529.
|
செயத்த
கும்பணி செய்வனிக் கோவண மன்றி |
|
|
நயத்த
குந்தன நல்லபட் டாடைகண் மணிக
ளுயர்த்த கோடிகொண் டருளுமென் றுடம்பினி
லடங்காப்
பயத்தொ டுங்குலைந் தடிமிசைப் பலமுறை
பணிந்தார். |
28 |
(இ-ள்.)
வெளிப்படை. செய்யத்தக்கதென்று தேவரீர்
பணிக்கும் பணி எதுவோ அதனைச் செய்வேன்; இந்தக்
கோவணமேயன்றி, விரும்பத்தக்கன வாயுள்ள நல்ல பட்டாடைகளும்
மணிகளும் என்னும் இவற்றிலே உயர்ந்தனவாகிய கோடிகளைத்
தேவரீர் ஏற்றுக்கொண்டருளுவீர்! என்று சொல்லி உடம்பிலே
அடங்கமுடியாது மீதூர்ந்த பயத்தினை உடையராகி மனங் குலைந்து,
அவரது திருவடிமேல் பலமுறையும் பணிந்தனர்.
(வி-ரை.)
செயத்தரும் பணி -
தகுவதாய் நீர் பணிக்கும்
பணி. முன் நான் செய்தவை செயத்தகாதன; கோவணம்
போக்கியதொன்றும் அதற்குப் பிரதியாக இதனைத் தரலாம் என்று
எனது தற்போதத்தாலே எண்ணியது மற்றொன்றுமாக இருவகையிலும்
தவறு செய்தேன்; இனி நான் செய்வேன் என்பதின்றித் தேவரீர்
செய்தக்க என்று பணிக்கும் பணிகள் எவையேயாயினும்
அவற்றைச்
செய்வேன் என்பதாம்.
நயத்தகுந்தன
- நயக்கத்தகுந்தனவாகிய. நயத்தல் -
விரும்புதல். நயத்தகும் தனம் - தனம் -
ஆடைகள் ஒழிய மற்றை
ஐசுவரியங்கள் என்று கொண்டுரைப்பாரு முண்டு.
பட்டாடைகள்
- மணிகள் - இவ்விரண்டுமே இவர்
வாணிபஞ் செய்த சரக்குக்களாம். பொன்னு முத்துநன் மணிகளும்
பூந்துகில் முதலா (503) காண்க. போயின கோவணத்தின்
இனம்பற்றிப் பட்டாடைகளை முன்னர்க்கூறினார். உயர்ந்தகோடி
-
உயர்த்த - உயர்ச்சியை யுடையனவாய். உயர்ந்த
என்பது எதுகை
நோக்கி உயர்த்த என வந்ததென்றலுமாம்.
கோடி - அனேகம்
என்ற பொருளில் வந்தது. உயர்த்தப்பட்ட கோடி
என்னும் தொகை
என்பாருமுண்டு. குணத்தால் உயர்வும் எண்ணால் அளவின்மையும்
கொண்ட. கோடி - புதுத்துணி - மணிகளின் எண்ணிக்கை
என்றலுமாம்.
கொண்டு
- போன கோவணத்திற்குப் பிரதியாக
ஏற்றுக்கொண்டு.
உடம்பினில்
அடங்காப் பயம் - தாம் அடக்கினும்
அடங்காது வெளிப்படும் அடையாளங்களுடன் காட்டும் பயம். உடல்
நடுக்கம் முதலியவை பயமிகுதியின் வெளித் தோற்றங்களாம்.
குலைந்து - மனமுடைந்து. நிலை குலைந்து.
அடிமிசைப்
பலமுறை பணிந்தார் - முன் பாட்டில்
அடிபணிந்து என்றது ஒரு நிலை; தன் செயலற்ற
நிலை மேலும்
முதிர்ந்த செயல் இங்குக் குறிக்கப்பட்டது. பிழை பொறுத்தருளும்
என வேண்டிய நாயனார் அவ்வாறு பொறுத்தருள்வதில் மணிகள்
பட்டாடைகள் கோடி கொண்டருளும் என அதன் மேலும் வேண்டிப்
பலமுறை பணிந்தனர் என்க. 28
|