465. “அன்பனே! யன்பர் பூசை யளித்தநீ யணங்கி
                                னோடும்
 
  என்பெரு முலக மெய்தி, யிருநிதிக் கிழவன்
                                 றானே
முன்பெரு நிதிய மேந்தி மொழிவழி யேவல்
                                 கேட்ப,
வின்பமார்ந் திருக்க“ வென்றே யருள்செய்தா
                      னெவர்க்கு மிக்கான்.
26

     (இ-ள்.) வெளிப்படை. “அன்புடையவனே! அன்பர்களது
பூசையினைச் சிறிதும் வழுவாது காத்துச் செய்து வந்த நீ உனது
மனைவியோடும் எமது பேருலகத்திலே சேர்ந்து, குபேரன்றானே
முன்னர்ப் பெரு நிதிகளை ஏந்தி உன்சொல் வழியே ஏவல் கேட்டு
நிற்க, இணையில்லாத பேரின்பம் நுகர்ந்து கொண்டு நித்தியமாய்
வாழ்க்கடவாய்“ என்றே யாருக்கும் மிக்காராகிய சிவபெருமான்
அருளிச் செய்தார்.

     (வி-ரை.) அன்பனே - எம்மிடத்து வைத்த அன்பினாலே
எமது அடியவர்களிடத்து அன்பு மிக்கவனே.

     அன்பர்பூசை அளித்த நீ - அன்பு நிறைதலாகிய
காரணத்தால் விளைந்தது அன்பர் பூசையாகிய காரியம் என்க.

     அளித்தல - வளம் சுருங்கியபோதும் என்றும் விடாது
பாதுகாத்துச் செலுத்துதல். அணங்கு - தெய்வத்தன்மை வாய்ந்த
பெண். இங்கு மனைவியாரைக் குறித்தது. “எங்ஙனே அணங்கே!“
(450) என்றதும் காண்க.

     அணங்கினோடும் நீ யெய்தி - அடியார் பூசைக்கு உரிய
அமுது படைத்து உய்த்தது மனைவியாரது கற்பின் றிறத்தாலே
நிகழ்ந்ததாலின், அச்சிறப்புப் பற்றி ஓடு உருபை மனைவியாருடன்
சார்த்தி, அணங்கினோடும் நீ எய்தியிருக்க என்றருளினார்.
“நண்ணிய மனைவியோடு நம்முடன் போதுக“ (436) என்ற விடத்துங்
காண்க.

     நம்பெரு முலகம் - “நலமிகு சிவலோகம்“ (438) என்றதன்
கீழ்க் காண்க.

     இருநிதிக் கிழவன் - குபேரன். தானே ஏந்தி என்றது பிற
கணங்களன்றிக் குபேரன் தானே பெருநிதியம் ஏந்தி நின்று
என்பதாம். பெருநிதியம - எடுக்க வெடுக்கக் குறையாத சங்கநிதி -
பதுமநிதி என்பன.

     மொழிவழியேவல் கேட்ப - உனது சொல் வழிப்பட்டு நின்று,
நீ ஏவின பணி செய்து வர. சிவலோகத்திலே இந்நாயனார்க்குக்
குபேரனது பெருநிதியத்தாலாவது என்னையோ வெனின்?
செல்வமும், அடியார் திறத்து அன்பின் மேன்மை திருந்த மன்னிய
சிந்தையும், பாரின் மல்க விரும்பி, அக்கொள்கையினின்றே அடியவர்
பூசை செய்து வந்தனர் நாயனார்; அவரது எண்ணம் நிறைவேறுக
என்று அடியவர்கள் நாளு நாளும் வாழ்த்தினர்; அதன் பயனை
உலகிற்குக் கொடுத்துப் பாரிலே நித்தமும் செல்வமும் சிந்தையும் நீடி
வருவதற்காக, இறைவன், இவர் சொல்வழிக் குபேரதேவன்
நிதியமேந்தி ஏவல் கேட்டு நிற்குமாறு அருளினார் என்பதாம்.
நாயனார் சிவகணங்களிலொருவராய்ச் சிவலோகத்தில்
எழுந்தருளியிருந்து உலகிலே செல்வமும் சிவசிந்தையும் நீடி வருமாறு
அடியவர்க்கு இன்றும் என்றும் அருள் புரிந்து வருகின்றார் என்க.
442 உரை காண்க. இன்பம அடியார் கூட்டத்தில் வாழும்
பேரின்பம்.

     எவர்க்கும் மிக்கான் - முழுமுதல்வன் - சிவபெருமான்.
சோதியாக - மயங்குவார்க்கு - சங்கரன் - எவர்க்கு மிக்கான்
-மகிழ்ந்தே - தோன்றி - நோக்கி - அன்பனே- நீ அணங்கினோடும்
- உலகம் எய்தி - கிழவன்றானே ஏவல் கேட்ப - இன்பமார்ந்திருக்க
என்றே - அருள் செய்தான் என இவ்விரண்டு பாட்டுக்களையும்
தொடர்ந்து முடிக்க.

     இருப்பீராமென்றருள - என்பதும் பாடம். 26