531.
|
மலர்ந்த
சிந்தையா ராகிய வணிகரே றனையா |
|
|
ரலர்ந்த
வெண்ணிறக் கோவண மதற்குநே ராக
விலங்கு பூந்துகில் கொள்வதற் கிசைந்தருள்
செய்யீர்.;
நலங்கொள் கோவணந் தரும்பரி சியா தென
நம்பர். |
30 |
(இ-ள்.)
வெளிப்படை. (இது கேட்டு) மலர்ந்த சிந்தையினை
யுடைய ராகிய வணிகரில் ஏறுபோன்ற அந்த நாயனார், வெண்மை
நிறம் விரிந்த தேவரீரது கோவணத்திற்குப் பிரதியாக விளங்குகின்ற
பூந்துகில் கொள்ளுவதற்கு இசைந்தருள் செய்தீரல்லீர்; ஆயின்,
நன்மை கொண்ட கோவணம் தருகின்றவகை தான் யாது? என்று
இறைஞ்ச, நம்பராகிய பிரமசாரியார்,
(வி-ரை.)
மலர்ந்த சிந்தைய ராகிய -
பொறிகலங்கிய
உணர்வினராய் முகம் புலர்ந்நிதிருந்த நாயனார் அது மாறி இப்போது
மலர்ந்த சிந்தையை யுடையாராயினார். சிந்தை மலரவே
முன்னர்ப்புலர்ந்திருந்த முகமும் மலர்ந்தது என்க. தாம் தந்த
கோவணமே வேண்டுமென்று கூறி வெகுண்ட அவர், அந்நிலையினை
விடுத்து, அதற்கு நேராக மற்றொரு கோவணம் பெற்றுக்கொள்ள
இசைந்தது பற்றிச் சிந்தை மலர்ந்தார். போயின கோவணத்திற்கு நேர்
வேறொரு கோவணம் தந்து பிழைபோக்கி அவரது அருளைப்
பெறலாம் என்று துணிவுண்டாயினது சிந்தை மலர்தற்குக் காரணம்.
வணிகர்
ஏறு அனையார் - வணிகர் குலத்து வந்த
ஆண்சிங்கம் போன்ற அவர். ஒரு கோவணம் போயினவகை தாம்
அறியாது வந்ததொரு செய்கைக்கு உடம்பினி லடங்காப் பயத்தொடுங்
குலைந்தவரை ஏறு என்ற தென்னை? எனின், அடியர் பாற்பட்ட
அபசாரத்திற்குப் பயந்தனரே யன்றி மற்றில்லை. இப்போது அது நீக்க
வழிகண்ட மகிழ்ச்சி அவரைப் பின்னையும் ஏறணையாராக
ஆக்கிற்று என்க. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை; யஞ்சுவ, தஞ்ச
லறிவார் தொழில் - குறள். ஆதலின் இவ்வச்சம் இழிவு பயவாது
பெருமையே பயந்ததும், அஃது நீங்கிய போது தமதன்புநெறி நேரிதிற்
செல்ல வழி கண்டு பெருமிதத்திற் கேதுவாயதும் காணப்படும் என்க.
அலர்ந்த
வெண்ணிறம் - வெண்நிறம் அலர்தலாவது மிகத்
தூயதாய் விளங்குதல். முன்னர்ப் பொங்குவெண் - 522 என்றது
காண்க. நேராக - பிரதியாக.
பூந்துகில்
இங்கு மணி முதலிய ஏனையவற்றையு முடன்
கொண்டது. கொள்வதற்கு - ஒப்புக்கொள்வதற்கு.
இசைந்தருள்
செய்யீர் - அருள இசையாது நின்றீர்.
நலங்கொள்
கோவணம் - நீர் ஒப்பும்படி உமது
கோவணத்துக்கு நேராகும் நன்மை கொண்ட பிறிதொரு
கோவணத்தை. கோவணம் - கோவணத்திற்கு நேராகியதொன்று
என வருவிக்க.
நலங்கொள்
கோவணம் - நீர் ஒப்பும்படி உமது
கோவணத்துக்கு நேராகும் நன்மை கொண்ட பிறிதொரு
கோவணத்தை. கோவணம் - கோவணத்திற்கு
நேராகியதொன்று
என வருவிக்க.
செய்தீர்
- என்று பாடங் கொண்டு, இசைந்தருளினீர்; ஆயின்
அவ்வாறு நேர் காணுதற்குத் தட்டிலே யிட நீர் ஒரு கோவணம்
தரும் வகை யாது? என்றுரைப்பாரும், கோவண நேராகத் துகில்
முதலியன கொள்ள இசைந்தீர்; அவ்வாறு கோவண நேர்
நான் தரும்
வகை யாது? அதனை விவரித்தருளுக, என்றுரைப்பாருமுளர்.
அக்கோவணம் கெட்டுப் போயினமையின் அதற்கு நேர்தருதல்
எவ்வாறமையும்? என்பதை உட்கொண்டு கேட்டனர் என்பர்.
நம்பர்
- நம்பிக்கைக்குரியவர். தம்மாலியலுமாறு கோவண
நேர்பெற இசைந்தனர் என்று நம்பி நாயனார் மேலே தொடர்ந்து
சொல்லுதல் குறிப்பாம். 30
|