417.
|
வேலொடு
வில்லும் வாளுஞ் சுரிகையு மெடுத்து
மிக்க
|
|
|
காலென
விசையிற் சென்று கடிநகர்ப் புறத்துப்
போகிப்
பாலிரு மருங்கு மீண்டிப் பரந்தவார்ப் பரவம்
பொங்க
மால்கடல் கிளர்ந்த தென்ன வந்தெதிர்
வளைத்துக்
கொண்டார்.
|
14 |
(இ-ள்.)
வெளிப்படை. வேலுடனே வில்லும் வாளும் சுரிகையும்
என்றிவற்றை எடுத்துக்கொண்டு, அளவில் மிக்கு எழும்
காற்றினைப்போல வேகமாகப் போய்க் காவல்பொருந்திய அந்தப்
பட்டினத்தின் புறத்திலே சென்று நெருங்கிப் பரந்த ஆரவாரத்துடன்
பெருஙகடல்தான் பொங்கிக் கிளர்ந்ததோ என்னும்படி எதிரில் வந்து
வளைத்துக் கொண்டார்கள்.
(வி-ரை.)
வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து
- இப்படைகளை உரிய வகையில் தாங்கிக் கொண்டு. சுரிகை -
குற்றுடைவாள். வாள் தூரத்திலும் சுரிகை நெருக்கத்திலும்
பயன்படுவன. சுரிகையாற் குத்துவர்; வாளினால் வீசி வெட்டுவர்.
காதன் மேவிய சுற்றத்தார் இவ்வாறு படையேந்தித் தடுக்க வருவர்
என்று எதிர்நோக்கியே நாயனார் தாம் முன்னரே வாளும்
பலகையும்ஏந்தி வந்தனர். நாயனார் ஒருவரே யாதலினாலும், மிக்க
வலியுடையார் ஆதலினாலும் அவர்க்கு வாள் ஒன்றே
போதியதாயிற்று. இவர்கள் பலராதலால் பலபடை எடுத்து வந்தனர்.
அன்றியும் ஒரே படை கொண்டு பலவும் செய்ய வலியிலர்
என்பதுமாம். இவர்கள் அனைவரும் நாயனார் ஒருவர்க்குத்
தோற்றொழிதல் பின்னர்க் காண்க. மாட்டாரே பலவற்றைக்
கைக்கொள்வார். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது
பழமொழி. அன்றியும் இவைஎவற்றினுக்கும் மேலாய்ச் சிவன் பாலே
தம்மை ஒப்புவித்த அடியாரை யாவரும் வெல்லவல்லரல்லர் என்பது
கை கண்டவுண்மை. திருநாவுக்கரசர் முதலிய பெரியோர்
சரிதங்களைக் காண்க.
ஒருவர் தமர்நாம், அஞ்சுவது யாதொன்று மில்லை,
அஞ்ச
வருவதுமில்லை. என்
உளமே புகுந்த அதனால், ஞாயிறு
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு
முடனே, ஆசறு நல்ல அவைநல்ல நல்ல அடியாவர்க்கு மிகவே
முதலிய தேவாரங்களும் காண்க.
ஆராலு
மென்ளை யமட்ட வொட்டாதினிச், சீரார் பிரான்
வந்தென் சிந்தை புகுந்தனன் - ஒன்பதாந் தந்திரம் - 312 என்பது
திருமந்திரம்.
வீரமென்னால்
விளம்புந் தகையதோ? (144) என்றதும்
காண்க. இது பற்றித் திருக்கூட்டச் சிறப்பிற் கண்ட பகுதிகளும்
நினைவுகூர்க.
வேல்
- வேல் கையினின்றும் எறியப்பட்டுப் பகைவன்பால்
விடுத்தும், அவ்வாறு எறியப்படாது கையிற் கொண்டு இருவழியும்
தொழிற்படுவது. இது ஒருவகைப்படை. அவ்வாறில்லாது, வில்
-
வாள் சுரிகை - முதலியன உடையவன் கையினின்றகலாது நின்றே
தொழிற்படுவன. இவை மற்றொரு வகைப்படை. ஆதலின்
இவ்வேறுபாடு குறிக்க வேலொடு என்று ஒடுக் கொடுத்து அதனைத்
தனிப் பிரித்துக் கூறினார். கையினின்று விலகித் தொழில் செய்வன,
விலகாது தொழிற்படுவன என்ற இப்பொருள் பற்றியே அஸ்திரம்
-
சஸ்திரம் என வகைப்படுத்திக் கூறுவர் வடநூலார். எனவே, இங்கு
எல்லாவகைப் படைகளும் கூறியதாம்.
கடி நகர்
- புகார் நகரம் - காவிரிப்பூம்பட்டினம். இது சோழ
மன்னர்களின் தலைநகரங்களில் ஒன்றாய்ப் பல வகையாலும் சிறந்து
விளங்கினமையால் மதில் முதலிய பலவகைக் காவலும்
பெற்றிருந்ததைக் குறிக்கக் கடி நகர் என்றார். இங்குப் பழியினின்று
மீட்குஞ் செய்கை கூறுமிடமாதலின் காவல் மிகுதி குறித்த
அடைமொழி தந்ததாம்.
சூழ்வார்
எதிர்வளைத்துக் கொண்டார் - நகரினின்றும்
இவர்கள் வெளிப் புறப்படுவன்தன்முன், சுற்றி வளைத்துக்கொள்ள
முன்னும், மருங்கும் சென்று சூழ்ந்து வளைத்துக்கொண்டார்கள்
என்க.
ஆர்ப்பரவம்
- ஆர்ப்பும் அரவமும். படைகளின் ஒசை -
பலரும் கூடி விரைவிற் செல்லும் கிளர்ச்சியின் ஒசை, இவர்கள்
சொல்லோசை முதலிய பல வகை ஒசைகளும் சேர்ந்து விரவுவது
குறிக்க. ஆர்ப்பு - அரவம் - எனப் பல சொற்களாற்
கூறினார்.
ஆரவாரம் என்றலு மொன்று. ஆர்ப்பரவமானது கடல் பொங்கிக்
கிளர்ந்தது என்னும்படியாக - என உரைத்தலுமாம். கடல்
பொங்குவதற்கு அணியதாதலும் காண்க.
பொங்கி
- என்பதும் பாடம். 14
|