454.
|
பெருகு வானம்
பிறங்க மழைபொழிந்
|
|
|
தருகு நாப்ப
ணறிவருங் கங்குறான்
கருகு மையிரு ளின்கணங் கட்டுவிட்
டுருகு கின்றது போன்ற துலகெலாம்,
|
15 |
(இ-ள்.)
வெளிப்படை. வான வெளியிலே விளங்கப் பெருமழை
பொழிதலாலே பக்கங்களும் இடைவெளியும் அறிய இயலாதபடி
இருண்ட நள்ளிரவானது கருகிய மைபோன்ற இருட்கூட்டம் தனது
செறிவு விட்டு உருகுகின்றது போன்று அந்நேரத்தே உலகெலாந்
தோன்றியதாகவே,
(வி-ரை.)
வானம் பிறங்கப் பெருகு மழை பொழிந்து
என
மாற்றி உரைத்துக்கொள்க.
வானம்
- ஆகாயம். வானம் பிறங்க மழை பொழிதலாவது
ஆகாயவெளி முற்றும் மின்னிச் செறிந்து மழை பொழிதல். வானம்-
மேகம் எனக் கொண்டு பெருமேகங்கள் மிக மழை பெய்த என
உரைப்பாரு முண்டு. பொழிந்து - பொழிதலால்.
அருகு - நாப்பண்
- உம்மைத் தொகை. அருகும் நாப்பண்ணும் என விரிக்க. அருகு
-
பக்கம். நாப்பண் - இடை. அறிவரும்
கங்குல் - இது
நேர்வழியென்றும் இதுபக்கம் என்றும், இது வழி என்றும், இது குழி
என்றும் அறியக்கூடாதபடி இருள்செறிந்த இரவு. இருள்
-
உவமானத்துக்கேற்ப வருவித்தமைத்துக் கொள்க.
கருகும் மையிருளின்கணங்
கட்டுவிட்டுருகுகின்றது
போன்றது. கருகும் -கருமையைச் செய்கின்ற; கருமையையுடைய.
மையிருளின் கணம்
- மைபோன்ற கருமைச் செறிவுடைய
இருட்கூட்டம். மையும், கருமையும், கணமும் ஆகிய மூன்று
அடைமொழிகளுங் கூடி, இருள் என்னும் ஒரு பொருள்
வேறொன்றும் தன்னுள் நுழையாதபடி கட்டியாய்ச் செறிந்த
தன்மையைக் குறித்தன.
செறிந்தும்
- இளகியும் - வியாபித்தும் உள்ள
தன்மைகளினாலே பொருள்கள் மூன்று நிலைகளை அடையும் என்று
பௌதிக நூலார் கூறுவர். இவற்றைப் பனிக்கட்டி
- தண்ணீர் -
நீராவி என, நீர் என்றதொரு பொருளே முறையே கட்டி நிலை -
உருகியநிலை - ஆவியாகிய நிலை யுறுவதிற் காட்டுவர். இங்கு
மேற்கூறிய மூன்று அடைமொழிகளினாலே முறையே இருளின் பரந்த
நிலையும், குறுகிய நிலையும், இறுகிய நிலையும் குறிப்பிட்டவாறு
காண்க. அடுத்த பாட்டில் மைக்குழம்பு என்ற
விடத்தும் காண்க.
நாயனார் நெல் வாரிவருதற்குப் புறப்பட்ட அந்த நேரத்தில் சூழ்ந்த
(கணம்) கட்டியான இருள், நாயனாரது அன்பின்
உறைப்பினால்
தனது கட்டுத்தன்மையை விட்டு உருகி ஊடுருவிச் செல்ல இடந்
தந்தது என்ற குறிப்புங் காண்க.
போன்றது உலகெலாம்-
போன்றதாகிய உலகத்திலெங்கணும்.
நாயனார் புறப்பட்ட அவ்வரிய செயலினாலே, உண்மையை
மறைத்துநின்ற ஆணவ இருளின் செறிந்த வன்மையானது தனது
கட்டுவிட்டு உலகமெல்லாம் உயிர்கள் நல்லுணர்ச்சி பெறக்
காரணமாயது என்பதோர் உட்குறிப்புங் காண்க. காரிட்ட ஆணவக்
கருவறையில் என்ற தாயுமானார் பாடலையும் பார்க்க. ஆணவம்
இருண்மலம் எனப்பட்டதும் இங்குக் குறிக்க. வலிய இருளினுட் சிக்கி
யலைகின்ற உலகினர்க்கு அவ்விருளின் வலியை நீக்கி அன்பின்
திறத்தைக் காட்டுதற்கே இறைவன் இங்கு வந்தாரென்பது முன்னர்க்
குறிக்கப்பட்டது. உருகுகின்றது அன்பின் செயலாதலும்
இங்கு
உணர்ந்து அனுபவிக்கத் தக்கதாம். இந்த உண்மையை ஊன்றிக்
காட்டுதற் பொருட்டே ஆசிரியர் சேக்கிழார் பெருமான் இறைவனார்
தமக்கு எடுத்துக் கொடுத்த முதலாகிய உலகெலாம் என்ற
மகாமந்திரத்தை இங்கு அமைத்தார் என்பர். கட்டுவிட்டு என்பது
பாசநீக்கக் கருத்தினைக் குறிப்பதுங் காண்க.
கனம்
- என்பதும் பாடம். 15
|