449.
|
ஈர மேனியை
நீக்கி யிடங்கொடுத்
|
|
|
தார வின்னமு
தூட்டுதற் காசையாற்
றார மாதரை நோக்கித் தபோதனர்
தீர வேபசித் தார்செய்வ தென் னென்று,
|
10 |
(இ-ள்.)
வெளிப்படை. (முதலில்) அவரது திருமேனியின் ஈரம்
போக்கிப் பின் அவர் எழுந்தருளியிருக்க ஓர் இடங்கொடுத்து, அதன்
பின், அவர் தம் மன நிறைவு கொள்ளுமாறு அமுதூட்டுதற்கு
ஆசைகொண்டமையினாலே, தமது தாரமாகிய அம்மையாரை
நோக்கி, இந்தத் தபோதனர் தீரப்பசித்துள்ளார்; நாம் செய்வதென்னே
என்று பின்னரும்,
(வி-ரை.)
ஈரமேனியை நீக்கி - மேனி
ஈரத்தை நீக்கி.
இரண்டனுருபைப் பிரித்துக் கூட்டி மாற்றுக. இடங்கொடுத்து
-
வந்தவர் எழுந்தருளியிருத்தற்கு ஒரு இடம் கொடுத்து. இதனைத்
தாபனம் என்பது சைவ சம்பிரதாயம்.
இன்னமுது ஆரஊட்டுதற்கு
என்று மாற்றி யுரைத்துக்கொள்க.
அவர் மனமகிழ எனவும், தமது மனமார எனவும் இருவழியும் கூட்டி
யுரைக்கத் தக்கது. தாரமாதர் - தாரமாகிய
அம்மையார். தாரம் -
மனைவி, பெறற்கரிய மாதரார் என்றலுமாம்.
தபோதனர் தீரவே
பசித்தார் - தபோதனர் -
தவத்தையே
தனமாக உடையவர். தவமாகிய செல்வத்தை யுடையவர். தவம்
-
சிவபூசை. தீரவே பசித்தார் - அறப்பசித்தார்
- மிகவும்
பசியுடையராயினர். தண்டறு சிந்தைத் தபோதனர்
தாமகிழ்ந்,
துண்டது மூன்று புவனமு முண்டது என்ற திருமூலர்
திருமந்திரத்தின்படி, (ஏழாம் தந்திரம் - மாகேசுவரபூசை - 155),
அடியார் உண்ட வுணவு மூவுலகத்தினும் உயிர்களுக்குப் பசிதீர்க்கும்.
என்னை? இவர்கள் உண்ணவே, இவர்களுக்குள்ளே நிறைந்த
இறைவன் உண்கின்றான்; அவன் உண்ணவே, அவன் உயிர்க்குயிராய்
நிறைந்த மூவுலகத்துயிர்களுக்கும் அவ்வுணவு ஆகின்றது என்க.
தீரவே பசித்தார்
- நாம் இனிப் பசிப்பிணி இல்லாமற்
றீரும்படி - அதாவது பசிப்பிணியுடன் கூடிய பிறவி யறும்படி என்ற
குறிப்பும் காண்க. அவர் மிகப் பசித்து வந்த விருந்தினர் என
நாயனார் அறிந்த வகை மேலே பசிதலைக் கொள்வது (448)
என்றதன் கீழ்க் குறிக்கப்பெற்றது. 10
|