419.
|
மறைமுனி
யஞ்சி னான்போன் மாதினைப் பார்க்க
மாதும்
|
|
|
இறைவனே! யஞ்ச வேண்டா; வியற்பகை
வெல்லு
மென்ன;
வறைகழ லண்ணல் கேளா வடியனே னவரை
யெல்லாந்
தறையிடைப் படுத்து கின்றேன்; றளந்தருள்
செய்யே
லென்று,
|
16 |
(இ-ள்.)
வெளிப்படை. (அவர்கள் அவ்வாறு வருதல் கண்டு)
மறை முனிவர் பயந்தவர்போலக் காட்டி அம்மையாரைப் பார்க்கவே,
அவரும் தலைவரே! பயப்படவேண்டாம்; அவர்களை இயற்பகை
வெல்லும் என்று சொல்ல; இதனைச் சத்திக்கும் வீரக் கழலணிந்த
பெருமையுடையாராகிய நாயனார் கேட்டு, அடியேன் அவர்களை
எல்லாம், உமக்கு இடையூறு செய்யாமல் நிலத்தில் வீழ்த்தி
விடுகின்றேன்; தேவரீர் தளரவேண்டாம் என்று சொல்லிக்கொண்டே,
(வி-ரை.)
மறைமுனி - மறைகளாற் பேசப்பெற்ற
முனிவர் -
சிவபெருமான். பொறிவாயி லைந்தவித்தான் - (குறள்);
நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும், வென்றானை -
(திருவீழி - திருத்தாண்டகம் - 3) முதலிய திருவாக்குக்களில்
இறைவனது முனிவராந்தன்மை விதந்து பேசப் பெற்றிருத்தல் காண்க.
முனிவராந்தன்மையை மறைத்துத் தூர்த்த வேடந்தாங்கி வந்தவர்
என்றுரைத்தலுமாம். பின்னருந் தவமுனி (430) என்றதும் காண்க.
அஞ்சினான்போல்
- உண்மையில் அஞ்சினாரன்று; கொண்ட
வேடத்திற்கும், வந்த செயலுக்கும் ஏற்ப முன்னர்க் கழிபெருங் காதல்
காட்டியது (418) போலவே இங்கு அச்சமுங் காட்டினார்.
மாதினைப் பார்த்தது சுற்றத்தார் வந்தபோதும்
அம்மை
மனந்திரியாமையை உதகரிக்கக் காட்டுவதற்கு.இறைவனே
- கணவர்
பணியை ஏற்றுச் சென்று நின்றவராதலின் வேதியரைத் தலைவராகக்
கொண்டதற்கேற்ப இறைவன் என்று விளித்தார். எல்லார்க்கும்
இறைவன் என்ற குறிப்புமாம்.
இயற்பகை வெல்லும்
- நாயகிகள் தமது கணவர் பெயரைச்
சொல்லலாகாது என்பது விதியும் வழக்குமாம். இங்கு அம்மையார்
இப்போது தாம் வேதியரது உடைமைப் பொருளாயினமையாலே
நாயனாரிடத்து அவர் தமது கணவர் என்ற நினைப்பினை அறவே
ஒழித்து நின்றனர். ஆதலின் அவர் பேராற்கூறியபடியாம். வெல்லும்
- பலர்பா லொழிந்த நாற்பாலிலும் பொருந்துவதாகிய செய்யும் எனும்
வாய்பாட்டு வினைமுற்றாற் கூறிய அழகினைச் சிந்திக்க.
அறைகழல் அண்ணல்
- வீரமும் பெருமையும் ஒருங்கே
உடையார் என்பது குறிப்பு. கழல் - வீரங்குறித்தது.
தறை
- எதுகை நோக்கித் தரை என்பது தறை வல்லினமாய்
வந்தது.
தளர்ந்தருள் செய்யேல்
- அருள் செய்தல் இங்கு உபசாரங்
குறித்த மொழி மாத்திரமாய் நின்றது. தளரேல் என்க.
அறை கழலன்பர்
- என்பதும் பாடம். 16
|