484.
|
அத்திற
மறிந்தா ரெல்லா மரசனைத் தீங்கு
செய்த
|
|
|
பொய்த்தவன்
றன்னைக் கொல்வோ மெனப்புடை
சூழ்ந்த
போது
தத்தனு மவரை யெல்லாந் தடுத்துடன் கொண்டு
போவான்
இத்தவன் போகப் பெற்ற திறைவன தாணை
யென்றான்.
|
18 |
(இ-ள்.)
வெளிப்படை. அச்செய்தியை அறிந்தவர்கள் எல்லாம்
எமது அரசனுக்குத் தீங்குசெய்த இந்தப் பொய்த்தவனைக்
கொன்றிடுவோம் என்று எழுந்து பக்கத்திற் சூழ்ந்தபோது, தத்தனும்
அவர்களை எல்லாம் தடுத்து, அவனைத் தன்னுடன்
கொண்டுபோகின்றவனாய், அவர்களை நோக்கி இத்தவன் இவ்வாறு
(உயிருடன்) போகப்பெற்ற காரணமாவது இறைவனது
ஆணையேயாகும் என்று சொன்னான்.
(வி-ரை.) அத்திறம்
- வேடத்தால் வஞ்சித்த செய்கை.
அறிந்தார்
- கேட்டு அறிந்த ஊரவரும் அரசியலாயத்தாரும்.
எல்லாம் சூழ்ந்தபோது - எல்லாருக்கும்
அரசனிடம் இருந்த அன்பு
குறித்தது. புடை சூழ்ந்த - சுற்றிலுங் கூடி நெருங்கிய. தடுத்து
உடன்
கொண்டு போவான் - இடைவிலக்கா வண்ணம் கொண்டு போய்
விடு என்ற அரசனாணையின்வழி நின்றான் என்பது குறித்தது.
கொண்டு போவான்
- பெயர். என்றான் என்னும்
வினைகொண்டு முடிந்தது.
இத்தவன் போகப்
பெற்றது இறைவனது ஆணை- நீங்கள்
சூழ்ந்து கொல்லும் வரை நேர்ந்திராது. அங்கு எனது வாளினைத்
தப்பி, இவன் அங்கு நின்றும் நீங்கள் பார்க்கும் வரை போகும்படி
வாய்த்தது அரசனிட்ட கட்டளையாலாயிற்று. இனிப் போகப்
பெறுதலும் அவ்வாறே என்று குறித்தபடியாம். இத்தவன்
- பிறர்
கூறியதுபோல இவனும் பொய்த்தவன் என்று கூறவில்லை, தனது
அரசர் நமர் என்றுகூறிய
கட்டளையின் அமைந்தவனாதலின்
என்க. இதனையே இவன் இறைவன தாணை என்றான். இறைவன்
- அரசன். முழுமுதலாம் சிவபெருமான் என்றுரைத்து, இவைகள்
சிவபெருமானது ஆணையாகிய நியதியின்நிகழ்ந்தன என்ற
குறிப்புமாம். 18
|