40. அந்த ணாளரு மாங்கது கேட்டவர்
 
  “பந்த மானுடப் பாற்படு தென்றிசை
இந்த வான்றிசை யெட்டினு மேற்பட
வந்த புண்ணிய மியா”தென மாதவன்.
30

     (இ-ள்.) அந்தணாளரும் ... கேட்டவர் - அவ்வாறாகிய
அது கேட்ட முனிவர்களும்; பந்த ... மாதவன் - பாசப்பட்ட
மானுடர்கள் பிறந்து வருதற்கிடமாகிய (எட்டுத் திசைகளிலும்)
தென்திசை மேலாக இவர் அங்குப் போந்ததற்கு உரியதாம்படி அது
செய்த புண்ணியம் யாது? என்று வினவ, உபமன்னிய முனிவர்
மேல்வருமாறு சொல்வாராயினர்.

     (வி-ரை.) அந்தணாளர் - முனிவர் - துறவிகள்; இங்கே
இது கேட்ட அரபத்தர் முதலிய மாதவர்கள்; யோகிகள். “அந்தண
ரென்போ ரறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ், செந்தண்மை பூண்டொழுக
லான்” - குறள். இது காரணப்பெயர். அழகிய தட்பத்தை ஆள்பவர்
- வரம்பின்றி எல்லா உயிர்களிடத்தும் செல்லும் குளிர்ந்த
கருணையை ஆள்பவர்; ஆளுதல் - கையாளுதல் -
கொண்டொழுகுதல் என்க. உலகர் இதனை அறிந்துய்யும்படி
அவர்கள் மேல் வைத்த கருணையினாலே இவ்வரலாறு மேலும்
கேட்டார்கள் என்பது குறிப்பு. அங்கணாளன் அருளை அந்தணாளர்
கேட்டார் என்ற சொல்லழகும் காண்க.

     பந்த மானுடம் - மேலே மையல்மானுடம் என்றதாம். பந்தம்
பிறவியின் இயல்பு குறித்த அடைமொழி. ஆலாலசுந்தரர்
பந்தப்பட்டார் என்பதன்று, “புற்றாடரவா” (தேவாரம்) என்பதுபோல.

     மானுடப் பாற்படுதல் - மனிதப் பகுதியிலே அகப்படுதல்.
நற்பாற்படுத்தென்னை” என்ற திருவாசகம் காண்க. (தோணோ -
4). உயிர்களைப் பிறப்பித்துப் பாசம் போக்கிப் பாற்படுத்துவதற்காக
அமைந்த தென்றிசை என்க. பாற்படுத்துதல் - சிருட்டித்தல்.

     இப்பாட்டினை மேல்வரும் 37-வது பாட்டிலே, என்று மாதவனாகிய (30) மாமுனிவன் சொன்னபடி என்பதனோடு
கூட்டிமுடிக்க.

     31 முதல் 36 வரை உள்ள பாட்டுக்களில் தென்றிசையே
மற்றத் திசைகளில் மேம்பட்டதற்குரிய காரணம் சொல்லப் பெறும்.
“திசையனைத்தின் பெருமை யெலாந் தென்றிசையே வென்றேற”
(திருஞான - புரா - 24) எனக் கூறுவது காண்க.

     மேலே மாமுனிவர் “மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திட”
என்றாராகலின் முனிவர்கள் அதனை விளக்கும்படி கேட்டார் என்க.

     பந்தமானுடப் பாற்படும் இந்த வான்திசை எட்டினும்,
தென்திசை மேற்பட என்று மாறிக் கூட்டுக. மேம்பட - என்பதும்
பாடம். 30