486. மற்றவன் கொண்டு போன வஞ்சனை வேடத்
                                தான்மேற்
 
  செற்றவர் தம்மை நீக்கித் தீதிலா நெறியில் விட்ட
சொற்றிறங் கேட்க வேண்டிச் சோர்கின்ற வாவி
                                 தாங்குங்
கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பி
                                னின்றான்.
20

     (இ-ள்.) வெளிப்படை. மற்று தத்தன் காவல் புரிந்து
கொண்டுபோயின வஞ்ச வேடமுடையான் மேல் எதிர்த்து
அடரவருகின்றவர்களை யெல்லாம் தடுத்து விலக்கித், தீங்கு இல்லா
வழியிலே விட்டதாகிய நற் சொல்லைக் கேட்பதற்காகவே சோர்ந்து
போய்க் கொண்டிருக்கின்ற உயிரைத், தாங்கியிருந்த அரசர்
திருமுன்பு சென்றான், அவ் வரசர் பெருமானது குறிப்பிலே நின்றான்
(தத்தன்).

     (வி-ரை.) மற்று அவன - மற்று வஞ்சனை வேடத்தான் என
இயைக்க. அவன் கொண்டு போன மற்று வஞ்சனை வேடத்தான்
என்பதாம்.

     மற்று
- வினை மாற்றுப்
பொருளில் வந்ததாகக் கொண்டு,
அங்கே அவன் அவனை விட்டு மீண்டான். மற்று இங்கு
அச்சொற்றிறம் கேட்க வேண்டி என உரைத்தலுமாம்.

     கொண்டு போன - பிறராற் றுன்பம் நேராமற் காவல்
செய்துவிட உடன் கொண்டு போன.

     வஞ்சனை வேடத்தான திருவேடத்தை வஞ்சனையாலே
புனைந்து தாங்கியவன். தீதிலா நெறியில் - அரசனைத் தீங்கு
செய்தமைபற்றி வேறு எவரும் இவனைக் கிட்டித் தீமை செய்யலாகாத
வழியிலே. தீதிலா - தீமை வரக்கூடாத.

     சொற்றிறம - திறச் சொல் என மாற்றி நற்சொல் என்று
பொருள் கொள்வர். சொல்லினது திறமையாவது நன்மை. அமைச்சர்
- சேனைகள் - நகரமாந்தர் முதலிய அனைவரையும் விலக்கிச்
செல்லுதல் மிகத் திறமையான செயலாதலின், அவ்வாறு செய்த
தத்தனது திறம்பட்ட சொல் என்றலுமாம்.

     கேட்க வேண்டிச் சோர்கின்ற ஆவி தாங்கும் -
கேட்பதனையே விரும்பி அதன் பொருட்டுத் தம் உயிரைத் தாங்கி
நின்ற. ஒரு செய்தியின் உறுதியினை உயிர்க்கீடாகக் கொண்டவர்
அது நிறைவேறுமளவும் உயிர் நீங்கார் என்பது ஒரு கொள்கை.
அதன் உண்மையை இங்குக் காண்க. சோர்கின்ற ஆவி - நிறைந்த
செங்குருதி சோர்தலாலே அயர்ச்சிபெற்று வீழ்ந்தார். அதன்
பின்னரும் அக்குருதி தொடர்ந்து வெளிவந்து சோரச் சோர
அதனுடனே ஆவியும் சோர்ந்து கொண்டு வந்தது. அவ்வாறு
சோரும் ஆவியைத் தமது மன உறுதியினாலே சோராமற் றாங்கினார்.
தாங்கு கொற்றவன - உடலை விட்டுப் போகும் உயிரைச் சொற்
கேட்கும்வரை போகாமல் நிறுத்தித் தாங்கிய வெற்றிப் பாடுடைய
சதுர ராதலின் அச்சிறப்புத் தோன்ற இங்குக் கொற்றவன என்று
குறித்தார். வெல்லுமாமிக வல்ல - என்ற முதனூற் சிறப்பு இங்கு
மிகக் காண்க. பகைவனைப் போரினும் வென்றார்; அவன்
வஞ்சனையையும் வேடந்தொழுது வென்றார்; அதன்மேல்
பகைவனைத் தாம் தீங்கு செய்யாது விட்டதனோடு அவனை
வாளினா லெறியலுற்ற தத்தனைத் தடுத்ததும் ஓர் வெற்றியாம்.
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண, நன்னயஞ் செய்து
விடல
“ (குறள்) என்ற நீதியின்படியும் இது வெற்றியாமென்க. (இங்கு
விடல் என்றது குறிக்க.) அதன்மேலும் வேறு எவரும் “மீதிடை
விலக்கா வண்ணங் கொண்டு போய்விடு“ என்று பணித்தது
அதனினும் பெரிய வெற்றியாம். அதன்பின் அவ்வாறு விட்ட
சொற்றிறங் கேட்கவேண்டிச் சோர்கின்ற ஆவியைப் போகாமே
தடுத்துத் தாங்கி நின்ற வெற்றியின் பெருமை சொல்லொணாததாம்.
இதனையே பின்னர் “நன்னெறி காத்த சேதி நாதனார் பெருமை
தன்னில் என்னுரை செய்தேனாக“ (490) என்று முடித்துக் காட்டினார்
என்க. இந்த வெற்றிகளெல்லாம் குறிக்க இங்குக் கொற்றவன என்ற
கவித்துவச் சுவை காண்க.

     சென்றான் கோமகன் குறிப்பின் நின்றான் - நின்றான -
பெயர். இனி, நின்றானாகிய தத்தன் என இறந்தகால
வினையாலணையும் பெயராக்கி (அனையவன்) சென்றான் என
முடித்துக் கொள்ளலுமாம். குறிப்பு - குறித்த கொள்கையின்
கட்டளை. சென்றான்; அது முடிந்த பின்னர், மேலும் அவரது குறிப்பு
அறிய முன்னர் நின்றான என இரண்டையும் வினைமுற்றுக்களாகக்
கொண்டுரைப்பாரும், சென்றான என்பதை முற்றெச்சமாக்கிச்,
சென்றானாகி - போய் - என்றுரைப்பாரு முண்டு. 20