை, பரமானந்தகூபம், புலிமடு, அனந்ததீர்த்தம், நாகசேரி,  
        பிரமதீர்த்தம், சிவப்பிரியை, திருப்பாற்கடல், குய்ய தீர்த்தம் (கடல்)  
        என்பன ஏனை ஒன்பதாம். 
         
             தம் உண்மை காப்பார் 
        - உண்மை - உள்ளத்தினுள் வைத்து  
        ஒழுகிய திருநீலகண்ட ஆணை. 
         
             காப்பார் 
        - அதன் வரம்பு கடவாமற் பாதுகாப்பவராகி.  
        முற்றெச்சம். காப்பார் புக்கார் என்று கூட்டி முடிக்க. 
         
             புனைமணி வேணுத் தண்டு 
        - வடிவுறு மூப்பு வந்து  
        தளர்வொடு சாய்ந்து நின்றார் (368) நாயனார் ஆதலின் அதன்  
        பொருட்டுத் தாம் தாங்கி ஊன்றி நின்ற வேணுத் தண்டு என்க.  
        குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி என்ற  
        பதினோராந்திருமுறை காண்க. (ஐயடிகள் - க்ஷேத்திர வெண்பா - 3)  
        தண்டு கிழக்கோலத்துக்குரியது. புனை - கையிற் கொண்ட; மணி -  
        அழகிய. நாயனார் கையிற்றாங்கியதால் சிறப்புப்பெற்றது.  
        மணிகளையுடைய என்றுரைப்பாருமுண்டு. மூங்கில்  
        முத்தீமைதென்பதுமாம். 
         
             இருதலை பிடித்து 
        - உண்மை காக்கும் பொருட்டுத்  
        தீண்டாதிருத்தலும், அதனுடன் பொருந்திய வகையால், மூழ்கித்தரும்  
        பொருட்டுத் தீண்டுதலும் ஆக இருவகையினையும் கைக்கொண்டு  
        என்ற குறிப்பும் காண்க. 
         
             புக்கார் 
        - மூழ்கப் புகுந்தார். துணிபு பற்றிய முயற்சியினின்றார். 37 
         
       
            1(1) 
        இத்திருக்கோயிலில் சில ஆண்டுகளின் முன்னர்  
        நடைபெற்ற கும்பாபிடேக காலத்தில் பெருந்தீ உண்டாகி அனேக  
        அன்பர்கள் முடியும் உடலும் எரிந்து இறைவனடி சேர்ந்தனர். இதிற்  
        காணும் படம் கும்பாபிடேக காலத்தில் எடுக்கப்பெற்றது. 
         
             2(2) இக்குளத்தில் 
        நாயனார் - மனைவியார் இவர்கள்  
        மூழ்கும்போது நின்ற முதுமைக் கோலமும், பின்னர்த் திருவருளால்  
        மீளப் பெற்ற இளமைககோலமும் குளக்கரையில் தீட்டப்பெற்றுள்ளன.  
        இச்சிறப்பு நோக்கிக் கோயிற் புராணத்திலே குளமுங் கரையும்  
        என்றது காண்க. திருக்கோலங்களைப் படத்திற் காண்க.  
	 |