476. |
என்றவன்
கூறக் கேட்டே யானவற் குறுதி கூற
நின்றிடு நீயு மென்றே யவனையு நீக்கிப் புக்குப்
பொன்றிகழ் பள்ளிக் கட்டிற் புரவலன் றுயில
மாடே
மன்றலங் குழன்மென் சாயன் மாதேவி யிருப்பக்
கண்டான்.
|
10 |
(இ-ள்.)
வெளிப்படை. இவ்வாறு தடைமொழிகளைத் தத்தன்
சொல்லக் கேட்டும், முத்தநாதன் நான் அவ்வரசனுக்கு உறுதி கூறப்
புக்கேனாதலின், நீயும் இங்குத் தடை செய்யாமல் வேறு நின்றிடுக
என்றே சொல்லி, இவ்வாறு அவனையும் நீக்கி உட்புகுந்து,
பொன்னால் விளங்கும் பள்ளிக் கட்டிலில் அரசர் துயில, அவர்
பக்கலிலே வாசனையுடைய அழகிய கூந்தலையும் மெல்லிய
சாயலையும் உடைய அரசமாதேவியிருப்பக் கண்டான்.
(வி-ரை.)
கேட்டே - கேட்டும். யான்
அவற்கு உறுதி கூற
- நான் அரசனுக்கு உறுதியாகிய மொழியினை உபதேசம் செய்ய.கூற
என்றதனால் உறுதி என்றது உறுதிபயக்கும் மொழியினைக்
குறித்தது.
கூற - கூற வந்தேனாதலால்.
கூற
நின்றிடு - கூறுதற்குத் தடை செய்யாமல் நின்றிடு. நீ
என்னை ‘உட்செல்லாது நில்' எனக் குறிப்பிற் றடை செய்தனை; நான்
உன்னை ‘நின்றிடு நீயும்' என வெளிப்படையின்
ஏவுகின்றேன்
என்ற அதிகாரத்தை முத்தநாதன் அவன்மேற்கொள்ளவும், தத்தன்
அது கேட்டு அமைந்து நிற்கவும், அவற்கு என
அரசரை ஒரு
மையிற் சுட்டிக் கூறவும், இயைந்தது இங்குத் திருவேடத்தினாலாய
திறன் என்ற நுணுக்கங் காண்க. நின்றிடு நீயும்
- ஏனைக்
கடையுடைக் காவலாளரெல்லாம் நின்றதுபோல நீயும்
நின்றிடுக.
நீயும் - இறந்தது தழுவிய எச்சவும்மை. அவனையும் நீக்கி
-
அவனது தடையையும் தவிர்த்து. புக்கு - தனித்தடை
தாண்டிப்
பள்ளியறையினுட் புகுந்து. பொன்றிகழ் -
பொன்னா லிழைக்கப்
பெற்று விளங்கும். பள்ளிக் கட்டில் - பள்ளி
கொள்ளும்
மஞ்சத்திடையே ஏழனுருபு தொக்கது. கட்டில்
- கட்டிய இல் - வீடு
- போன்றது.
புரலவன்
- உலகம் புரத்தலில் வல்லவன் - அரசன். மாடே-
அவன் பக்கத்தில்.
மன்றலங்குழல் - மன்றல்
- வாசனை. அணிந்த
மாலையாலாயது வாசமாம். நாறு பூங்கோதை (479) காண்க.
கற்புடை மகளிர் கூந்தல் இயற்கைமணமுடையதென்பதுமாம்.
மாதேவி - அரசன் பட்டத்திற்குரிய பெருந்தேவி.
இருப்ப
- அரசன் துயிலவும், அவன் பக்கத்தில் தேவி
யிருக்கவும் அடிவருடிப் பின் றூங்கி முன் எழும் பேதையே
என்றபடி நாயகன் துயிலும் வரை அவனுக்கு அடி வருடுதல், விசிறி
வீசுதல் முதலிய உபசாரம் செய்து இருந்து பின்னரே தாம் தூங்குதல்
கடமையாதலின் புரவலன் துயில மாதேவி யிருப்ப
என்றார்.
மன்னு மலைமகள் கையால் வருடின, செருடக் கடிமலர்ச்
செல்விதன் செங்கமலக் கரத்தால் வருடச் சிவப்பன,
சுரும்பொடுவண் டணங்குங் குழலி யணியார் வளைக்கரங் கூப்பி
நின்று, வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் என்பனவாதி
திருவிருத்தத் திருவாக்குக்களும் இவ்வுபசாரங் குறித்தெழுந்தன.
மானிவற்கு
- என்பதும் பாடம். 10
|