424.
|
சென்றவர்
தடுத்த போதி லியற்பகை யார்முன் சீறி
|
|
|
வன்றுணை
வாளே யாகச் சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளுந் தாளுந் தலைகளுந் துணித்து
வீழ்த்து
வென்றடு புலியே றென்ன வமர்விளை யாட்டின் மிக்கார்.
|
21 |
(இ-ள்.)
வெளிப்படை. சுற்றத்தார்கள் வேதியரின மேற்சென்று
தடுத்த போதில் இயற்பகை நாயனார் முன்சீறித், தமது வாளினையே
தமக்கு வலிய துணையாகக் கொண்டு, இடம்வலமாகச் சாரிகை
மாறிமாறி வந்து, எதிர்த்து நெருங்கி வந்தவர்களுடைய தோள்களும்
கால்களும் தலைகளும் உடலினின்று கூறாகத் துண்டங்களாகும்படி
வெட்டி நிலத்தில் விழும்படிச் செய்து, வெற்றி கொண்டு அடுதல்
புரியும் ஆண்புலியினைப்போலப் போர் விளையாட்டிலே தாமே
மிக்கவராகச் சிறந்து நின்றார்.
(வி-ரை.)
முன்சீறி - தடுப்பதற்கு முன்னே
அவர்கள்மேற்
சீறி. தாம் சுற்றத்தார்கள்மேல் எழவும், அவர்கள் தம்மை விட்டுத்
தம்மாற் பத்தி செய்யப்பட்ட வேதியர்மேல் சென்றதனைப்
பொறாராய்ச் சீறினார். தமக்கு வருவதைவிடத் தம்மாற்
போற்றப்பட்டார்க்கு வரும் எதத்தை மிக அஞ்சிக் காப்பது அன்பின்
தன்மை.எல்லாற் தன்மையே நயப்பது அன்பில்லாத கீழோர் தன்மை.
அன் புடையா ரென்பு முரியர் பிறர்க்கு“ என்பது குறள். சீறுதல்
-
பெருங் கோபத்தால் நிகழ்வது. வன்றுணை வாளேயாக
-
தோளிணை துணையேயாக“ (415) என முன்னர்க் கூறினாரேனும்,
அத்தோளுக்கு உற்ற துணை வாளேயாயிற்று. வாளினாலன்றித்
தோள்களாற் றுணித்தல் இயலாது. ஆதலின் தோள் தமக்குத்
துணையாகவும் தோளுக்கு வலிய துணை வாளேயாக என்றார்.
வன்
- வலிய -பெரிய- பகைவரைக் கொல்லும் வலிமைபெற்ற.
வன்செயல் செய்தலால் வன்றுணை என்றார். மற்ற ஒரு கையில்
ஏந்திய பகை (415) வன்றுணையாகாது தற்காப்பு மாத்திரமாகிய எளிய
துணையேயாம். ஆதலின் வாளே என்றார். ஏகாரம் பிரி நிலையும்
தேற்றமுமாம். “எரிசுடர் வாளிற் கூறாய்“ (420) என்றதுங் காண்க.
சாரிகை மாறிவந்து
- சாரி - சரி - பகுதி; சரித்தலால்
நிகழ்வது; கை - இடம் - வலத்திலும் இடத்திலுமாக
விரைந்து
மாறிமாறிச் சுற்றி வருதல் சாரிகை எனப்படும்.
தோளும் தாளும் தலைகளும்
துணித்து - முதலிற்
றுணிக்கப்படுவது பகைவனின் படையேந்திய தோள்; தோள்
துண்டிக்கப்பட்ட பின்னரும் கால்களால் நடந்தும் ஒடியும்
மேல்விழுந்தும் அடர்ப்பாரைக் கால்களைத் துணித்தல் தகும்;
அதன் பின்னரும் அடங்காது பகையில் மிகுந்து கேடுசூழ்வாரை
அவசியமாயின் தலை துணித்தல் தகும்; ஆதலின் இம்முறை
வைத்தார். நாயனார்க்குக் கொல்வது கருத்தன்று. சுற்றத்தார் செய்த
இடையூற்றினை நீக்கி விலக்கிக் கொள்வதே கருத்தாம் என்பது
முன்னர் உரைக்கப்பட்டது (420); துணித்தலும் - வீழ்த்தலும்
அவ்வாறு விலக்குதற்கு இன்றியமையாத அந்த அளவின் மட்டுமே
அமைந்து நின்றன என்க.
தாம் இக்கருத்தில் அமைந்து நிற்பவும், அவர்கள்
அவ்வளவில்
அமையாது தீங்கு செய்தலில் முனைத்தபோது தமது முன்னைக்
கருத்தின் நோக்கத்தினையும் தாண்டி மேற்சென்று கொல்ல வேண்டி
வந்தது; ஆதலின் வென்று அடு புலி ஏறு என்ன என்றார். புலி
பசியின்றியும் (தேவையின்றியும்) எதிர்ப்பட்ட பிராணிகளை
மேற்பாய்ந்து கொல்லும்; சிங்கம் அவ்வாறின்றிப் பசித்த
போதெல்லாம் கொல்லாது. ஆதலின் முன்னர் “ஆளரியேறு
போல்வார்“ (415), “பெருவிறல் ஆளியென்ன“ (420) எனச்
சிங்கத்தினை உவமை கூறிய ஆசிரியர் இங்கு நாயனாரைப் புலிக்கு
உவமித்தார். அரியேற்றினும் புலியேறு கோபத்தாற் சீறிப்பாய்ந்து
போர் செய்தலிற் சிறந்தது. வென்றடு - அடுதலும், அதனால்
வெற்றியும் ஒருங்கே நிகழ்வன. சிறப்புப் பற்றிக் காரியத்தை முன்னர்
வைத்தார். அட்டு வெல்லும் என மாற்றிக் கொள்க. அடுதலிலும்
வெற்றி பெறுதலினுமே நாயனார் புலியினைப் போன்றார் என்பது
குறிப்பு. முன்னர் அரிபோன்றார்; இங்குப் புலிபோன்று செயல்
செய்தனர் என்க. வென்றபின் அடுதல் பேடிகள் செயலாம்.
துணித்து வீழ்த்து
- “வாளிற் கூறாய்“ (420) என்றும்,
“உங்கள் உடற்றுணி எங்கும் சிந்தி“ (422) என்றும் கூறியபடி இங்குத்
துணித்தனர்.வீழ்த்து அந்த அங்கங்களை முற்றும் கூறுபடுத்தியதனால்
அவை நிலத்தில் விழும்படிச் செய்து துணித்து அவர்களை வீழ்த்து
என்றுரைப்பினுமாம்.
அமர் விளையாட்டின்
- இந்தப் போர்க் காரியத்தைப் பெரு
முயற்சியின்றி விளையாட்டாகவே செய்தனர் என்பது குறிப்பு.
மிக்கார்
- இவரொருவரே காணப்பட்டனர் - மிகுந்து
நின்றவராயினர். ஏனையோர் காணப்படார் என்பதும் குறிப்பு. “தாமே
நின்றார் (427) எனப் பின்னர்க் கூறுவது காண்க.
சாரியை
- என்பதும் பாடம். 21
|