| 421. 
             | 
	       ஏட!நீ 
            யென்செய் தாயால்? இத்திற மியம்பு  
                                           கின்றாய்; 
             
             | 
	        | 
	 
	
	|   | 
	      நாடுறு 
            பழியு மொன்னார் நகையையு நாணா;  
                                             யின்று 
             
            பாடவ முரைப்ப துன்றன் மனைவியைப் பனவற்  
                                            கீந்தோ? 
             
            கூடவே மடிவ தன்றிக் கொடுக்கயா மொட்டோ  
                                           மென்றார். 
             
             | 
	      18 | 
	 
	 
             (இ-ள்.) 
        வெளிப்படை. (நாயனார் இவ்வாறு சொல்லிப்  
        போர்க்கு நேரவே) சுற்றத்தார்கள், ஏட! நீ என்ன காரியம்  
        செய்தனை? இந்நாட்டவர்க்கு உன் செய்கையால் வருகின்ற  
        பழியினையும், பகைவர் இகழ்ந்துநகைப்பதனையும் கண்டு  
        நாணமடைகின்றாயில்லை; மனைவியை வேதியனுக்குக்  
        கொடுத்துவிட்டோ நீ உனது வலிமையைப புகழ்ந்து சமர்த்துக்  
        கூறுவது? இக்காரியத்தில் இறக்க நேரினும் நாங்கள் ஒருசேர  
        இறந்துபடுவதல்லாமல் நீ உன் மனைவியை வேதியனுக்குக் கொடுக்க  
        விடமாட்டோம் என்று கூறினார்கள்.  
         
             (வி-ரை.) ஏட! இகழ்ச்சி குறித்த 
        விளிச்சொல். தோழனை  
        விளிக்கும் முன்னிலைச் சொல் என்று கொள்வாருமுண்டு. 
         
             ஒன்னார் 
        - பகையாயினார். பழியும் இரண்டாம் வேற்றுமை  
        உருபு தொக்கது. 
         
             பாடவம் 
        - பெருமை கூறுதல் என்றலுமாம். 
         
             கூடவே மடிவதன்றி 
        - பின் நிகழ்ச்சியின் முற்குறிப்பு. தம்  
        மழிவு தம் வாக்கிலே பிறந்தது. இஃதோர் உலகியல்பு. இவ்வாறே  
        அணைந்தன ரெங்களை வாதினில் வெல்ல (திருஞான - புரா -  
        685) முதலிய பல இடங்களிலும் அவ்வவர் வாக்கிலே வரும்  
        முற்குறிப்பு மொழிகளைக் காண்க. கூடவே மடிவது  
        உன்னோடுங்கூடவே நாங்களும் என்றுரைப்பாருமுளர். 
         
             கொடுக்க 
        - நீ கொடுக்க. ஒட்டோம் - நாங்கள்  
        சம்மதிக்கமாட்டோம்; விடமாட்டோம். ஒட்டு 
        - இணங்குதலைக்  
        குறிப்பதோர் வினைச்சொல். யாம் கொடுக்க ஒட்டோம் என்பது  
        அவர்களது மனத்தின் நிலையாகிய கோபங் கருதி நிலைமாறிக்  
        கொடுக்க யாம் ஒட்டோமென வந்தது. மோனை கருதியதுமாம். 
         
             மணஞ் செய்காலத்தில் 
        - வேள்வித்தீ - தேவர்கள் -  
        சுற்றத்தார் முதலிய அனைவர் முன்னிலையிலும் அவர்களைச்  
        சாட்சியாக வைத்து இந்தப் பெண்ணை மணஞ் செய்தது ஆயுள்வரை  
        அறவழியிலே வைத்துக் காக்கவேயல்லாமல், அறம் பிறழ்ந்து  
        பிறர்க்குக் கொடுத்துவிட அன்று; ஆதலின் இது எங்கள் சம்மதியன்றி  
        நிறைவு பெறாது; இதற்கு நாங்கள் இணங்கமாட்டோம் என்ற  
        தொடர்புபற்றிக் கூறினார்கள். 
         
             இத்திறல் 
        - என்பதும் பாடம். 18 
       |