463. |
அழுந்திய
விடரு ணீங்கி யடியனே னுய்ய
வென்பால்
|
|
|
எழுந்தருள்
பெரியோ! யீண்ட வமுதுசெய் தருள்க
வென்று
தொழும்பனா ருரைத்த போதிற் சோதியா
யெழுந்து
தோன்றச்
செழுந்திரு மனைவி யாருந் தொண்டருந்
திகைத்து
நின்றார்.
|
24 |
(இ-ள்.)
வெளிப்படை. அடியேன் அழுந்தியுள்ள
இடரினின்றும் நீங்கி உய்யும் பொருட்டாகவே என்பாற் கருணை
கூர்ந்து எழுந்தருளிய பெரியோரே! இங்கு விரைவிலே எழுந்து
அமுது செய்தருளுக என்று அடித்தொண்டு பூண்ட நாயனார்
சொன்னபோது, அடியவராய் வந்த அவர் ஒரு சோதிப்பிழம்பாய்
எழுந்து தோன்றவே, செழிய திருமனைவியாரும் தொண்டரும்
திகைத்து நின்றார்.
(வி-ரை.)
அழுத்திய இடர் - பற்பல பிறவிகளிற்
செய்த
கன்மத்துக்கீடாய்த் துன்பத்துக்கே காரணமாகி அழுந்திய இப்பிறவி
என்னும் பெருந்துன்பம். இடருள்நீங்கி - உள்
- இடரினின்றும்
என்க. ஐந்தாம் வேற்றுமை நீக்கப்பொருளில் வந்த ஏழனுரூபு.
உய்ய என்பால் எழுந்தருள்
பெரியோய் - அடியவர்,
தங்கட்கென்று பசி முதலிய எந்தக் குறைபாடுமிலராகவும்,
சிவனடியாரைச் சீராட்டுந் திறம் தமக்குத் தந்து உய்விக்கவே
தம்பக்கல் எழுந்தருளுகின்றார்கள் என்று கொண்டு இதுவரை
அடியவர் பூசை செய்துவந்த நாயனாரது மனநிலை குறித்தவாறு.
பெரியோய் -
எனக்கருளும் பொருட்டு வந்த பெருமை
யுடையாய் என்க. ஈண்ட - விரைவுப் பொருளில்
வருவதோரிடைச்
சொல். தொழும்பனார் - மிகத் தாழ்ந்த
மீளா ஆட்பட்ட தொண்டர்.
சோதியாய் எழுந்து
- வந்த அடியவர் என
வருவித்துக்கொள்க. செழுத்திரு மனைவியார்
- எல்லாத் திருவும்
உடையார் என்பது. திகைத்து நின்றார்
- தாம் எண்ணியவாறு
அடியாரை அமுதூட்டும் பணி முற்றுப்பெறவில்லை என்ற திகைப்பு
என்பர். அடியவராய் வந்த பெரியார் சோதியாய்த் தோன்றவே
அடியாரைக் காணவில்லையென்ற அச்சமும், அவர் உருவம் மாறிச்
சோதியாய்த் தோன்றிய வகையின் அச்சமும் நமது நாயனாரையும்
மனைவியாரையும் திகைப்பித்தன என்றலே அமையும் என்க.
திகைத்தல்
- இன்னதெனத் துணியாமை. மறைந்ததும்
தோன்றியதும் இன்னதென்று துணியக்கூடா நிலையில் மயக்கம்
விளைத்தன. திகைப்பொன்றின்றிநின் றிருவடி யடைந்தேன்
(தக்கேசி - திருப்புன்கூர்- 6), திகைத்தாற்றேற்ற வேண்டாவோ,
தேறும் வகைநீ திகைப்புநீ - முதலியவை காண்க. தேற்றம்
திகைப்புக் கெதிராய பண்பு.
நாதன் வடிவு ஒரு சோதியாகச் சாலவே மயங்குவார்க்கு
(464) என வரும் பாட்டில் இதனை விளக்கியதும் காண்க. அந்த
மயக்கம் தீர்த்துத் தம் காட்சி காட்டி அருண்மொழி அருளும்
வகையும் பின்னர்க் கூறுதல் காண்க. முன்னர் வந்தது இறைவனது
சங்கமமாகிய திருமேனி. சோதியாய்க்கண்டதும் சீரொளிய
தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளி யுருவாம் இலிங்கத்
திருமேனி. பின்னர்க் காண்பது மகேசுர பேதமாகிய உருவத்
திருமேனி. இம்மூன்று திருமேனிகளையும் தாமே கொண்டு
எழுந்தருளி ஒரே காலத்தில் நாயனார்க்கு இறைவன் வெளிப்பட்டு
அருள் புரிந்ததனாலே நாயனாரது பெருமையும், அவர் செய்து வந்த
அடியார் பூசைப் பயனும், அடியார் அளவிலார் உளமகிழப் பூசை
கொண்டதன் பயனும் உலகம் தேற்றம்பெற உணர்ந்துய்ய வைத்தலே
இறைவன் றிருவுள்ளமாம். அறிவிக்கவே (445) என்றதும் காண்க.24
|