442.
|
ஆர மென்பு
புனைந்த வையர்த மன்ப
ரென்பதொர்
தன்மையா
|
|
|
னேர வந்தவர்
யாவ ராயினு நித்த மாகிய
பத்திமுன்
கூர
வந்தெதிர் கொண்டு கைகள் குவித்து நின்று
செவிப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரி வெய்த முன்னுரை
செய்தபின்,
|
3 |
(இ-ள்.)
வெளிப்படை. ஆரமும் எலும்பும் அணிந்த ஐயரது
அன்பர்கள் என்ற ஒரே தன்மையினை உட்கொண்டு, அதுவே
காரணமாக வைத்து, முன்னே வந்தவர்கள் யாவரேயாயினும்
உறுதியாகி நிலைத்த பத்தி கூர வந்து எதிர் கொண்டு அழைத்துக்
கை குவித்து எதிரே வணக்கமாக நின்று அவர்கள் கேட்குமாறு
குளிர்ந்த அன்பான இனிய மொழிகளை அவர்கள்
அன்புகொள்ளுமாறு சொல்லி அதன் பின்,
(வி-ரை.)
ஆரம் - ஆத்தி. ஆரமும் என்பும்
என
உம்மைத்தொகை. ஆரம் - மாலை எனக் கொண்டு ஆரமாக
எலும்பை அணிந்த என்றலுமாம். என்பு - எலும்பு. சங்கார காலத்து
இறந்தொழிந்த பிரமன்மா லிருவரது எலும்புகள். என்பு புனைந்த
ஐயர் என்றது அவ்வெலும்புடைய உடம்புடன் வாழ்ந்த பிரமன்
விட்டுணு முதலிய பெருந் தேவர் பலரும் இறந்தொழிந்த காலத்தும்
தாம் நித்தியராய் உள்ள பெருமையுடையார் என்றதாம். ஐயர்
பெருமையுடையார்.
பெருங்கடன்
மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போ
யிருங்கடன் மூடி யிறக்கு; மிறந்தான் களேவரமுங்
கருங்கடல் வண்ணன் களேவர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே |
|
கங்காள
மாமாகேள் காலாந் தரத்திருவர்
தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ
|
என்ற திருவாக்குக்கள்
காண்க. எலும்புங் கபாலமு மேந்தில னாகில்,
எலும்புங்கபாலமு மிற்றுமண் ணாமே என்ற திருமந்திரப்படி இவர்
ஏந்திப் புனைந்ததனால் அவை இற்றுப்போகாது நின்றன. நித்தராகிய
இவ்வையரது அன்பர்களும் தாமும் நித்தராவார்; தம்மை
அடைந்தாரையும் நித்தர்களாக்குவார்; ஆதலின் அன்பர் என்பதோர்
தன்மையை நாடினார் என்பது குறிப்பு. அன்பர் என்பதோர்
தன்மையால் - பிரிநிலை யேகாரம் தொக்கது. அன்பர் என்ற ஒரே
தன்மையினாலே தேற்றமுமாம். தன்மை என்றதனால் வேடம்,
பாவனை, செயல் என்பனவும் கொள்ளப்பெறும்.
நேர
- தம் முன்பு; நேராக. தாம் நேர்மை அடைய -
நேர்படுமாறு என்றலுமாம். சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன் -
திருவாசகம்.
யாவராயினும்
- முற்றும்மை. யாரெனினும் - (405) என்றதும்
அதன்கீழ் உரையும் காண்க. நித்தமாகிய - இயல்பாகிய -
மாறுதலில்லாத.
பத்திமுன்கூர
- தம்மிடத்திலே நித்தியமாய் - இயல்பாய் -
அமைந்த அடியார் பத்தி இங்கு முன்னே சிறப்பாய்க் கூர்ந்து
கூடிற்று. கருணை கூர்ந்து - அன்பு கூர்ந்து என்பனபோலக் காண்க.
வந்து - எதிர்கொண்டு - குவித்து - நின்று
என்பன வினவி மொழி
கூறுவதன் முன் நடந்துகொள்ளும் முறை. வினையெச்சங்கள்
ஒவ்வோர் தனிச்செயல் குறித்தன. ஈரமென் மதுரப்பதம்
- ஈரம் -
அன்பு - அன்பு கலந்த மெல்லிய இனிய சொற்கள். இன்சொலா லீர
மளைஇப் படிறிலவாஞ், செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
என்னும் குறள் இதற்கிலக்கணங் கூறிற்று. அன்பொடு கலத்தல்
-
அன்பினை வெளிப்படுத்தல் என்றார் பரிமேலழகர்.
பரிவெய்த
- அன்பர்கள் தம்மிடத்துக் கருணை கூரும்படி.
முன்உரை செய்த பின் - முன் - அவர்கள் முன்பு. எதிர்கொண்டு
கைகுவித்து நிற்றலுக்குமுன் என்றலுமாம். வாக்கு இன்னுரை முன்
சொல்லிக்கொண்டே செல்ல, அதனுடன் எதிர் கொள்ளுதலும்
கைகுவித்தலும் நிகழ்ந்தன. ஆயினும் அன்பர்கள் கண்ணுக்கு
அச்செயல்கள் முன்னர்த் தோன்றின; மொழிகள் பின்னரே கேட்டன.
காட்சிப் புலப்படுக்கும் ஒளியலைகள் வேகத்தால் மிக்கனவும்,
செவிப்புலப்படுக்கும் ஓசையலைகள் வேகத்தால் அவற்றினும் மிகக்
குறைந்தனவுமா மென்பர் விஞ்ஞான நூலார். அற்றன்றிச் செவிப்
புலனாமோசை உண்டாய விடத்திலிருந்து கடல் அலைபோலப்
பரம்பரையின் வந்து செவிப்பொறிக்கு விடயமாம். கண்ணிந்திரியம்
ஒளியாற் சேய்மைக் கண்ணுஞ் சென்று தன் விடயத்தை
விரைந்தறியும். ஆதலின் அம்முறையே கண்ட செயலை முன்னர்க்
கூறிக் கேட்ட சொல்லைப் பின்னர்க் கூறினார்.
மென்மதுரப்பதம் உரைசெய்தலாவது அவர் முன்னர்க்
கூசிமொழிதல் - அவரை உயர்த்தியும் தம்மைத்
தாழ்த்தியும்
கூறுதல் முதலியன. நாதனடியா...ரவர்முன்பு மிகச்சிறிய ராயடைந்தார்,
ஆதலினாற் சிறுத்தொண்ட ரெனநிகழ்ந்தார் (சிறுத் - புரா - 15),
பூதிசா தனத்தவர் முன் போற்றப் போதே னாயிடினும், நாதனடியார்
கருணையினா லருளிச் செய்வர் நானென்று (மேற்படி 45) முதலிய
இலக்கியங் காண்க. 3
|