443.
|
கொண்டு
வந்து மனைப்பு குந்து குலாவு பாதம்
விளக்கியே
|
|
|
மண்டு
காதலி னாத னத்திடை வைத்த ருச்சனை
செய்தபின்
உண்டி நாலு விதத்தி லாறு சுவைத்தி றத்தினி
லொப்பிலா
வண்டர் நாயகர் தொண்டரிச்சையி லமுது செய்ய
வளித்துளார்.
|
4 |
(இ-ள்.)
வெளிப்படை. அவர்களைத் தமது மனைக்குள்ளே,
அழைத்துக் கொண்டு வந்துபுகுந்து, குலவுகின்ற அவர்களது
திருவடிகளை விளக்கி, மிகுந்த ஆசையினாலே ஆசனத்தில்
எழுந்தருளுவித்து, அருச்சித்து, அதன்பின் நான்கு விதத்தில் இயன்ற
ஆறுசுவை யுணவுகளையும், ஒப்பில்லாத சிவபெருமா
னடியவர்களிச்சையில் அமுது செய்தருளுமாறு கொடுத்துள்ளார்.
(வி-ரை.)
கொண்டுவந்து - அழைத்துக்கொண்டுவந்து.
குலாவு பாதம் - மோட்ச சாதனமாகக்
குலவுகின்ற;
கொண்டாடப்பெறுகின்ற. குலாப்பத்து - குலாத்தில்லை என்பன
காண்க. விளங்குகின்ற என்றலுமாம்.
பாதம் விளக்கி
- இது பாத்தியம் எனப்பெறும். பாத்தியம் -
அர்க்கியம் - ஆசமனம் - அருச்சனை முதலியன வழிபாட்டின்
அங்கங்கள். விரிவு ஆகமங்களுட்காண்க. சிவபூசைக்குரியவை
அடியார் பூசையாகிய மாகேசுவர பூசைக்குமாம்.இவை சோடசோபசார
மென்பர். அடியார்க் கமுதளிக்கும் பூசையிற் பாதம் விளக்கும்
நியதியும் அது காரணமாகப் பெற்றபேறும் திருப்பெண்ணாகடத்துக்
கலிக்கம்ப நாயனார் சரிதத்திற் காண்க.
மண்டு காதலின்
- நூல்களில் விதித்தபடி
இயற்றுவதென்றமட்டில் அமைந்துவிடாது மனத்திலே மிக்கெழுந்த
ஆசையினாலே.
உண்டி நாலு விதத்தி
லாறு சுவைத்திறத்தினில் - நாலு
விதத்திலும் ஆறுசுவைத் திறத்திலும் இயன்ற உண்டி என்க. நாலு
வித உண்டி - உட்கொள்ளும் வகைக்குத் தக்கவாறு
உண்டி நான்கு
வகையாகப் பிரிக்கப்படும். அவை - உண்பன,
தின்பன, நக்குவன,
பருகுவன என்பவையாம். ஆறுசுவை - கைப்பு, புளிப்பு,
இனிப்பு,
துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்பவை. மருந்துநூல் முறைப்படி
உடற்கூற்றின் பற்பல தாதுக்களின் சத்துக்களுக்கும் பலவேறு வகைச்
சுவைகள் வேண்டப் பெறுவன என்பர்.
ஒப்பிலா
- ஒப்பற்ற - ஒப்பிலா நாயகர் எனவும், ஒப்பிலாத்
தொண்டர் எனவும் ஒப்பிலா இச்சை எனவும் கூட்டி உரைக்க
நின்றது.
நாயகர் தொண்டர்
இச்சையில் அமுது செய்ய -
நாயகருடைய தொண்டர்கள் தமது இச்சையின்படி அமுதுசெய்ய
தொண்டர்களது இச்சையிலே நாயகர்நின்று அமுது செய்யும்படி
என்றலுமாம். நாயகரும் தொண்டரும் அமுதுசெய்ய என்று உம்மைத்
தொகையாக்கி உரைத்தலுமாம். இச்சையின்படி அமுதுசெய்ய
அளித்தலாவது - அவ்வவரும் வேண்டியன வேண்டியவாறே
பெற்றுண்ண அளித்தல். அளிந்துளார் - அன்புடன்
கொடுத்து
உளராயினார் என்றது குறிப்பு. அளித்து -
(404) பார்க்க.
இப்பாட்டால் அடியார்களை உபசரித்து மாகேசுவர பூசை
செய்யும் முறை கூறப்பெற்றது.
ஈரமென் மதுரப்பதம்
பரிவெய்த முன் உரைசெய்த பின்
செய்யவேண்டுவன இவை என்க. இன்றைக்கும் மாகேசுவர
பூசைகளிலே இத்திருப்பாட்டினையே பெரும்பாலும் ஓதித் துதித்துப்
பூசிக்கும் வழக்கமும் காண்க. இவ்வாறு பூசிக்கப்பெற்ற
அடியார்களான மாகேசுவரர்கள் செய்யும் ஆசீர்வாதமும் அதன்
பயனும் வரும் பாட்டாற் கூறினார். மல்கி எழுகின்ற சீரினைச்
செய்யும் இப்பூசைக்குரிய யாப்பாக ஆசிரியர் இப்பகுதியை எழுசீர்
விருத்தத்தாற் பாடியருளிய அழகும் காண்க.
திறத்தன -
என்பதும் பாடம். 4
|