425.
|
மூண்டுமுன்
பலராய் வந்தார் தனிவந்து முட்டி
னார்கள்
|
|
|
வேண்டிய
திசைக டோறும் வேறுவே றமர்செய்
போழ்தி
லாண்டகை வீரர் தாமே யனைவர்க்கு மனைவ
ராகிக்
காண்டகு விசையிற் பாய்ந்து கலந்துமுன் றுணித்து
வீழ்த்தார்.
|
22 |
(இ-ள்.) வெளிப்படை. இந்தப் போரிலே, பலர் ஒன்று சேர்ந்து
எதிர்ப்பவர்களாயும், தனித்தனியாய் வந்து எதிர்ப்பவர்களாயும்,
சுற்றத்தார் தத்தமக்கு வேண்டிய அவ்வத் திசையிலே வந்தெதிர்த்துப்
போர் செய்யும் அவ்வப்போழ்தில் ஆண்மை மிக்க நாயனார் ஒருவர்
தாமே அவ்வத்திறத்தாரையும் தாம் ஒருவரேயாக எதிர்த்து, அவர்கள்
அங்கங்கும் தம்மைக் காணத் தக்க விசையினாலே சாரிகையாக
அவர்கள்மேற் பாய்ந்து அவர்களுடன் போரிற் கலந்து முன்னே
அவ்வவர்களையும் துண்டங்களாக்கி நிலத்தில் வீழ்த்தினார்.
(வி-ரை.)
மேற்பாட்டிற் பொதுப்படக் கூறிய நாயனாரது அமர்
விளையாட்டின் திறத்தினை இப்பாட விரித்துக் கூறியதுடன் மூண்ட
போரின் விரைவையும் செலவையும் குறித்தது.
முண்டு வந்தார்
- முட்டினார்கள் - கூடியும் தனித்தும்
போரில் எதிர்த்தவர்கள். வேண்டிய திசைகள் - தத்தமக்கு ஏற்றபடி
அவர்கள் கொண்ட அவ்வவ்விடம் (Advantaglous posltions) வேறு
வேறமர்செய்- அவர்கள் பல திசைகளினின்றும் தனித்தனி
இவ்வொருவரையே குறித்தடர்த்துப் போர் செய்கின்ற.
ஆண்டகை வீரர்தாமே
- மிக்க ஆண்டன்மையுடைய
வீரராதலின் இவ்வொருவர் தாமாகவே. போரில் இவர் இருப்பதற்குக்
காரணங் கூறியவாறு.
அனைவர்க்கும் அனைவராகி
- அவர்களனைவருக்கும்
அங்கங்கும் காணப்பட்டு எதிர்த்து நிற்றலால் இவ்வொருவரே
அவ்வளவு பேர்களாயினார் என்று செல்லும்படி. காண்டகு
விசையிற் பாய்ந்து - காண்தகும் - அவரவரும் இவரை அங்கங்கும்
காணத்தக்க.
விசை
- வேகம். ஒரு பொருளை வேகமாகச் சுழற்றும்போது
அவ்வொன்றே கூறபடாது தொடர்ந்ததொரு வட்டமாக எங்கும்
இருப்பதாக அவ்வேகத்தாற் காணுமாறு போல. விசையிற் பாய்ந்து -
அங்கங்கும் அனைவர்க்கும் இவ்வொருவரே காணப்பட்டதற்கு
விசையிற் பாய்ந்ததே காரணமாம் என்பது.
பாய்ந்து
- கலந்து - துணித்து - வீழ்த்தார் - இவை போரில்
ஒவ்வோர் கணத்திலே பிரித்தறியாத வகையிலே நிகழ்ந்த செயல்கள்.
இச்செயல்களைத் தனி வினையெச்சுங்களாற் குறித்தார். இவைகளைத்
தனித்தனிக் காணாது வீழ்த்தலாகிய முடிந்த ஒரு செயலே
காணத்தக்கதாயிற்று என்பார் இவ்வினை யெச்சங்களை யெல்லாந்
தொடர்ந்து கொண்டு செலுத்தி, வீழ்த்தார் என்றதொரு
வினைமுற்றுடன் முடித்துக் காட்டிய அழகு காண்க.
அவ்வினைமுற்றுடன் போர்வினையும் முற்றியதென்பதாம்.
முன்
- அவ்வர்களும் இது தெரிந்து தம்மை அடர்ப்பதன்
முன்னே.
துணித்து
வீழ்த்தார் - வீழ்த்தி விலக்குவதே கருத்தாயினமை
காண்க. 22
|