462.
|
கணவனார்
தம்மை நோக்கிக் கறியமு தான
காட்டி
|
|
|
யிணையிலா
தவரை யீண்ட வமுதுசெய் விப்போ
மென்ன
உணர்வினா னுணர வொண்ணா வொருவரை
யுணர்த்த
வேண்டி
யணையமுன் சென்று நின்றங் கவர்துயி லகற்ற
லுற்றார்.
|
23
|
(இ-ள்.)
வெளிப்படை. கணவனாரை நோக்கிக் கறிகளும்
அமுதும் எல்லாம் சமைத்தாயின வகைகளைக் காட்டிப் பின்
ஒப்பற்றவரை நாம் இப்போதே விரைந்து அமுது செய்விப்போம்
என்று சொல்ல;உணர்வினால் உணரவொண்ணா ஒருவராகிய அவரை
உணர்த்தும் பொருட்டு அவர் பக்கலில் அணைய முன்னே சென்று
நின்றுகொண்டு நாயனார் அங்கே அவரைத் துயிலுணர்த்தலுற்றார்.
(வி-ரை.)
கரியமுதான காட்டி - கைம்மை
வினையினாற்
செய்த பலவகை யமுதுகளையும் வகைப்பட நாயனார்க்கு மனைவியார்
காட்டினார. அடியார்க்குப் படைக்கும் முன்னர் அவற்றைக்
கணவர்க்குக் காட்டி அவரது உடன்பாட்டைப் பெறுதலுடன் அவரது
யோசனையுங் கலந்து அவசியமாயின் திருத்த வேண்டியவற்றை
முன்னெச்சரிக்கையாகத் திருத்திக் கொள்ள எண்ணி அவர்க்குக்
காட்டியபடியாம். இஃது இல்லறத்துக்குரிய ஒரு நற்பண்பு. இக்காலத்து
இல்வாழ்வார் எத்தனைபேர் இவ்வழி நிற்கின்றார்கள்
என்பதுணர்தற்பாலது.
இணையிலாதவர்
- தனக்குவமை யில்லாதான் என்பது
குறள். ஒப்புடையனல்லன், ஒருவனல்லன், ஒப்புனக்கில்லா
ஒருவனே, இணையொருவர்தாமல்லால் யாருமில்லார் முதலிய
திருவாக்குக்களுங் காண்க. ஒப்பற்றவன் இறைவன் ஒருவனேயாம்.
இங்கு நாயனார் வந்த அடியவரைத் தம் நியதிப்படி ஆண்டவர்
என்றே கொண்டு அமுதூட்ட எண்ணினாராதலின் அடியவரை
இணையிலாதவர் எனக் கூறினார். உண்மையில்
அவர்
இறைவனேயாதலைப் பின்னரே உணரப் பெறுகின்றனர்.
ஈண்ட
- விரைவில். என்ன - என்று கொண்டு.
உணர்வினால் உணர
ஒண்ணா ஒருவர் - ஆன்மபோத
உணர்ச்சிகளால் அறியப்படாதவர். சிலஞான சிற்கத்தியின் உதவியால்
அறியப்பெறுபவர். உலகெலா முணர்ந்தோதற் கரியவன்,
உள்ளத்துணர்ச்சியிற் கொள்ளவும் படா அன் முதலிய
திருவாக்குக்கள் இங்கு நினைவுகூரத் தக்கன.
உணர்த்தவேண்டி
- துயிலெழுப்பி, அமுது
ஆக்கப்பெற்றதையும், அவரையூட்டத் தாம் கவலை
கொண்டுள்ளதையும் அறிவிக்க. பிறர் உணர்வினால் உணர
வொண்ணாதாராயினும் தாம் எல்லாவற்றையும் உணர்ந்தவராதலின்
அவரை எவரும் உணர்த்தல் வேண்டா. அவரது அந்தத்
தன்மையினையும் உயிர்கள் உணர ஒண்ணாதன என்பதும் குறிப்பு.
அணைய முன்
சென்று - அவரது திருவடிப்பேற்றை அணையுமாறு
முற்பட்டு என்ற சரித நிகழ்ச்சிக் குறிப்புமாம்.
துயில் அகற்றலுற்றார்
- அவரைக் கூவி அழைத்து
அமுதுண்ண அழைத்தார். இதன் விரிவு வரும் பாட்டிற்
கூறுகின்றார். 23
|