523.
|
மனைவி
யாரொடு மன்னிய கிளைஞருந் தாமு |
|
|
மினைய
தொன்றுவந் தெய்திய தெனவிடர் கூர்ந்து
நினைவ தொன்றிலர் வருந்தினர்; நிற்கவு
மாட்டார்;
புனைய வேறொரு கோவணங் கொடுபுறப்
பட்டார். |
22 |
(இ-ள்.)
வெளிப்படை. மனைவியாரொடும் மற்றும் பொருந்திய
சுற்றத்தாருந் தாமுமாக இப்படிப்பட்டதொரு நிகழ்ச்சி வந்து
சேர்ந்ததே என்று மிகுந்த துன்பமடைந்து வேறு
நினைக்கத்தக்கதொன்று மில்லாதார் வந்தினார்; இந்நிலையில்
உள்ளே நிற்கவும் மாட்டார்; மறையவர் புனைந்துகொள்வதற்கு
வேறொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
(வி-ரை.)
மனைவியாரொடு - மனைவியார் இடர்கூர்ந்த
நிலையினை ஒடுவிகுதி தந்து பிரித்தார். அவரும் தாமும் துலையின்
முகத்தாற் சிவபுரி யடைய நின்றனர்; மன்னிய கிளைஞர் அவ்வாறன்றி
இவர்களாலே பொருந்திய வகையால் இடர்கூர்ந்த மட்டில் அமைந்து
நின்றனர் என்பது கருத்து. உம்மைக ளிரண்டும் எண்ணும்மைகள்.
இனையது
ஒன்று - வாங்கி வைத்த பொருள் தப்பியதாக,
மறையவர் பொருளுக் குத்தரவு சொல்ல நேர்ந்தும், தம்மால் அவர்க்
கிடர் நேர்ந்ததும் ஆகிய நிலை.
வந்து
எய்தியது - தாம் தேடிக் கொள்ளாமல் அதுவே
தம்மையும் மீறி வந்து சேர்ந்தது என்ற குறிப்பு. தனது கவனத்தையும்
காவலையும் கடந்து இந்நிலை வந்ததாகலின் வந்து என்றார்.
இடர்
கூர்ந்து - கூர்தல் - மிகுதல். துன்பத்தால்
மிகுதிப்பட்டு. கூர்ந்து - கூரப்பட்டு. கூர்தலால்
என்றலுமாம்.
நினைவது
ஒன்று இலர் - வந்து எய்திய இதனை நீக்கும்
வழியாக நினையத்தக்கது ஒன்றும் இல்லாராய். ஒன்று -
ஒன்றும்.
முற்றும்மை தொக்கது. இலர் - இல்லாதவராகிய.
முற்றெச்சம்.
வருந்தினர்
- இது அவர் மனமடைந்த நிலை.
நிற்கவும்
மாட்டார் - வருத்த மிகுதிப்படவே நின்றிடுதல்
வேண்டும்; ஆயின் நிற்கவு மாட்டாராயினர் என்க. இது அவர் உடல்
அடைந்த நிலை. அடியார் ஈரக் கோவணமாற்றகில்லாது குளிரால்
வருந்துவரே என்று தாமதிக்க மாட்டாதவராய். கோவணமாற்கில்லாது
குளிரால் வருந்துவரே என்று தாமதிக்க மாட்டாதவராய். வேறு
செய்ய மாட்டாமையுடன் நிற்கவும் மாட்டார் என்க. உம்மை
எச்சவும்மை.
புனைய
- மறையவர் ஈரக் கோவணத்தை மாற்றிப் புனைந்து
கொள்ள என்று இவர் எண்ணியது மாத்திரமேயன்றி அவர்
புனையவில்லை என்றது குறிப்பு.
வேறொரு
- அவர் தந்த கோவணத்தின் வேறாகிய தொன்று.
புறப்பட்டார்
- மனையினுள்ளிருந்து வெளியே வந்தனர்.
இங்குப் புறத்திற்பட்டார் என்பது தாம் தம்மதென்று எண்ணிய மனை,
பொருள் முதலிய உலகச் சார்புகள் எல்லாவற்றிற்கும்
புறம்பாய்ப்போந்து, அவற்றையும் தம்மையும் சிவச்சார்புபடுத்தும்
நிலை கூடிய தன்மை குறித்தது. இங்குப் புறப்பட்டாராகிய
நாயனார்
பின்னர் உட்பட்டாரில்லை; மனை பொருள் முதலியவற்றினுள்
அகப்படவில்லை என்பதும் குறிக்க. இதுபற்றியே
மேற்பாட்டினுள்
வேதியர்பெருந் தொடக்கினுள் அகப்பட்டார் என்று குறித்தமையும்
உன்னுக. 22
|
|
|
|