508. செய்ய புன்சடை கரந்ததோர் திருமுடிச் சிகையுஞ்  
  சைவ வெண்டிரு நீற்றுமுண் டத்தொளித்
                              தழைப்பும்
மெய்யின் வெண்புரி நூலுடன் விளங்குமான்
                                றோலுங்
கையின் மன்னிய பவித்திர மரகதக் கதிரும்,
7

     (இ-ள்.) வெளிப்படை. சிவந்த சிறு சடையை மறைத்ததாகிய
திருமுடிச்சிகையும், சைவத்திற்குரிய திருவெண்ணீற்றைத்
திரிபுண்டரமாகத் தரித்த தனது ஒளியின் தழைப்பும், திருமேனியில்
வெண்மையான புரிகளுடைய பூணுலுடன் விளங்கும் மான்றோலும்,
கையில் (உரிய விரலிற்) பொருந்திய மரகதக்கதிர்விட்டு நீண்ட
பவித்திரமும்,

     (வி-ரை.) செய்ய - சிவந்த. புன்சடை - சிறுசடை.
மென்மையான - மிருதுவான என்பாருமுண்டு

     சடை கரந்தது ஓர் திருமுடிச் சிகையும் - சடையை
மறைத்து அதன் இடத்திலே திருமுடிச் சிகையைக் கொண்டு -
முடிச்சிகை - பிரமசரியக் கோலத்துக்குரியது. கரந்தது -
வெளிக்காட்டாமல் மறைத்ததாகிய. “கண்ணிடை கரந்த கதிர்
வெண்படமென“ (175); “சடைமறைத்துக் கதிர்மகுடந் தரித்து“ -
திருவிளையாடற் புராணம். விரித்தசடையை முடித்த சிகையாகக்
கொண்டு என்பாருமுண்டு. சிகை - குடுமி.

     சைவ வெண் திரு நீற்று முண்டம் - சைவத்துக்கே
சிறப்பாயுரிய அடையாளமாய் மூன்று கீற்று வடிவமாய் நெற்றியில்
இட்ட திருநீற்றுக் காப்பு. திருமுண்டம் - திரிபுண்டரம் என்பதன்
மரூஉ வென்பர். நீற்றுத்திருமுண்டம் என மாற்றுக.
முண்டம்
நெற்றி என்றலுமாம். “செஞ்செவேயாண்டு கொண்டான் றிருமுண்டம்“
- திருவாசகம் - அச்சப்பத்து. ஒளித்தழைப்பு - ஒளியின்
மிகுதி. திருநீற்று முண்டம் எல்லா ஆச்சிரமங்களுக்குமுரியதாய்
வேதம் விதித்தது. நூலுடன் விளங்குமான்றோல் - மான்றோலைப்
பூணூலுடன் தரித்தல் பிரமசரியக் கோலத்திற்குரிய அடையாளங்களுள்
ஒன்று. பூணூலுடன் ஓரங்குல நீளம் மான்றோல் தரிப்பது வழக்கு. 152
உரை பார்க்க.

     கையில்
- வலது கையில் அதற்குரிய அனாமிகைவிரலில்,
இச்சிறப்புரிமை நோக்கி இதனைப் பவித்திர விரல் என்பர்.

     கை - அதன்விரல்களுக்காகி, அவற்றில் உரிய ஒரு விரலுக்காயிற்று.

     மரகதக் கதிர்ப் பவித்திரமும் என மாற்றுக. உலராத
பச்சைத் தருப்பையாற் புதிதின் முடிந்து புனைந்ததாதலின் மரகதக்
கதிர்போன்ற ஒளி விடுவது என்றார். பவித்திரத்தின் முடிப்பு மரகத
மணியும், அதன் நீண்டபாகம் பாகம் மணியின் கதிருமா மென்க.

     ஒண்சடை - என்பதும் பாடம். 7