453.
|
மற்ற
மாற்ற மனைவியார் கூறமுன்
|
|
|
பெற்ற
செல்வ மெனப்பெரி துண்மகிழ்ந்
துற்ற காதலி னாலொருப் பட்டனர்
சுற்று நீர்வயல் செல்லத் தொடங்குவார்,
|
14 |
(இ-ள்.)
வெளிப்படை. மற்று அம்மொழிகளை மனைவியார்
சொல்லக் கேட்டலும் நாயனார் முன்னே தேடிவைத்திருந்த செல்வம்
பெற்றவர் போன்று மிகவும் மனமகிழ்ந்து பொருந்திய ஆசையினாலே
சுற்று நீருடைய தமது வயலுக்கு முளை வாரிக் கொண்டுவரப்
போவதற்கு ஒருப்பட்டுத் தொடங்குவாராகி;
(வி-ரை.)
மற்று அம்மாற்றம் - இதனைத்
தவிர மற்ற ஒன்றும்
வழி காண்கிலேன் என்று மனைவியார் முடித்துக் கூறிய மொழி.
முன் பெற்ற செல்வம்
- முன்னே தேடி வைத்தமையால்
இப்போது பெற்ற செல்வம். கொடுத்து வைத்திருந்த செல்வம் என்பது
வழக்கு. முன்பெற்ற செல்வம் என இதற்கு முன்
தாம் பெற்றிருந்த
செல்வ நிலை மீண்டும் பெற்றாற்போல என்பாரு முண்டு.
உண்மகிழ்ந்து - உபாயம் அறிந்தமையால் உளத்தில்
மகிழ்
சிறந்தார். உற்ற காதலினால் - அடியாரிடத்துப்
பொருந்த வைத்த
ஆசையினால்.
ஒருப்பட்டனர்
- ஒருமைப்பட்ட மனத்தினராகிய நாயனார்.
இதனை வினைமுற்றாக்கித், தொடங்குவார் ஒருப்பட்டனர் என
முடிப்பாரு முண்டு.
சுற்று நீர் வயல் -
சூழ்ந்த நீரையுடைய வயல். சுற்று தீர் -
வினைத்தொகை.14
|
|
|
|