416.
|
மனைவியார்
சுற்றத் தாரும் வள்ளலார் சுற்றத்
தாரும்
|
|
|
இனையதொன்
றியாரே செய்தா?ரியற்பகை பித்த
னானாற்
புனையிழை தன்னைக் கொண்டு போவதா
மொருவ?
னென்று
துனைபெரும் பழியை மீட்பான் றொடர்வதற்
கெழுந்து
சூழ்வார்,
|
13 |
(இ-ள்.)
மனைவியா...என்று - மனைவியாராகிய அம்மையாரது
சுற்றத்தார்களும், வள்ளலாராகிய நாயனாரது சுற்றத்தார்களும் இது
போன்றதொரு செயலை யார்தான் இதுவரைச் செய்தர்கள்? வேறு
ஒருவரும் செய்யாத செய்கை செய்யுமாறு இயற்பகை பித்தம்
கொண்டு விட்டானானால் அது காரணமாக மனைவியாரைக்
கொண்டு ஒருவன் போய் விடுவதாகுமா? என்று கருதி;
துனை...சூழ்வார் - இச்செயலால் உற்ற பெரும் பழியினின்றும்
மீட்பதற்காக அவரைப் பற்றித் தொடர்வதற்குக் கூடி எழுந்து
சூழ்வார்களாகி,
(வி-ரை.)
வள்ளலார் - கொடுத்தற்கரிய
மனைவியைக்
கொடுத்தும் விடுத்தும் புரிந்த கொடைச் சிறப்பு நோக்கி இங்கு
வள்ளலார் என்ற பெயராற் கூறினார். வள்ளல் -
வரையாது
கொடுப்போன். அதனினும் மிக்க சிறப்புத் தோன்ற, வள்ளல்
என்றமையாது, பன்மையாக்கி வள்ளலார் என்றார்.
பித்தனானால்
- நாட்டவர் பிறரெவரும் செய்யாத பழிச்
செயலைக் கூசாது வெளிப்படையாய்ச் செய்த அதனால் அவன்
பித்தனேபோன்றனன்; அவ்வாறு அவன் பித்தனேயாயினும்.
புனையிழை
- இழை - இழைக்கப்பட்டது. செயப்படுபொருள்
விகுதி குன்றியது. புனையிழை - அணிகள் புனைந்து
அம்மையாரைக் குறித்த அன்மொழித் தொகை.
வணிகர்களாயினமையின் அணிகளின் விலையைக்
கருதினார்கள் என இங்கு விசேடவுரை காண்பாரு முண்டு. பின்
நிகழ்ச்சிகளால் ஆசிரியர்க்கேனும், சுற்றத்தார்க்கேனும் அது
கருத்தன்றென்று விளங்கும்.பழி போக்குவதே அவர்கள் கருதியதாம்.
துனை பெரும் பழியை
- துனை - துன்னுவதாகிய (துன் -
பகுதி); பழியை - பழியினின்றும். வேற்றுமையுருபு மயக்கம். மீட்பான்
- மீட்பதற்கு - மீட்கும் பொருட்டு பானீற்று வினையெச்சம்
பழியினின்றும் நாயனாரையும் மனையிாரையும் குலத்தையும் மீட்க -
விடுவிக்க. பழிவிட (418) என்று கூறுவது காண்க.
சூழ்வார்
- முற்றெச்சம். சூழ்வார் - எதிர்வளைத்துக்
கொண்டார் என முடிக்க.
யாரேசெய்தார்
- ஒருவரும் செய்தாரிலர். வினா எதிர்மறைப்
பொருளில் வந்தது. 13
|
|
|
|