430.
|
தவமுனி
தன்னை மீளச் சொன்னபின் தலையா
லார
|
|
|
வவன்மலர்ப்
பதங்கள் சூடி யஞ்சலி கூப்பி நின்று
புவனமூன் றுய்ய வந்த பூசுரன் றன்னை யேத்தி
இவனருள் பெறப்பெற் றேனென் றியற்பகையாரு
மீண்டார்.
|
27 |
(இ-ள்.)
வெளிப்படை. தவமுனிவராகிய வேதியர் தம்மைத்
திரும்பிப் போகச்சொன்ன பின்பு, (கீழ் வீழ்ந்து) அவர் பாதங்களைத்
தலையாரச் குடி வணங்கிப்
பின் கையார அஞ்சலி குவித்துக்
கும்பிட்டுப் பின் நின்று, மூவுலகமும் உய்யும்படி எழுந்தருளிய
அவ்வேதியரை வாயாரத் துதித்து, இவரது திருவருளைப் பெறும்
பேற்றினை அடைந்தேன் என்று இயற்பகையார் மீண்டனர்.
(வி-ரை.)
தவமுனி - தவமுனிவராகக் கோலங்
கொண்டுவந்த
வேதியர். முன்னரும் முனி என்றதும் காண்க. தன்னை
- தம்மை.
நாயனார் தம்மைத் தமக்குள் எண்ணிய எண்ணங் குறிப்பதால்
ஒருமையிற் கூறினார். ஒருமைப் பன்மை மயக்கம் எனக் கொள்ளினு
மமையும். தன் - அசையெனக் கொண்டு, தவமுனி
தன்னை -
நாயனார் என்றுரைப்பாரு முண்டு.
தலையால் ஆர
- தலையாரக் கும்பிட்டு என்பது தேவாரம்.
ஆர - நிறைய; திருப்திபெற. அஞ்சலி கூப்பி
- கைகூப்பி
வணங்குதல்.
நின்று
- ஏத்தி - என்று கூட்டி முடிக்க. எட்டுறுப்பு
ஐந்துறுப்புக்களால் வணங்கியபின் எழுந்து நின்றுகொண்டு துதித்தல்
முறை. தலையால் ஆர என்றதனால், அதற்கேற்பக், கையாரக்
கூப்பி - எனவும், வாயார ஏத்தி எனவும், மனமார வாழ்த்தி எனவும்
வருவித்துரைத்துக்கொள்க.
புவனம் மூன்று உய்ய
- மூவுலகத்துள்ளாரும் தொண்டர்
நிலைமை யறிந்துய்யுமாறு காட்ட வேதியர் வேடங் கொண்டு இங்கு
இறைவன் வந்தாராதலின் இவ்வாறு கூறினார். (407) பார்க்க.
தொண்டினிலை யறிந்து ஒழுகுவதே உயிர்கள் உய்யும் வழி என்பது
சாத்திரங்களின் முடிபு. புவனம் மூன்று - மேல் நடு கீழ் என்பன.
அவன் - அவள் - அது - என மூன்று பகுப்பாகப்
படைக்கப்பட்ட
உலகம் என்றலுமாம். அவனவளது வெனுமவை என்பது சூத்திரம்
(சிவஞான போதம்). மூன்றும் என்ற முற்றும்மை தொக்கது.
இவனருள் பெறப்பெற்றேன் - அடியார் மனநிரம்பும்
வரை
அவர் வேண்டுவன இல்லை என்னாதே மாறாது கொடுத்து
அவர்களது இன்முகங் கண்டுகளிப்பதுவே நாயனர் கைக்கொண்ட
கொள்கை. (405 -406) மீள் என்று வேதியர் கொடுத்த விடை
அவரது மனநிறைவாகிய அருளைக் காட்டியதென்றும், அவனருள்
பெறுவதே பேறு என்றும் நாயனர் கருதினார் என்பதாம். இது
நாயனாரது மன நிகழ்ச்சி.
எனவே, வேதியர் தம்மை மீள் என்ற
அளவிலே, நாயனார்
மனத்தாலும் வாக்காலும், காயத்தாலும் ஆர்ந்த ஒருப்பட்ட வணக்கம்
செய்து 1371 தமக்கு இப்பேறளித்தவரிடம் விடைபெற்று மீண்டமை
இப்பாட்டாற் கூறப்பெற்றது.
மீள் பாசமுற்றுமற்றனவாகவே, இனி
உலகப் பிறவியிலிருந்து
மீள்க என்ற பின்நிகழ்ச்சிக் குறிப்புமாம். 27
|