455. எண்ணு மிவ்வுல கத்தவர் யாவருந்
 
  துண்ணெ னும்படி தோன்றமுன் றோன்றிடில்
வண்ண நீடிய மைக்குழம் பாமென்று
நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து,
16

     (இ-ள்.) வெளிப்படை. அதனை எண்ணுகின்ற இவ்வுலகத்தவர்
வேறு எவரும் துண்ணென நடுக்கமுறும் வகைதோன்ற, அவ்வாறு
அவ்விருள் கண் முன்னே புலப்படும் காலத்தில் நீடிய
வண்ணமுடைய மைக்குழம்பே யிதுவாம் என்று கொண்டு
வெளிப்புறப்பட இயலாதபடி இருள் செரிந்த நடுயாமத்திலே,

     (வி-ரை.) எண்ணும் இவ்வுலகத்தவர் - அருட் செறிவை
நோக்காது இருட் செறிவை நோக்குகின்ற ஏனைய உயிர்கள்.
யாவரும் - பிறர் யாவரும். துண்ணெனும்படி - நடுங்கும்படி.
தோன்ற - தோன்ற; முன்தோன்றிடில - (இருளுட்புக)
முற்பட்டபோது - புறப்பட்டால்;

     வண்ண நீடிய மைக்குழம்பாமென தண்ணல் செய்யா -
இருள் தனது பரந்த நிலையின் மேலும் செறிவு கொண்டு குழம்பின்
உருப்பெற்ற மையேயாம் என்று கருதி உட்புகாத. இவ்வுருவம் மிக்க,
மைக்குழம்பினுருவமே என்று கொண்டு என்றலுமாம். என என்னும்
செயவெனெச்சம் செய்தெனெச்சப் பொருளில் வந்தது.
நடுவிருள்யாமத்து- இருள் நடு யாமத்து என்று மாற்றுக. இருள்
செறிந்த மைக்குழம்பு போற் காணப்பெற்றது என்பது கருத்து.
தோன்றமுன் தோய்ந்திடில என்று பாடங்கொண்டு அதற்கேற்பக்
கூறுவாருமுண்டு. 16